India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புஷ்பா 2 படத்தில் இடம்பெற்றிருந்த “கிஸிக்” பாட்டின் மூலம், இந்தியா முழுவதும் ட்ரெண்ட்டாகி விட்டார் ஸ்ரீலீலா. “கிஸிக்” லீலா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர், இன்னும் கொஞ்ச நாள்களில் தமிழ் திரையிலும் ரசிகர்களை கவரப்போகிறார். சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். ‘குறிச்சி மடதொபெட்டி’ பாட்டு போல தமிழிலும் ஒரு சம்பவத்தை செய்வாரா “கிஸிக்” லீலா?
நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக MH மாநில அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. நாக்பூரில் நடக்கும் விழாவில் பாஜகவில் 20 – 21, சிவசேனாவில் 10 – 12, என்சிபியில் -10 பேர் என சுமார் 40 பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், யார் யாருக்கு என்ன இலாகா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. Dy CM ஏக்நாத் ஷிண்டே உள்துறையை தனக்கு ஒதுக்க வேண்டும் எனக் கறாராகக் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில், அவரது மனைவி நிகிதா, மாமியார், மனைவியின் சகோதரரைப் KA போலீசார் கைது செய்துள்ளனர். போலி வரதட்சணை கொடுமை கேஸ் கொடுத்துள்ளதாக மனம் நொந்த சுபாஷ், 24 பக்க லட்டர் எழுதிவைத்துவிட்டு லைவில் தற்கொலை செய்துகொண்டார். சுபாஷின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் மாரத்தள்ளி போலீசார் மூவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுபாஷுக்கு நீதி கிடைக்கச் செய்வோம் என KA போலீஸ் கூறியிருந்தது.
இந்தியாவை தங்களது விருப்பமான நாடுகளின் பட்டியலில் இருந்து ஸ்விட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதனால், அங்கு வணிகம் மேற்கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்கள் கூடுதலாக 5% வரி செலுத்தும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. ஸ்விட்சர்லாந்தின் வணிக நிறுவனமான ‘நெஸ்லே’-வின் மேகி நூடுல்ஸுக்கு 2015ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், கோபத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்து தற்போது இந்த வேலையை பார்த்துள்ளது.
பைக்கில் சென்று கொண்டிருந்த மயக்கமடைந்த நிலையில், தனது 4 விரல்களை வெட்டப்பட்டதாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். குஜராத்தில் மயூர் தர்பரா(32) என்பவரின் புகாரில் சந்தேகமடைந்த போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. தன் உறவினர் நிறுவனத்தில் கணினி ஆபரேட்டர் பணியாற்றி வந்தவருக்கு, அவ்வேலை பிடிக்காததால் அவரே விரலை வெட்டியுள்ளார். வேலை பிடிக்கவில்லை, நீங்கள் என்ன பண்ணுவீங்க?
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ₹5.90ஆக உள்ளது. இது வரலாற்று உச்சமாகும். 15 நாள்களுக்கும் முன்பு வரை ₹4.40க்கு விற்கப்பட்ட முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது வியாபாரிகளுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. இதனால், முட்டை ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னையில் ஒரு முட்டையின் விலை ₹8 வரைக்கும் விற்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தில் நன்மைகள் இருக்கும் போதிலும், அதனால் உடலுக்கு சில சிக்கல்கள் உண்டாகும். ஒரு நாளைக்கு 3, 4 வாழைப்பழத்தை எடுத்து கொள்வது உடல் எடை அதிகரிக்கும். காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்ணும் போது, அசிடிட்டி, வாயு தொந்தரவு ஏற்படலாம். கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் சூழலில், செரிமான பிரச்னைகள் உண்டாகலாம். அதே போல, ஒரு நாளைக்கு ஒரு பழம் எடுத்துக்கொள்வது நல்லது.
நடப்பு BGT தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதில், ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் ஸ்டைல் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. பும்ரா வீசிய பந்தை ஸ்மித் அடிக்காமல் விட்டுவிட, அது கீப்பரின் கைகளில் தஞ்சம் புகுந்தது. அப்போது ஸ்மித்தின் உடல் மொழியை சைடு கேமரா பதிவு செய்துள்ளது. அவர் பேட்டிங்கில் எப்படி வித்தை காட்டுறார் பாருங்க.
EPS பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் அதிமுகவின் இரண்டாவது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது. காலை 10.35 மணிக்கு சென்னை வானகரத்தில் கூடும் கூட்டத்தில் சுமார் 3,500 நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். விஜய்யின் அரசியல் என்ட்ரிக்குப் பின் கூடும் கூட்டம் என்பதால் EPS என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உலகிலேயே சிறந்த உணவுகளைக் கொண்ட இடங்களின் டாப் 100 பட்டியலில் தென்னிந்திய உணவுகளுக்கு 59ஆவது இடம் கிடைத்துள்ளது. Taste Atlas நடத்திய சர்வேயில் இத்தாலியில் உள்ள கம்பானியா பகுதியின் உணவு முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப்பின் உணவுகள் 7ஆவது இடத்தையும், மகாராஷ்டிரா உணவுகள் 41ஆவது இடத்தையும், மேற்கு வங்கத்தின் உணவுகள் 54ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.
Sorry, no posts matched your criteria.