News December 17, 2024

பிரதமர் மீது அதிருப்தி: கனடா துணைப் பிரதமர் ராஜினாமா

image

கனடா நாட்டின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்நாட்டின் நிதியமைச்சராகவும் உள்ள அவர், வருடாந்திர நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன், ட்ரூடோ முடிவு மீதான அதிருப்தியில் ராஜினாமா செய்துள்ளார். கனடாவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 250 கனடா டாலர்கள் காசோலை வழங்கும் கொள்கை தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

News December 17, 2024

₹428 கோடியில் சென்னையின் நான்காவது ரயில் முனையம்

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியைப் போக்க பெரம்பூர் ரயில் நிலையத்தை நான்காவது முனையமாக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையின் இரண்டாவது முனையமாக எழும்பூரும் மூன்றாவது முனையமாக தாம்பரமும் இருந்து வருகிறது. இதனையடுத்து, நான்காவது முனையமாக பெரம்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ₹428 கோடியில் இங்கு ரயில் முனையம் அமையவுள்ளது.

News December 17, 2024

தங்கம் இறக்குமதி இதுவரை இல்லாத அளவில் உயர்வு

image

நவம்பர் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி இதுவரை இல்லாத வகையில் 331% அதிகரித்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நவம்பரில் தங்கத்தின் இறக்குமதி ₹1.25 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பரில் வெறும் ₹29,000 கோடியாக இருந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்தமாக ₹4.10 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 49% அதிகமாகும்.

News December 17, 2024

ஈரோடு களநிலவரத்தை விசாரிக்கும் விஜய்

image

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் நடப்பதால், இது ஆட்சியை எடை போடும் தேர்தலாக இருக்கும். அதனால், இப்போதே தேர்தல் பணிகளை DMK முடுக்கியுள்ளது. அதேநேரம், இடைத்தேர்தலில் தவெக போட்டியிட வேண்டும் என முன்னணி தலைவர்கள் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனால், தொகுதியின் செல்வாக்கு குறித்து அறிய அவசர சர்வே எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளாராம்.

News December 17, 2024

இளையராஜாவும் அவரது வினோத ரசிகர்களும்

image

தமிழ் திரையுலகில் இளையராஜாவுக்கு இருக்கும் ரசிகர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அவருடைய இசையில் லயித்துக் கொண்டே அவர் பேசும் விஷயங்களை தொடந்து விமர்சித்துக் கொண்டிருப்பர். அந்த வகையில், நேற்று ஆண்டாள் கோயிலில் அவருக்கு நடந்த அநீதியை முதலில் தட்டிக் கேட்டவர்கள் அவர்கள்தான். ஆனால், இளையராஜாவே அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று சொன்ன பின்பு வழக்கம்போல அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

News December 17, 2024

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமலுக்கு வந்தால் என்ன நடக்கும்

image

மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். குறிப்பாக, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த அடுத்த 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் 89,194 நகர்ப்புற உள்ளாட்சி இடங்களுக்கும், 31 லட்சத்து 89 ஆயிரம் கிராமப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். இது சாத்தியமா? கமெண்ட் பண்ணுங்க..

News December 17, 2024

நடிப்பால் நம்மை பிரமிக்க வைத்த நால்வர்!

image

இந்தாண்டு இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஹீரோக்கள் விஜய் சேதுபதி, அல்லு அர்ஜூன், விக்ரம், பிரித்வி ராஜ் தான். படத்தின் கதை வலுவாக இருந்தாலும், அதை நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களை கவரவில்லை என்றால் அவர்களின் உழைப்பு அனைத்தும் வீண் தான். ஆனால் படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்து நம் அனைவரையும் வியக்க வைத்த இவர்களில் 2024 சிறந்த நடிகருக்கான தேசிய விருது யாருக்கு வழங்கலாம்? கமெண்ட்ல சொல்லுங்க.

News December 17, 2024

BGT: போராடி வீழ்ந்த கே.எல் ராகுல்

image

பிரிஸ்பேனில் நடைபெறும் இந்தியா – ஆஸி., இடையேயான BGT போட்டியில் கே.எல்.ராகுல் நூலிழையில் சதத்தை தவறவிட்டார். முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பினாலும், தன் நிதான ஆட்டத்தால் இந்திய அணியை காப்பாற்றிய ராகுல் 84 ரன்களில் அவுட் ஆனார். தற்போது வரை இந்திய அணி 158/6 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் தவிர்க்க 88 ரன்கள் தேவை.

News December 17, 2024

நாளை சென்னையில் மிக கனமழை

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதன் தாக்கத்தால், நாளை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், விழுப்புரம், கடலூரில் மிக கனமழை பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கும் வாய்ப்புண்டு.

News December 17, 2024

பாரம்பரிய உடையில் மாரத்தான் ஓடிய தம்பதி

image

அபுதாபியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தம்பதி பாரம்பரிய உடையில் கலந்துக் கொண்டு கவனம் ஈர்த்தனர். தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தானில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில், நாகர்கோவிலைச் சேர்ந்த லிடியா ஸ்டாலின் – விபின் தாஸ் தம்பதி வேட்டி, சட்டை மற்றும் பாவாடை தாவணி அணிந்து 42.2 கி.மீ. தொலைவை 4 மணி நேரம் ஓடி நிறைவு செய்தனர்.

error: Content is protected !!