News December 15, 2024

ஹெட், ஸ்மித் அதிரடியால் 405 ரன்களை குவித்த ஆஸி.

image

பார்டர் கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட்டின் 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி., அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 405 ரன்களை குவித்துள்ளது. மிட்செல் ஸ்டார்க் 7 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். AUS அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 101 ரன்களையும் எடுத்துள்ளனர். இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

News December 15, 2024

நீங்கள் மேக்கப்பை விரும்புவரா…?

image

முகத்தை பொலிவாக காட்ட பவுண்டேஷன் அவசியமானதாக இருக்கிறது. நேர்த்தி குறைவான சருமமாக இருந்தால் உங்களுக்கு பவுண்டேஷன் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. வெளியில் போகும் போது, வியர்வை, ஈரப்பதம் பவுண்டேஷனை பாதிக்காமல் இருக்க பவுடர் கொண்டு டச்சப் செய்யுங்கள். கண் இமைகள் பொலிவுடன் இருக்க மஸ்காரா பயன்படுத்தலாம். 4 மணி நேரத்திற்கு ஒரு முறை லிப்ஸ்டிக் மாற்றலாம். உங்களுக்கு தெரிஞ்ச சிம்பிள் டிப்ஸ் சொல்லுங்க?

News December 15, 2024

அதிமுகவுக்கு திமுக அரசு நெருக்கடி: இபிஎஸ்

image

அதிமுகவின் பலத்தை கண்டு திமுக பயப்படுவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தராமல் திமுக அரசு நெருக்கடி கொடுத்ததாகவும், நெருக்கடியிலும் அதிமுக வளரும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், திமுக அரசின் அவலங்களை வெளிப்படுத்தினால் அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதியப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

News December 15, 2024

2021இல் அதிமுக ஆட்சியை இழக்க காரணம் என்ன?

image

2021 தேர்தலில் 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், திமுகவிடம் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அதிமுக இழந்துவிட்டதாக இபிஎஸ் கூறியுள்ளார். பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், 43 தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்ததாகவும், திமுக பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News December 15, 2024

₹223 லட்சம் கோடிக்கு UPI பரிவர்த்தனை

image

காசு கண்ணாலே பார்த்தே ரொம்ப நாளாச்சா? அதுக்கு காரணம் இந்த UPI தான். டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு உதவும் UPI மூலம் இந்தாண்டு ஜன. முதல் நவ. வரை 15,547 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. நிதி அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், ஒட்டுமொத்தமாக ரூ.223 லட்சம் கோடிக்கு இந்த பரிவர்த்தனைகள் நடந்ததாக தெரிகிறது. UAE, சிங்கப்பூர், பூடான் உள்ளிட்ட 7 நாடுகளில் நம் UPI பயன்படுத்த முடிகிறதாம்.

News December 15, 2024

மகளிர் உதவித் தொகை வந்து சேர்ந்தது

image

இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ₹1000 வங்கிக் கணக்குகளில் வரத் தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் இந்தத் தொகை இன்று காலை தாமதமானதால் மக்கள் பொறுமையிழந்தனர். இதனையடுத்து, தற்போது ஒவ்வொரு கணக்குகளிலும் ₹1000 வரத் தொடங்கியிருக்கிறது. உங்களுக்கு வந்திருச்சானு செக் பண்ணுங்க.

News December 15, 2024

இது என்னடா காங்கிரசுக்கு வந்த புது சோதனை!

image

‘INDIA’ கூட்டணி தலைமையை காங்கிரஸ் நிரூபிக்க வேண்டும் என JK முதல்வர் உமர் அப்துல்லா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மம்தா பானர்ஜி தலைமையேற்கத் தயார் எனக் கூறினார். அதற்கு, சரத் பவார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தியா கூட்டணியில் சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது அதனைக் களைத்து, INC தலைமையை நிரூபிக்க வேண்டும் என உமர் கூறியுள்ளார்.

News December 15, 2024

530 நீதிபதிகள் உயர் வகுப்பினர்

image

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 2018ஆம் ஆண்டு முதல் 684 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 530 பேர் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 82 பேர், சிறுபான்மையினர் 37 பேர், பட்டியலின வகுப்பினர் 21 பேர், பழங்குடியின வகுப்பினர் 14 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளதாக மக்களவையில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News December 15, 2024

₹2,000 கோடி வசூலை நோக்கி ‘புஷ்பா 2’

image

‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த 10 நாள்களில் ₹1,190 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் மட்டும் ₹800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான இப்படத்திற்கு தென்னிந்தியாவை விட வட இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் மொத்த வசூல் ₹2,000 கோடியை தாண்டுமா?

News December 15, 2024

அதிமுக கூட்டணியமைப்பது உறுதி

image

2026ஆம் ஆண்டு தேர்தலை அதிமுக கூட்டணியமைத்து போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தின்போது பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “கூட்டணி நிச்சயம் அமையும். அதனை எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார்” என்றார். மேலும், அதிமுகவின் பலம் திமுகவுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!