News December 15, 2024

₹78 ஆயிரம் சம்பளம்: மத்திய அரசில் 152 காலியிடங்கள்

image

மத்திய அரசின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருக்கும் 152 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்ட விஞ்ஞானிகள், திட்ட தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். ₹20 ஆயிரம் – ₹78 ஆயிரம் வரை சம்பளம். விண்ணப்பிக்க கடைசி நாள் 23/12/24. முழு விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை பார்க்கவும். https://www.niot.res.in/recruitment_details.php.

News December 15, 2024

இரண்டாவது நாளாக முதல்வர் அஞ்சலி

image

மறைந்த காங்கிரஸ் MLA ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக அஞ்சலி செலுத்தினார். நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்த EVKSஇன் உடல் மணப்பாக்கம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை மீண்டும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மாலை அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

News December 15, 2024

ஃபார்முலா 4 கார் ரேஸ், பேனா சின்னத்திற்கு வீண் செலவு!

image

ஃபார்முலா 4 கார் ரேஸ், கலைஞர் பேனா நினைவுச் சின்னம் உள்ளிட்டவற்றிற்காக திமுக அரசு, நிதியை வீணடிப்பதாக அதிமுக பொதுக்குழு – செயற்குழுவில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக அரசு கபட நாடகமாடுவதாகவும், சட்ட ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்புக்கு கண்டனம் உள்ளிட்ட 16 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

News December 15, 2024

ஜெயம் ரவிக்கு ஜோடியான தமிழக டிஜிபி மகள்

image

சினிமாவில் ஹீரோயினாக கால்பதிக்க ஆர்வமாக இருந்த தவ்தி ஜிவால் ஜெயம் ரவியின் 34வது படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இவர் முன்னரே கவுதம் வாசுதேவ் மேனனின் எரிமலையின் மகளே என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் இவர் நடிக்கும் படத்தை டாடா இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்க, சக்தி வில்லனாக நடிக்கிறார். படத்தின் தொடக்க பூஜை நேற்று நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஹிட் பட நடிகையாவாரா?

News December 15, 2024

₹11 கோடி வென்ற குகேஷிற்கு எவ்வளவு வரி தெரியுமா?

image

நாட்டில் வரிகள் அதிகளவில் இருப்பதாக விமர்சனங்கள் இருக்கும் சூழலில் ₹11 கோடி பரிசாக வென்றுள்ள உலக செஸ் சாம்பியன் குகேஷ் எவ்வளவு வரி என பார்த்தால் சற்று நெஞ்சு வலிக்கிறது. வருமான வரி 87A கீழ் ₹3.28 கோடியும், கூடுதல் கட்டணமாக ₹1.21 கோடியும், சுகாதாரம், கல்வி cess வரியாக ₹17.98 லட்சம் என மொத்தமாக ₹4.67 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்படும். இதில், மொத்த பரிசில் 42% ஆகும். என்னங்க சார் உங்க சட்டம்?

News December 15, 2024

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா நாளை தாக்கல் ஆகாது

image

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படவில்லை. குளிர்காலக் கூட்டத்தொடரின் டிச. 16ஆம் தேதிக்கான நிகழ்ச்சி நிரலில் இம்மசோதா இடம்பெற்றிருந்தது. ஆனால், திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இம்மசோதா இடம்பெறவில்லை. முன்னதாக, இம்மசோதாவிற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

News December 15, 2024

அதிமுக பொதுக்குழுவில் என்னென்னெ தீர்மானங்கள்?

image

சென்னையில் நடக்கும் ADMK பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் மெத்தனத்திற்குக் கண்டனம், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றம், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும், 2026இல் EPS மீண்டும் முதல்வராக்குவது உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

News December 15, 2024

ஹனிமூன் சென்று திரும்பிய இளம் ஜோடி பலி

image

இல்லற வாழ்க்கையை தொடங்கும் முன்பே விபத்தில் இளம் ஜோடியின் உயிர் பிரிந்தது. கேரளாவைச் சேர்ந்த நிகில்(27), அனு(26) கடந்த 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு மலேசியாவுக்கு ஹனிமூனுக்கு சென்றனர். இன்று காலை அவர்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில், பத்தனம்திட்டா அருகே அவர்கள் சென்ற கார், சபரிமலை பக்தர்களின் பேருந்து மீது மோதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில், இளம் ஜோடி உட்பட காரில் சென்ற 4 பேர் உயிரிழந்தனர்.

News December 15, 2024

பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையின் உடல் தானம்

image

குழந்தை இறப்பது என்பது பெரிய கொடுமை. இருந்தபோதும் குழந்தையின் உடலை தானம் செய்து அவளை எப்போதும் வாழ செய்த நெகிழ்ச்சி சம்பவம் டேராடூனில் நடந்துள்ளது. பிறந்து 2.5 நாளே ஆன பெண் குழந்தை இருதய கோளாறால் உயிரிழந்தது. சரஸ்வதி எனப் பெயரிடப்பட்ட குழந்தையின் உடல் டேராடூன் மருத்துவ கல்லூரிக்கு தானமாக உத்தராகண்டைச் சேர்ந்த பெற்றோர் வழங்கியுள்ளனர்.

News December 15, 2024

₹1000 கிடைப்பதில் தாமதம்

image

மகளிர் உரிமைத் தொகை ₹1000 மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிகளில் செலுத்தப்படும் உரிமைத் தொகை, வழக்கமாக 14ஆம் தேதி மாலையே வரவு வைக்கப்படும். ஆனால், இந்த மாதம் வர வேண்டிய தொகை இன்னும் வராததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதற்கான காரணம் எதையும் அரசு தெரியப்படுத்தவில்லை.

error: Content is protected !!