India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤மேஷம் – அச்சம் ➤ ரிஷபம் – சோர்வு ➤மிதுனம் – பயம் ➤கடகம் – பக்தி ➤சிம்மம் – களிப்பு ➤கன்னி – சுகம் ➤துலாம் – கவலை ➤விருச்சிகம் – வெற்றி ➤தனுசு – நன்மை ➤மகரம் – சாதனை ➤கும்பம் – லாபம் ➤மீனம் – ஜெயம்.
ஃபெஞ்சல் புயலும், அதனைத் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கிட்டதட்ட வட மாவட்டங்களே சின்னாபின்னமாகி விட்டன. குறிப்பாக, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. பல லட்சம் ஏக்கரிலான பயிர்கள் மழை வெள்ளத்தால் நாசமாகிவிட்டன. இந்நிலையில், கடலூரில் மழை சேதங்களை பார்வையிட்ட அமைச்சர் பன்னீர்செல்வம், வயலில் தேங்கியுள்ள நீர் வடிந்த பிறகு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
வெறும் 10 ரூபாயில் நமது அன்புக்குரிய தாத்தா, பாட்டிகளை ஆரோக்கியமாக வாழ வைக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். காலை, மாலை என ஒருநாளைக்கு 2 பலூன்களை ஊதி பேரக்குழந்தைகளுக்கு கொடுக்கச் சொல்லுங்கள். இது ஒரு நாளைக்கு 200மீட்டர் நடப்பதற்கு சமமானது எனக் கூறுகின்றனர். இதயம், நுரையீரலுக்கான சிறந்த உடற்பயிற்சி இதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை எனவும் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தலைவலி, காய்ச்சல் என்றதும் உடனடியாக பாராசிட்டமால் மாத்திரைகள் உட்கொள்வோர் ஏராளம். பாராசிட்டமால் மாத்திரையை 65 வயதிற்கு மேற்பட்டோர் அடிக்கடி பயன்படுத்தினால், மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயதானோர் இந்த மாத்திரையை அடிக்கடி எடுத்துக்கொள்வதால், சிறுநீரக பாதிப்பு 19%, மாரடைப்பு 9%, உயர் ரத்த அழுத்தம் 7% அதிகரிக்க காரணமாக இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடியால் ஊழலை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து விவாதித்திருக்க வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் பிரதமர் புதிதாக ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவரது பேச்சு சலிப்பை ஏற்படுத்தியதாகவும் பிரியங்கா கூறியுள்ளார். அரசியலமைப்பின் மீதான இன்றைய விவாதத்தில் காங்கிரஸை பிரதமர் கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் தினசரி எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள்? பொழுதுபோக்கு, வீடு பராமரிப்புக்கு, குடும்பத்தினர், நண்பர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்? இந்த நேரத்தை, நீங்கள் உங்கள் கணவன் (அ) மனைவியுடன் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுங்கள். சமநிலையில் உள்ளதா? இல்லையெனில், இருவரும் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை யோசியுங்கள். உங்கள் பணி வாழ்க்கையைவிட, மண வாழ்க்கை முக்கியமானது. சரி தானே?
உலக செஸ் சாம்பியன் தமிழர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆந்திரா DY CM பவன் கல்யாண், அவரை தெலுங்கு சிறுவன் எனக் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ஏற்கனவே செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டர் உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றவர் குகேஷ். அப்போதெல்லாம் அவரை யாரும் தெலுங்கர் எனக் கூறவில்லை. ஆனால், அவர் உலக சாம்பியன் ஆனதும் அவரை தெலுங்கர் என சொந்தம் கொண்டாடுவது நியாயமா என கேட்கின்றனர் நெட்டிசன்கள்.
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள உறவினரின் வைரக் கம்பெனியில் வேலை செய்துவந்தார் மாயூர் தரப்பரா. அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை பிடிக்கவில்லை. ஆனால், உறவினரிடம் சொல்ல பயம். இந்நிலையில், விரல் இருந்தா தானே வேலை செய்ய சொல்வீங்கன்னு தன் இடதுகையில் 4 விரல்களை துண்டித்துக் கொண்டார். ஒரு விபத்துக்குபின் விரல்கள் காணாமல் போனதாக இவர் போலீஸில் சொல்ல, CCTV உண்மையை போட்டுடைத்துவிட்டது.
அரசியலமைப்பின் 75 ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் மக்களவையில் விவாதம் நடந்து வருகிறது. அதில் பேசிய பிரதமர் மோடி, ஜனநாயகத்தை நேசிக்கும் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இது ஒரு பெருமையான தருணம் என குறிப்பிட்டார். மேலும், இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்க 370 சட்டப்பிரிவை நீக்கியதாகவும், ஆனால் இதில் கூட சிலர் விஷ கருத்துக்களை விதைத்து பிரிவினையை உருவாக்க முயற்சித்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
நடப்பாண்டில் தங்கத்தின் விலை 30% அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், இந்திய ரூபாயின் மதிப்பில், தங்கம் விலை ₹7,300ஐ எட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச உயர்வாகும். இதற்கு புவிசார் அரசியல், பங்குச்சந்தை ஏற்ற இறக்கம், அதிகரித்த முதலீடு, அமெரிக்காவின் கொள்கை முடிவு போன்றவையே காரணமெனக் கூறியுள்ளது. 2024 அக். நிலவரப்படி, RBI 77 டன் தங்கம் வாங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.