India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிளாசிக் படமான சூது கவ்வும் படத்தின் 2ஆம் பாகத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடிக்க, அவருடன் முதல் பாகத்தில் நடித்த கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் படம் வெளியானது. உங்களுக்கு படம் பிடித்திருந்ததா? முதல் பாகத்திற்கு 2ஆம் பாகமும் ஈடு கொடுத்ததா?
தமிழ்நாடு மின்சார வாரியம் தனக்கென்று புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. <
இந்திய வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ₹12 லட்சம் கோடி கடன்களை write-off செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில், சுமார் ₹6.5 லட்சம் கோடி, பொதுத்துறை வங்கிகளால் கடந்த 5 ஆண்டுகளில் write-off செய்யப்பட்டவை என்கிறது புள்ளி விவரங்கள். இவை, தள்ளுபடி செய்யப்பட்ட லோன்கள் அல்ல என்று அரசு கூறினாலும், இவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி.
கோலி, 3வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியடைய செய்துள்ளார். மீண்டும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்தை கவர் ட்ரைவ் ஆட முயன்று அவுட்டாகி இருக்கிறார். கோலி தன்னுடைய ஆட்டத்தை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்தில் உள்ளார். இது அவரது வழக்கமாகவே மாறிவிட்டது எனவும், அவர் ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
BGT தொடரின் மூன்றாவது போட்டி அவ்வப்போது மழையால் தடைபட்டு வருகிறது. மூன்றாவது நாளான இன்று இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கெனவே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணி, ஆஸி., பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் மட்டும் மூன்றாவது முறையாக போட்டியில் மழை குறுக்கிட்டுள்ளது.
தபேலா வித்வான் ஜாகிர் ஹுசேன் மறைவுக்கு நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது X பதிவில், “ஜாகிர் பாய். சீக்கிரமாக எங்களை பிரிந்துவிட்டீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். X தளத்தில் ஜாகிருக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், “உங்களை மிஸ் செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச ஐசிசி தடை விதித்துள்ளது. செப். இங்கி. கவுண்டி போட்டியில் பந்துவீசும் போது முழங்கை நீட்டிப்பு விதிமுறையான 15 டிகிரி வரம்பைத் மீறியதால், அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் தடை விதித்தது. ஐசிசியின் 11.3 விதியின் கீழ் உள்நாட்டு போட்டிகளில் தடை விதிக்கப்பட்டால், சர்வதேச போட்டிகளிலும் தடை விதிக்கப்படும். ஆனால், ஷகிப் பேட்டிங் செய்ய தடை செய்யப்படவில்லை.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத்திருத்த மசோதா அடுத்த வார இறுதியில் மக்களவையில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அலுவல் அட்டவணையில் இருந்து இம்மசோதா நீக்கப்பட்டுள்ளதால், இன்று தாக்கலாக வாய்ப்பில்லை. எனினும், சபாநாயகர் அனுமதியுடன் கடைசி நேரத்தில் துணைப் பட்டியல் மூலம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. அமளியைத் தவிர்க்க பாஜக கடைசி நேர உத்தியைப் பயன்படுத்தக் கூடும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா விரைவில் புதிய கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிக்கு எதிராக பேசியதாகக் கூறி விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், நேற்று கட்சியில் இருந்து விலகினார். அவருடைய அறிக்கையில், அரசியலில் தொடருவதாக குறிப்பிட்டிருந்த நிலையில் அவர் எந்தக் கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உங்கள் கருத்தை பதிவு பண்ணுங்க.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று இது வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், உருவாக தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தில் 3 நாள்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.