India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகிய நிலையில், திருமாவளவனுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கட்சியிலிருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளேன். அரசியல் களத்தில் என்னை களமாடச் செய்த விசிக தோழர்களுக்கு எனது நன்றிகள். எனது நியாயமான கோபங்கள் கூட விவாதப்பொருளாவதை நான் விரும்பவில்லை. எளிய மக்களை நோக்கிய எனது அரசியல் பயணம் உங்கள் வாழ்த்துகளுடன் தொடரும் எனக் கூறியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி என்ற ரீதியில் முன்னாள் பிரதமர் நேருவின் மாடல் தோல்வியடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேருவின் வெளியுறவுக் கொள்கை காலாவதியாகிவிட்டதாவும், அதை 2014 முதல் மத்திய அரசு சரிசெய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஃபெயிலியரான மாடலை தொடர வேண்டும் என சில பிரிவினர் வலியுறுத்தி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
விசிகவில் இருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் தனது அரசியல் பயணம் தொடரும் எனவும், வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா மறைமுக செயல்திட்டத்துடன் செயல்படுவதாக தோன்றுவதாக திருமா இன்று கூறிய நிலையில், கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
பாலிவுட் சினிமாவை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். புஷ்பா உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் வெற்றி பெறுவதற்கு, அது மக்களின் எதார்த்த வாழ்வியலை மையப்படுத்தியதாக இருப்பதுதான் காரணம் எனவும், பாலிவுட் படங்கள் கிளாமர் மற்றும் போலித்தனமான கதையம்சங்களில் சிக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தி படங்களை காட்டிலும், தென்னிந்திய படங்களே பாலிவுட்டில் அதிக வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் அருகே 2 பெண் குழந்தைகளை நிர்கதியாக தவிக்க விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவரிடம் வீடியோ காலில் பேசி விட்டு, மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி மறைவை அறிந்த கணவனும் சிங்கப்பூரிலேயே தற்கொலை செய்துகொண்டார். இருவரும் தொடர்ந்து சண்டையிட்டு வந்த நிலையில், உயிரை மாய்த்துக் கொண்டனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் என PMK நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தான் எழுதிய ‘போர்கள் ஓய்வதில்லை’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் எங்கும் நீக்கமற கஞ்சா நிறைந்துள்ளது என குற்றஞ்சாட்டினார். எதிர்கால இளைஞர்களை காக்க ஒரு சொட்டு மது இல்லை, என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தாஜ்மகாலைக் கட்டியவர்களின் கைகளை அப்போதைய ஆட்சியாளர்கள் வெட்டியதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், “ராமர் கோயில் திறப்பு விழா அன்று கோவில் கட்டிய தொழிலாளர்கள் மீது பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செய்தார். பாஜக தலைமையிலான இன்றைய இந்தியா தனது தொழிலாளர் சக்தியை பாதுகாத்து வருகிறது” என பெருமிதமாக கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக ரன் அடிப்பது மகிழ்ச்சியளிக்கிறதென AUS அணியின் வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். BGT 3வது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 152 ரன்கள் எடுத்த மகிழ்ச்சியில் பேசிய அவர், “பும்ராவின் சிறந்த பந்துகளை சமாளித்தது என் அதிர்ஷ்டம். அவர் சிறந்த பவுன்சர்களை வீசினார். விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துகளை வீசும் அவருக்கு எதிராக நேர்மறையான மனநிலையுடன் விளையாடினாலே போதும்” என்றார்.
அதிமுகவில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என அக்கட்சியின் எம்.பி., CV சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார். வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “நூறு கருணாநிதி வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவை அழித்துவிடலாம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். துரோகிகளால் ஏற்பட்ட பல இன்னல்களை முறியடித்த EPS அதிமுகவை மீண்டும் அரியணையில் அமர வைப்பார்” என்றார்.
பிப்ரவரியில் நடைபெறவுள்ள டெல்லி சட்டசபை தேர்தலுக்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை AAP வெளியிட்டுள்ளது. 38 வேட்பாளர்கள் அடங்கிய இப்பட்டியலில் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும், முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 20 சிட்டிங் MLA-க்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. மணீஷ் சிசோடியா உள்பட பலர் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.