News December 16, 2024

அமெரிக்க ஏற்றுமதி ₹6.55 லட்சம் கோடியாக உயர்வு!

image

2023-24ஆம் நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, ₹6.55 லட்சம் கோடியை எட்டியதாக, Bank of Baroda தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், கடந்த 30 ஆண்டுகளாக அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி, 10% ஆண்டு கூட்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏற்றுமதியில் மருந்துகள், விலையுயர்ந்த கற்கள், பெட்ரோலிய பொருட்கள், தொலைதொடர்பு கருவி உள்ளிட்டவை 40% பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 16, 2024

ஆதலால் காதல் செய்வீர்..!

image

ரஷ்யாவில் கடந்த 2012ஆம் ஆண்டு தாய்களை இழந்த போரிஸ், ஸ்வெட்லயா என்ற 2 புலிக்குட்டிகளை ஆராய்ச்சியாளர்கள் எடுத்து வளர்த்து வந்துள்ளனர். இளம் வயது வந்த உடன் புலிகளை தனித்தனியாக காட்டுக்குள் விட்டுள்ளனர். தனிமையில் அவதிபட்ட போரிஸ், ஸ்வெட்லயாவைத் தேடி பெரும் பயணம் மேற்கொண்டது. பல தடைகளைத் தாண்டி 200 கி.மீ.களை கடந்து தன் இணையை கண்டுபிடித்துள்ளது. இப்போது அவர்களுக்கு ஒரு குட்டியும் பிறந்துள்ளது.

News December 16, 2024

ஆதவ் உடனே சாதிக்க துடிக்கிறார்: திருமா

image

ஆதவ் அர்ஜுனாவிற்கு ஆர்வம் அதிகமாக இருப்பதால், உடனே சாதிக்க துடிப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். விளிம்பு நிலை மக்கள் நலனுக்கு போராட வேண்டும், பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என்ற அவரது எண்ணங்கள் வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், அமைப்பின் நடைமுறையை உள்வாங்காமல் அவசரம் காட்டியதாக திருமா தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு பக்குவம் அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 16, 2024

மோடி தூங்கும் நேரம்.. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

image

பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் அளித்த பேட்டியொன்றில் பிரதமர் மோடி பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், சமீபத்தில் பிரதமரை சந்திக்க மனைவி கரீனாவுடன் போயிருந்தேன். அவர் அப்போதுதான் நாடாளுமன்றம் முடிந்து வந்தார். ஆனால், பார்க்க மிகவும் உற்சாகமாக இருந்தார். அவரிடம் நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குவீர்கள் என்று கேட்டேன். அதற்கு 3 மணிநேரம் என்றார். நான் அதிர்ந்துவிட்டேன் எனக் கூறினார்.

News December 16, 2024

இன்றுதான் கடைசி பவுர்ணமி நிலவு: மிஸ் பண்ணிராதீங்க!

image

நடப்பாண்டு முடிந்து 2025 புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கப் போகிறோம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கடைசி பவுர்ணமி முழு நிலவை இன்றுதான் பார்க்க முடியும். இது இந்துக்களுக்கு விசேஷமான நாளாகும். அதேபோல, பிரிட்டன், அயர்லாந்து, நார்வே, ஐஸ்லேண்ட் உள்ளிட்ட நாடுகளில் அடுத்து வரவுள்ள உறைபனிக் காலத்தை குறிக்கும் வகையில் இந்த முழு நிலவு தோன்றுவதாக கருதப்படுவதால் இதனை COLD MOON என அழைக்கிறார்கள்.

News December 16, 2024

SMAT கோப்பையை வென்றது மும்பை அணி!

image

17ஆவது சையத் முஷ்டாக் அலி T20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றுள்ளது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ம.பி., 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட மும்பை அணி 17.5 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2ஆவது முறையாக கோப்பையை வென்றது.

News December 16, 2024

பெற்றோர்களே.. ‘3 ஜாடி டெக்னிக்’ ரொம்ப முக்கியம்!

image

அமெரிக்க நிதி ஆலோசகராக உள்ள டேவ் ராம்சே அறிமுகப்படுத்தியதுதான் இந்த 3 ஜாடி டெக்னிக். உங்கள் குழந்தைக்கு 3 ஜாடிகளை கொடுங்க. அவற்றில் சேமிப்புக்கு ஒரு ஜாடி, பிறருக்கு உதவி செய்ய ஒரு ஜாடி, செலவுக்கு ஒரு ஜாடி எனப் பிரித்து வையுங்கள். பிள்ளைகளுக்கு பணத்தை கொடுத்து அவற்றில் சேமிக்க சொல்லுங்கள். இதன் மூலம், சிறு வயதிலேயே எந்தெந்த விஷயத்திற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை பிள்ளைகள் கற்பார்களாம்.

News December 16, 2024

ராசி பலன்கள் (16-12-2024)

image

➤மேஷம் – உடல் நலனில் அக்கறை காட்டுங்கள் ➤ ரிஷபம் – பயம் கொள்ள வேண்டாம் ➤மிதுனம் – ஆசைகள் நிறைவேறும் ➤கடகம் – நம்பிக்கை அதிகரிக்கும் ➤சிம்மம் – பரிசுகள் வந்து குவியும் ➤கன்னி – தேவையில்லாத செலவுகள் ஏற்படும் ➤துலாம் – நன்மை சூழும் ➤விருச்சிகம் – வெற்றி கிட்டும் ➤தனுசு – உறவுகள் குறித்து தெளிவு பெறுவீர்கள் ➤மகரம் – மன உறுதி அடைவீர்கள் ➤கும்பம் – முயற்சியை கைவிடாதீர்கள் ➤மீனம் – அனுதாபம் கொள்வீர்கள்.

News December 16, 2024

அரசு ஹோட்டலை விலை பேசிய சர்ச்சை: விக்கி விளக்கம்

image

அரசு ஹோட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், விக்னேஷ் சிவன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தன்னுடைய ‘LIK’ படத்திற்காக ஏர்போர்ட்டில் ஷூட்டிங் எடுக்க அனுமதி கேட்க புதுச்சேரி சென்றதாகவும், அப்போது முதல்வரை சந்தித்து பேச நேர்ந்த போது, அங்கிருந்த லோக்கல் மேனேஜர் ஒருவர் அவருக்கான தேவை குறித்து கேட்டதை தான் கேட்டதாக திரித்து செய்தி பரவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 16, 2024

WPL ஏலத்தில் கலக்கிய வீராங்கனைகள்

image

WPL 2025 தொடருக்கான ஏலத்தில் 29 சர்வதேச வீராங்கனைகள் உள்பட 120 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சிம்ரன் ஷெய்க் அதிகபட்சமாக ரூ.1.9 கோடிக்கு Gujarat Giants அணியால் வாங்கப்பட்டார். தமிழக வீராங்கனை கமலி ரூ.1.6 கோடி (MI), வெ.இண்டீஸ் வீரங்கனை டீண்ட்ரா டோட்டின் ரூ.1.7 கோடி (GG), பிரேமா ரேவந்த் ரூ.1.2 கோடி (RCB) தொகைக்கும் வாங்கப்பட்டனர். ஏலம் நிறைவடைந்ததால் விரைவில் அணிகளின் முழு விவரம் வெளியாகும்.

error: Content is protected !!