News December 15, 2024

ஒரு கிலோ கோழிக்கறி விலை என்ன தெரியுமா?

image

சென்னையில் இன்று கோழி இறைச்சியின் விலை கிலோ ₹230 முதல் ₹280 வரை விற்பனையாகிறது. நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் நிர்ணயித்த விலையின்படி, கறிக்கோழி கிலோ ₹95ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹110ஆகவும் விற்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை சிக்கன் சாப்பிட ரெடி ஆயிட்டீங்களா?

News December 15, 2024

சந்திரபாபு பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்?

image

தமிழ் திரையுலகில் ‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்டவர் சந்திரபாபு. நடிகராக மட்டுமல்லாமல் பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடு கொண்ட அற்புதமான கலைஞர். ‘தென்னக சார்லி சாப்ளின்’ என்ற புகழ்பெற்ற இவரது பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இளையராஜா பயோபிக்கில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படம் டிராப் ஆனதாகக் கூறப்படுகிறது.

News December 15, 2024

ICUவில் சிகிச்சை பெறுகிறார் LK அத்வானி

image

பாஜக மூத்த தலைவர் LK. அத்வானிக்கு ICUவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 97 வயதாகும் அவர், உடல் நலக்குறைவால் நேற்று டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், என்ன காரணத்திற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

News December 15, 2024

BGT 3வது டெஸ்ட்: காயத்தால் வெளியேறிய சிராஜ்

image

நடைபெற்று வரும் BGT 3வது டெஸ்டில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அவருக்கு காலின் முட்டியில் ஏதோ அசவுகரியம் ஏற்பட அவர் மைதானத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். தற்போது வரை ஆஸி. அணி 94/3 ரன்களை எடுத்துள்ளது. ஸ்மித் 23(56), ஹெட் 14(15) ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். இது 2ஆம் நாள் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2024

450 மி.லிட்டருக்கு பால் பாக்கெட்டா!

image

’கிரீன் மேஜிக் ப்ளஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய பாலினை ஆவின் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 450 ml ₹25 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவினின் மற்ற பால்கள் 500 மில்லி ₹22, ₹24க்கு விற்கப்படும் நிலையில் இந்தப் பாக்கெட் மட்டும் ஏன் 450 மில்லி என்று கேள்வி எழுகிறது. ஏற்கெனவே பச்சை நிற பால் பாக்கெட் சப்ளை குறைக்கப்படுவதாக புகார் உள்ள நிலையில் ஆவின் இந்தப் பாலை அறிமுகம் செய்துள்ளது.

News December 15, 2024

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளி மண்டல சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறவுள்ளது. இது, அடுத்த இரண்டு நாள்களுக்கு மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்திற்கு பலத்த மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

News December 15, 2024

ஆண்களுக்கு நன்மை தரும் சூரியன் வழிபாடு

image

நவக்கிரகத்தின் முதற்கடவுளான சூரிய பகவானுக்கு ஞாயிறுக்கிழமை மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. காலையில் குளித்து முடித்து சூரியனை வேண்டினால் மனதில் உள்ள கவலைகளை நீங்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக நவகிரக தோஷங்கள் நீங்க, ஐஸ்வரியங்கள் பெருகிட செய்யும்.ஆண்களுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது சூரிய நமஸ்காரம். சிவன் கோயிலில் நவகிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சூரியனை வணங்கலாம்.

News December 15, 2024

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாளை தாக்கல்

image

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நாளை (16.12.2024) தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி ஆகிய தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த ஆய்வை ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அளித்தது. அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், மசோதாவாக நாளை தாக்கல் ஆகிறது.

News December 15, 2024

விவசாயிகளுக்கான கடன் வரம்பு உயர்வு

image

சிறு, குறு விவசாயிகளை ஆதரிக்கும் வகையில், பிணையின்றி வழங்கப்படும் விவசாயக் கடனுக்கான உச்சவரம்பை ₹1.60 லட்சத்தில் இருந்து ₹2 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 86%-க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பலனடைவார்கள் என வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News December 15, 2024

இன்று வருகிறது மகளிர் உரிமைத் தொகை

image

மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ₹1000ஐ சுமார் 1.6 கோடி பேருக்கு வழங்கி வருகிறது தமிழக அரசு. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் தொகை, இன்று வரவு வைக்கப்படவுள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பரிசீலித்து தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!