News December 14, 2024

திருச்செந்தூர் வரவேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்

image

கனமழை காரணமாக தென்காசி, நெல்லை, உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை, நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை பெய்து வருவதால் இன்றும், நாளையும் பக்தர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News December 14, 2024

அதிர்ஷடவசமாக தப்பிய அமைச்சர்

image

கனமழையை தாங்காமல் பாலங்களும் அடித்துச் செல்லப்படுகின்றன. காரைக்கால் திருநள்ளாறு அரசலாறு கரையோரத்தில் விரிசல் ஏற்பட்டதால் மக்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதனை பார்வையிட சென்ற புதுச்சேரி அமைச்சர் திருமுருகன், சிறு இணைப்பு பாலம் ஒன்றை கடந்து சென்றுள்ளார். அவர் சென்ற அடுத்த நிமிடம் அந்த பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. அமைச்சர் கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

News December 14, 2024

விவசாயம் படித்தவரா? மத்திய அரசில் 179 காலியிடங்கள்

image

மத்திய சேமிப்புக் கழகத்தில் (CWC) இருக்கும் 179 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், கண்காணிப்பாளர், இளைய தொழில்நுட்ப உதவியாளர் என பல இடங்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். விவசாயத்தில் பட்டப்படிப்பு முடித்த விருப்பமுள்ளவர்கள் cewacor.nic.in. தளத்தில் விண்ணப்பிக்கலாம். 12 ஜனவரி, 2025 வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹40,000 இருந்து வழங்கப்படுகிறது. SHARE IT

News December 14, 2024

இளங்கோவன் மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்

image

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்ததாகக் கூறியுள்ளார். அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது ஆன்மா இறைவனடி சேர பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

ஜெயலலிதாவையே மிரள வைத்த இளங்கோவன்

image

2002ம் ஆண்டு. அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஜெயலலிதா – சோனியா காந்தி இடையே பனிப்போர் நிலவிய காலக்கட்டம். அந்த சமயத்தில், டெல்லிக்கு சென்ற ஜெயலலிதா, அன்டோனியா அல்பினா பிரதமராக துடிப்பதாக பேசினார். அதுதான் சோனியாவின் இயற்பெயர். இந்நிலையில், அதற்கு மறுநாளே, கோமளவள்ளி (எ) அம்மு என ஜெயலலிதாவின் இயற்பெயரை கூறி ஈவிகேஎஸ் விமர்சித்தார். அதன் பிறகு, சோனியாவை விமர்சிப்பதையே ஜெ., நிறுத்திவிட்டார்.

News December 14, 2024

பெண்களே, இத கவனியுங்க…

image

பெண்களின் நலன் என்பது உடற்பயிற்சியும் சத்தான உணவும் மட்டுமல்ல. சரியான நேரத்தில் எடுக்கப்படும் உணவும் சேர்த்துதான். வேலை, குழந்தை பராமரிப்பு, இல்லக் கடமைகள் என்று இருப்பதால், பெண்களால் சரியான நேரங்களில் உணவு எடுக்க முடிவதில்லை. தாமதமாக உண்பதும் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரியான அளவில், சத்தான உணவு பெண்கள் உடல்நலம் காக்க அவசியமாகும்.

News December 14, 2024

வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட யானை மரணம்

image

கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் குற்றாலத்தில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில், எதிர்பாராதவிதமாக சிக்கிய 3 வயது யானைக்குட்டி, வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு உயிரிழந்தது. தென்காசி காட்டுப்பகுதியில் இறந்து கிடக்கும் யானைக்குட்டிக்கு பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். யானைக்குட்டியின் உடல் உப்பியிருப்பதால் 2 நாள்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

News December 14, 2024

இணையத்தை கலக்கும் விராட்- கேஎல் ராகுல் போட்டோ

image

இந்தியா-ஆஸி., அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், மழை குறுக்கிட்ட போது டீம் இந்தியா டக்அவுட்டில் ஒரு சுவாரசியமான காட்சி நடந்தது. விராட் கோலியும், கேஎல் ராகுலும் மதிய உணவு இடைவேளையின் போது இருவரும் ஒரே டிபன் பாக்ஸில் இருந்து உணவை பகிர்ந்து கொண்டனர். இந்த போட்டோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகி உள்ளது.

News December 14, 2024

அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கு; மனைவிக்கு நோட்டீஸ்

image

அதுல் சுபாஷின் மனைவி நிகிதாவின் குடும்பத்தினருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நிகிதா, அவரது தாய் நிஷா, சகோதரர் அனுராக், மாமா சுஷில் ஆகியோர் 3 நாள்களுக்குள் மாரத்தஹள்ளி காவல் நிலையத்திற்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுபாஷின் சகோதரர் பிகாஸ் அளித்த புகாரில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு மனைவி கொடுமை செய்ததாக சுபாஷ் லைவில் தற்கொலை செய்து கொண்டார்.

News December 14, 2024

எங்கும் தலைமறைவாகவில்லை: மோகன் பாபு

image

தான் தலைமறைவாகி விட்டதாக வெளியான செய்தியை மோகன் பாபு முற்றிலுமாக மறுத்துள்ளார். ‘என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. நீதிமன்றம் முன்ஜாமின் மறுக்கவில்லை. தற்போது வீட்டில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளேன். உண்மைகளை வெளிக்காட்டுமாறு மீடியாக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்று Xல் பதிவிட்டுள்ளார். செய்தியாளரை மோகன் பாபு தாக்கிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!