News December 16, 2024

தமிழகத்தையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு

image

1998. பிப்ரவரி 14. கோவை தொடர் குண்டுவெடிப்பால் தமிழகமே அதிர்ந்து போன தினம். இந்த குண்டுவெடிப்பில் 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவைக்கு அத்வானி வரப் போகும் சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா தான் இன்று காலமானார்.

News December 16, 2024

2025-ல் வரப்போகும் புதிய ஜெனரேஷன்

image

2025 வரப்போகுது. எது மாறுதோ இல்லையோ ஜெனரேஷன் புதிதாக மாறுகிறது. 1995-2009 வரை Gen Z,. 2010-24 வரை Gen Alpha… இந்த வரிசையில் 2025 ஜனவரி 1 முதல் பிறக்கப்போகும் குழந்தைகளின் தலைமுறை Gen Beta என அழைக்கப்படும். சுருக்கமாக Gen B. இவர்கள் வளர்ந்துவர 2040 ஆகிவிடும். அப்போது உலகத்தின் டெக்னாலஜியே தலைகீழாக மாறியிருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. நீங்க எந்த ஜெனரேஷன் என சொல்லுங்க?

News December 16, 2024

‘ஸ்டார் டிரெக்’ பட நடிகை காலமானார்

image

பிரபல ஹாலிவுட் மூத்த நடிகை ஜில் ஜேக்கப்சன்(70) காலமானார். ஹாலிவுட்டின் trendsetter படங்களான ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன், ஸ்டார் டிரெக்: டீப் ஸ்பேஸ் நைன், கேசல் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜில், ஆங்கில தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக உணவுக்குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர், சிகிச்சை பலனின்றி, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

News December 16, 2024

இனி பிச்சை போட்டால் போலீஸ் வரும்!

image

யாசகம் கேட்போரை ஒழிக்க மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் ஜன.1, 2025 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரப் போகிறது. அதன்படி இந்தூர் நகரில் இனி யாராவது யாசகர்களுக்கு பிச்சை போட்டால், உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். யாசகம் கொடுக்காமல் இருந்தால், பிச்சைக்காரர்கள் இருக்க மாட்டார்கள் என்று எண்ணி இந்த சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. இது சாத்தியமா? உங்க கருத்து?

News December 16, 2024

CM ஸ்டாலின் செயலர்களின் துறைகள் மாற்றம்

image

CM ஸ்டாலின் செயலர்களின் துறைகளை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதன்மை தனிச்செயலாளர் உமாநாத்திற்கு நிதி, மின்சாரம் உள்ளிட்ட 17 துறைகளும், 2வது தனிச்செயலாளர் சண்முகத்திற்கு கூட்டுறவு உள்ளிட்ட 16 துறைகளும், இணைச் செயலாளர் லட்சுமி்பதிக்கு சுற்றுச்சூழல், IT உள்ளிட்ட 12 துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. CMன் செயலாளர் அனுஜார்ஜ் நீண்ட விடுப்பில் செல்வதால் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

News December 16, 2024

9-12 வகுப்பு பாடப் புத்தகங்கள் விலை குறைப்பு:NCERT

image

9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் விலையை NCERT அமைப்பு குறைத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அந்த அமைப்புத் தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி, அடுத்த கல்வியாண்டு முதல் பாடப் புத்தகங்கள் விலையை 20% வரை குறைக்கப்படும் என்று தெரிவித்தார். இதுபோல விலை குறைக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் சக்லானி குறிப்பிட்டார். 1-8 வகுப்பு பாட புத்தகங்கள் விலை தலா ரூ.65 ஆகும்.

News December 16, 2024

Vi பயனர்களுக்கு GOOD NEWS: 5G சேவை அறிமுகம்

image

தனது 5G சேவையை வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 17 நகரங்களில் முதல்கட்டமாக இச்சேவை அறிமுகமாகியுள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள், 2022 முதல் படிப்படியாக 5G சேவையை தொடங்கிய நிலையில், Vi தாமதமாக இச்சேவையை தொடங்குகிறது. சென்னையில் முதற்கட்டமாக நெசப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் ₹475க்கு ரீசார்ஜ் செய்து இச்சேவையை பெறலாம்.

News December 16, 2024

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி காலமானார்

image

கோவையில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ. பாஷா உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்.ஏ. பாஷா (75) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

News December 16, 2024

ஜெஃப் பெசோஸின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

image

உலகின் No.2 பணக்காரரான ஜெஃப் பெசோஸ், ஆண்டுக்கு ரூ.67 லட்சம் மட்டுமே சம்பளமாக பெறுகிறார். 1998-ல் இருந்து அவர் சம்பளம் உயரவில்லை. ஆனால், கடந்த நிதியாண்டில் அவரது அமேசான் பங்குகள் 1 மணி நேரத்துக்கு ரூ.68 கோடி என்றளவில் உயர்ந்து வந்துள்ளது. ஏற்கெனவே கம்பெனில இருந்து கணிசமான வருமானம் வருது. இதுக்கு மேல கம்பெனில இருந்து நான் எடுக்க விரும்பல என்று ஜென்டிலாக சொல்லி இருக்கிறார்.

News December 16, 2024

ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைகிறாரா..?

image

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தவெகவில் இணையவுள்ளதாக ஒரு பேச்சு அடிபட்டு கொண்டிருக்கிறது. அவ்வாறு இணைந்தால் அவருக்கு பொருளாளர் பதவியை விஜய் வழங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே, ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணையப் போவதாக ஒருசிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா பாமக வர விரும்பினால், அதுகுறித்து பரிசீலிப்போம் என ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!