India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கேவிடம், தமிழக மீனவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதை CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறும், திசநாயக்கேவை வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளிடையே இணக்கமான எதிர்காலத்தை வளர்த்தெடுக்க, இது நல்ல தொடக்கமாக அமையும் எனவும் TN CM நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் சோதனை முறையில் சில பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், வரவேற்பை பொறுத்து விற்பனை செய்யப்படும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கிரீன் மேஜிக் பிளஸ் பால் விலை குறித்தும், அளவு குறைக்கப்பட்டு இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், அளவு குறைக்கப்படவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார்.
உங்கள் இரவு உணவை சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் நினைவில் கொள்ள வேண்டிய 5 ஆரோக்கியமான விஷயங்கள்: *உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும். *சாப்பிட்ட பின் கடுமையான உடற்பயிற்சியை தவிர்க்கவும்; மெதுவாக நடைப்பயிற்சி செய்யலாம் *புகைப்பிடிக்க கூடாது *சாப்பிட்ட பிறகு குளிப்பதை தவிர்க்கவும் *இரவு உணவுக்கு பிறகு பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள சிரிய அதிபர் ஆசாத், ஆட்சி கவிழ்ப்புக்குப்பின் முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தப்பிப்போவது தனது எண்ணமில்லை எனவும், மாஸ்கோ கேட்டுக் கொண்டதால் இடம் பெயர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது மட்டுமே தனது வழியாக இருந்ததாகவும், சிரியா மீண்டும் சுதந்திரமடையும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த கீர்த்தன் குமார், சச்சின் குமார் ஆகியோர் மசூதிக்குள் சென்று ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டதாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இருந்து அவர்களை கர்நாடகா ஐகோர்ட் விடுவித்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை இன்று விசாரித்த நீதிபதிகள், ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடுவது எப்படி கிரிமினல் குற்றமாகும் எனக் கூறி, வழக்கை ஒத்தி வைத்தனர்.
ஜார்ஜியாவில் தூங்கிக் கொண்டிருந்த 12 இந்தியர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுதோரியில் உள்ள மலைவாசஸ்தல விடுதியில் 12 பேரும் உயிரிழந்து கிடந்தனர். அவர்கள் உடலில் காயமோ, வேறு எந்த தடயமோ இல்லை. அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அருகே இருந்த மின்சார ஜெனரேட்டர் மூலம் கார்பன் மோனோக்சைட் விஷம் பரப்பப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெறுகிறது.
சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் இருக்கையில் வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லதுதான். ஆனால் சூடான நீர் அருந்துவது வாய், தொண்டை & உள்ளுறுப்பு சவ்வில் புண், கொப்பளங்கள் ஏற்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக வெந்நீர் குடிப்பது, சிறுநீரகத்தின் வேலையை அதிகரிக்கும். குறிப்பாக இரவில் படுக்கும்முன் வெந்நீர் அருந்தினால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும். எப்போதுமே, அளவான சூடு போதும்.
தி.மலையில் வெள்ளத்தில் புதிய பாலம் அடித்துச் செல்லப்பட்டது குறித்து அமைச்சர் எ.வ. வேலு கருத்து தெரிவித்துள்ளார். “வினாடிக்கு 52,000 கனஅடி நீர் வரும் என நினைத்து பாலம் கட்டும்போது, 2 லட்சம் கனஅடி வந்தால் பாலம் உடைந்துதான் போகும். இவ்வளவு தண்ணீர் வரும் எனக் கணக்கிட்டு, எல்லா பாலத்தையும் கட்ட முடியாது. அதற்கு திட்ட மதிப்பீடு அதிகமாக இருக்கும். நமது பொருளாதாரம் அந்த அளவுக்கு இல்லை” என்றார்.
நாளை (டிச.17) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறைக்கு மிக கனமழை, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 18ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு மிக கனமழையும், ராணிப்பேட்டை, தி.மலை உள்ளிட்ட 6 மாவட்டத்திற்கு கனமழையும் கணிக்கப்பட்டுள்ளது. 19ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
1998. பிப்ரவரி 14. கோவை தொடர் குண்டுவெடிப்பால் தமிழகமே அதிர்ந்து போன தினம். இந்த குண்டுவெடிப்பில் 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவைக்கு அத்வானி வரப் போகும் சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அல்-உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ. பாஷா தான் இன்று காலமானார்.
Sorry, no posts matched your criteria.