India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘சூர்யா 45’ படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்து நடிக்கவுள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ள தாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும். மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்கிற சர்வாதிகார மனநிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை பாஜக அரசு கொண்டுவர பார்க்கிறது” என்றார்.
ஜாகிர் உசேனின் தந்தையின் பிரபல இசைக் கலைஞராக இருந்தவர். 3 வயதிலேயே தந்தையிடம் மிருதங்கம் கற்றுக்கொள்ள தொடங்கிய ஜாகிர், 12 வயதிலேயே பெரிய இந்துஸ்தானி மேதைகளுக்கு தபேலா வாசிக்க தொடங்கினார். பீட்டில்ஸ் உள்பட பிரபல மேற்கத்திய இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இந்த ஆண்டில் 66வது கிராமி விருதுகளில், ஒரே இரவில் 3 விருதுகள் வென்று வரலாறு படைத்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம் கட்சி நடைமுறைக்கு ஏற்புடையதாக இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். எவ்வளவு ஆற்றல் பெற்றவராக இருந்தாலும், கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், <<14889338>>ஆதவ்வை<<>> நீக்க வேண்டுமென்பது தங்கள் நோக்கமில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், அமைப்புக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமே தவிர, அவசரம் கூடாது என்றும் கூறியுள்ளார்.
உலக அளவில் அறியப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய தபேலா இசைக் கலைஞர், ஜாகிர் ஹுசேன் ஆவார். கம்போசர், பெர்குஷனிஸ்ட், நடிகர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட கலைஞரான இவர், கிராமி விருது வென்றவர். இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது. இந்துஸ்தானி, ஃபியூஷன் என ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவரது மனைவி அண்டோனியா கதக் நடனக் கலைஞர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு பரிசுத்தொகையாக ₹11.45 கோடி கிடைத்துள்ளது. ஆனால் பணத்திற்காக தான் செஸ் விளையாடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் அருமையான பொம்மையாக செஸ் போர்டு தோன்றியதில் இருந்து, அது தரும் அளவற்ற மகிழ்ச்சிக்காகவே தொடர்ந்து விளையாடிவருவதாக கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு முறை விளையாடும்போது, அது பற்றி புதிய விஷயத்தை கற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் (73) இன்று காலமானார். இதயம் தொடர்பான பிரச்னையால் அமெரிக்காவில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜாகிர் உசேன் மறைவால் இந்திய திரையுலகமும், உலக அளவிலான இசை ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்துஸ்தானி இசைக்கலைஞரான ஜாகிர் உசேன், பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அனுர குமார திசநாயகா, இந்தியா வருகை தந்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவரை, மத்திய அமைச்சர் எல். முருகன் வரவேற்றார். பிரதமர் மோடியை அவர் நாளை சந்தித்து பேசவுள்ளதாக தெரிகிறது. இருநாட்டு பொருளாதாரம், தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய களம் இறங்கிய உடன் ரோகித் சர்மா, பும்ராவை பந்துவீச அழைத்திருக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், BGT பிரிஸ்பேன் டெஸ்டில் ஹெட் பேட்டிங் செய்ய உள்ளே வந்த பொழுதே இந்தியா சிறப்பாக செய்திருக்கலாம். பும்ரா, ஹெட்டுக்கு எதிராக தொடக்கத்திலேயே சில ஓவர்கள் பந்துவீசி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்றார்.
திமுக அமைச்சர்கள் மகாராஜா மனப்பான்மையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், “திமுக அரசு பல துறைகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. மத்திய அரசை எதிர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அமைச்சர்கள் செல்லும்போது மக்கள் வெளிப்படுத்தும் கோபம் வெறும் 5% மட்டுமே. இந்த ஆட்சியை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள்” என்றார்.
Sorry, no posts matched your criteria.