News December 15, 2024

டிசம்பர் 15: வரலாற்றில் இன்று

image

*1970 – சோவியத் யூனியனின் வெனேரா 7 விண்கலம், வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றது.
*1995 – ஈழப்போரின்போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து, திருச்சியை சேர்ந்த அப்துல் ரவூஃப் என்பவர் தீக்குளித்து இறந்தார்.
*2001 – பைசா நகரத்தில் உள்ள சாய்ந்த கோபுரம், 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
*இன்று சர்வதேச தேயிலை தினம்.

News December 15, 2024

இறுதி போட்டியில் இந்திய அணி

image

9ஆவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் அணியை இந்தியா எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2ஆவது அரையிறுதி போட்டியில் தென் கொரியாவை சீனா எதிர்கொள்கிறது. இதில் வெல்லும் அணியுடன் இறுதிப் போட்டியில் இந்திய அணி மோத உள்ளது.

News December 15, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 15, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 15, 2024

MSME நிறுவனங்களுக்கு ₹2,000 கோடி நிதி அளித்த அரசு!

image

நடப்பு நிதியாண்டில், 91 MSME தொழில் நிறுவனங்களுக்கு ₹1,964 கோடி நிதி ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே, “2020 மே மாதத்தில் ₹50,000 கோடி நிதியில் சுயசார்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் MSME நிறுவனங்களுக்கு ₹2,000 கோடி நிதி (மொத்த நிதியில் இது 4%ஆகும்) வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

News December 15, 2024

அர்ஷ்தீப் சிங்கின் ஆசையை நிறைவேற்றுமா BCCI?

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அர்ஷ்தீப் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார். 3 ஃபார்மெட்களிலும் இந்தியாவிற்காக வெற்றி ஈட்டித் தரவேண்டும் எனவும், இதைவிட தனக்கு வேறு எதுவும் பெரியது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். தனது விருப்பம் குறித்து பும்ராவிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022 ஜூலை முதல், T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அர்ஷ்தீப் விளையாடி வருகிறார்.

News December 15, 2024

தென்கொரியாவில் அடுத்து என்ன நடக்கும்?

image

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கப்பட்டதை அடுத்து அவர் மீதான விசாரணை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த 180 நாள்களுக்குள் நீதிமன்றம் இந்த மசோதாவுக்கு ஆதரவாகவோ எதிராகவோ தீர்ப்பளிக்கலாம். ஆதரவான முடிவு எடுக்கப்பட்டால் அடுத்த 60 நாள்களுக்குள் புதிய அதிபருக்கான தேர்தல் நடக்கும். அதுவரை பொறுப்பு அதிபர் ஆட்சியில் தொடர்வார்.

News December 15, 2024

POK-வை மீட்க வேண்டும்: உமர் அப்துல்லா அதிரடி

image

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க வேண்டும் என்பதுதான் தங்களுடைய நிலைப்பாடும் கூட என, J&K முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பாக். உடனான மோதல்களை பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்க்க வேண்டுமே தவிர, போர் தீர்வாகாது எனவும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கும் உண்டு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 15, 2024

விண்வெளிப் பொருளாதாரம் 3 மடங்காக உயரும்!

image

இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்கும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், “விண்வெளி, கடல் & இமயமலை வளங்கள் தொடர்பான ஆய்வுகள் இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு (8%-9%) கணிசமான அளவில் பங்களித்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது” என்றார்.

News December 15, 2024

டிரம்ப் வருகை: ஈரானை தாக்க தயாராகும் இஸ்ரேல்

image

இஸ்ரேலின் விமானப்படை மீண்டும் ஈரானின் அணு ஆயுதகிடங்குகள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் பதற்றத்தால் ஈரானின் அணு ஆயுத வளர்ச்சியை தடுக்கும் முனைப்பில் டிரம்ப்பின் “Maximum pressure 2.0” முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்று எனப்படுகிறது. பைடன் ஆட்சியில், இது போன்ற தாக்குதல்களில் இஸ்ரேல் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கபட்டிருந்தது.

error: Content is protected !!