India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆவின் புதிதாக அறிமுகப்படுத்திய மேஜிக் பிளஸ் பால் பாக்கெட் நூதன மோசடி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 500 மி.லி பால் பாக்கெட் அளவை 450 மி.லி ஆக குறைத்து சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி விலையை ரூ.44-லிருந்து ரூ.55 ஆக உயர்த்தியதாகவும் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் பால், பால் பொருட்களின் விலையை ஆண்டுக்கு 2 முறை உயர்த்துவது உற்பத்தியாளர்களுக்கு செய்யும் துரோகம் எனவும் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவின் ஆளும் மகாயுதி கூட்டணியின் 39 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பாஜக தரப்பில் 19, சிவசேனா (ஷிண்டே) 11, NCPயில் 9 பேரும் பொறுப்பேற்றனர். இவர்களுக்கான துறைகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை. வருவாய், கல்வி, மின்சாரம், பாசனம் ஆகிய துறைகளை பாஜகவிற்கும், நிதி, கூட்டுறவு, விவசாயம், விளையாட்டு துறைகள் NCPக்கும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா உள்துறையை குறிவைத்துள்ளது.
ஆண்டனி தட்டில் என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 12ஆம் தேதி இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதில், கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை, கீர்த்தி தனது X-பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமண மேடையில் லிப் லாக் அடித்து கணவர் மீதான அன்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து நிரந்தரமாக விலகியது, மற்றவர்களுக்கு ஷாக் ஆக இருந்ததோ இல்லையோ, திருமாவுக்கு நிச்சயமாக இருந்திருக்காது. விசிகவில் இருந்து ஆதவ் விலகப் போவதற்கான சமிக்ஞை திருமாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதனால்தான், ஆதவ் அர்ஜுனாவுக்கு வேறொரு செயல்திட்டம் இருப்பதாக திருமா இன்று காலையிலேயே கூறிவிட்டார். அவர் கூறிய சில மணிநேரங்களிலேயே ஆதவ், கட்சியிலிருந்து விலகி விட்டார்.
ஆதவ் அர்ஜுனா விசிகவுக்குள் வந்தபோது, உடனடியாக துணைப் பொதுச் செயலாளர் என்ற பெரிய பொறுப்பை திருமா வழங்கினார். இதுவே கட்சியில் இருந்த பலருக்கும் புகைச்சலை கிளப்பிய நிலையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்றவர், திடீரென மன்னராட்சி என திமுகவை தாக்கியது, கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியது. முரண்பாடு முற்றிவிட்ட நிலையில் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
தமிழகத்தில் நாளை மயிலாடுதுறை, திருவாரூர், நாகைப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் நள்ளிரவு கனமழை பெய்யும் பட்சத்தில், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இம்மாவட்டங்களில் வரும் 17ஆம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மன்னராட்சி நடப்பதாக சொன்ன ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு திமுகவில் இருந்து எழுந்த எதிர்ப்பைவிட, விசிகவில் இருந்து எழுந்த எதிர்ப்பு கடுமையாக இருந்தது. கூட்டணியில் இருப்பதால், இதை ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், கொள்கை அளவில்கூட அதை பற்றி பேசுவதை விசிக தவிர்ப்பது ஏன் எனவும், விசிக மூத்த தலைவர்கள், தங்கள் கட்சியைவிட திமுகவுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் பலரும் விமர்சிக்கின்றனர்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் நடித்து வரும் 3 கதாபாத்திரங்களின் கெட்டப் லுக் என ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. Clean Shave-ல் இருப்பது ‘குட்’ கேரக்டரின் கெட்டப் எனவும், கையில் டாட்டூவுடன் இருக்கும் கெட்டப் ‘பேட்’ கேரக்டர் எனவும், கோட் சூட்டுடன் பெப்பர் சால்ட் லுக்கில் சிரித்தவாறு இருக்கும் லுக் ‘அக்லி’ கேரக்டருக்கான கெட்டப் எனவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற ஆதவ் அர்ஜுனாவின் முழக்கம் விசிகவின் கொள்கை தான் என்றாலும், தேர்தல் கூட்டணிக்குள் சிக்கிய அக்கட்சியால், அதை உயர்த்திப் பிடிக்க முடியவில்லை. மேலும், கட்சிக்குள் நீண்டகாலம் இருப்பவர்களே அமைதியாக இருக்கும்போது, மன்னராட்சி என்றெல்லாம் இவர் நேரடியாக பேசுவது பலருக்கும் பிடிக்கவில்லை. இதனால், திருமாவால் அனைத்து தரப்பையும் சமாதானப்படுத்த முடியவில்லை.
2025ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா பயணிக்கலாம். முன்னதாக, கடந்த ஜூன் மாதம், ரஷ்யாவும் இந்தியாவும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தம் குறித்து ஆலோசித்தது. ரஷ்யாவிற்கு செல்லும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2023-ல் 60,000க்கும் மேற்பட்ட இந்திய பயணிகள் ரஷ்யாவிற்கு சென்றுள்ளனர். இது 2022 உடன் ஒப்பிடுகையில் 26% அதிகம்.
Sorry, no posts matched your criteria.