News December 17, 2024

EB கட்டணம்: கவுண்டர்களில் ரூ.4,000ஆக குறைப்பு?

image

பொதுவாக மின்வாரிய கவுண்டர்களில் EB கட்டணத்தை மக்கள் செலுத்துகின்றனர். முன்பு ரூ.10,000 வரை நேரில் கட்டணம் செலுத்தலாம் என இருந்தது. பிறகு இந்தத் தொகை ரூ.5,000ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைனில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், இக்கட்டணம் தற்போது ரூ.4,000 ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கும் கூடுதலான தொகையை ஆன்லைனில் கட்டலாம் எனச் சொல்லப்படுகிறது.

News December 17, 2024

ஆளுநர் மாளிகை நாளை முற்றுகை: காங்கிரஸ்

image

ஆளுநர் மாளிகையை நாளை முற்றுகையிடப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அனுமதி மறுத்ததை எதிர்த்து, நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிட காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை காலை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

News December 17, 2024

ஓய்வு அறிவிப்பாரா ரோஹித் ஷர்மா?

image

ஒருகாலத்தில் கிரிக்கெட் உலகை மிரள விட்டவர் ரோஹித் ஷர்மா. ஆனால், சமீபகாலமாக அவரது பெர்ஃபார்மன்ஸ் மிக மோசமாக இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, தற்போதைய BGT டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் அவர் 10 ரன்களை கூட தாண்டவில்லை. இது அவரையே விரக்தியடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு அறிவிப்பாரா என நெட்டிசன்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

News December 17, 2024

நான் திருமணம் செய்திருக்கவே கூடாது: நயன்தாரா ஓபன் டாக்

image

தனது திருமண வாழ்க்கை குறித்து நயன்தாரா மனம் திறந்து பேசியுள்ளார். யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சில நேரங்களில் நாங்கள் ஒன்றாக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். நான் இல்லையென்றால் விக்னேஷுக்கான அடையாளம் அப்படியே இருந்திருக்கும். மக்கள் அவரை கொண்டாடி இருப்பார்கள். நான்தான் அவரை உறவுக்குள் இழுத்தேன். அந்தக் குற்ற உணர்வு எனக்கு இருக்கிறது எனக் கூறினார்.

News December 17, 2024

டேரன் சமி கையில் சென்ற WI

image

WI அணியின் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் T20களில் சமி தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் நிலையில், தற்போது டெஸ்ட் அணிக்கும் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஏப்ரல் வரை அவர் பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமி கேப்டன்சியில் WI இரண்டு முறை, T20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.

News December 17, 2024

அதிபர் ஆட்சியை கொண்டு வர முயற்சி: கனிமொழி

image

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம், அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்லும் என கனிமொழி எம்பி சாடியுள்ளார். மாநிலக் கட்சிகளை வலுவிழக்கச் செய்யக்கூடிய தேர்தலை நோக்கித்தான் இந்த மசோதா இட்டுச்செல்லும் எனவும், மாநில, மக்களின் உரிமைகளுக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இது முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கான வேலையாகக் கூட இருக்கலாம் எனவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

News December 17, 2024

பெட்ராேல், டீசல் விலை உயர்வு

image

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லேசாக உயர்த்தியுள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 23 காசுகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.03க்கு விற்கப்படுகிறது. டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 22 காசுகள் உயர்த்தியதையடுத்து, ரூ.99.61க்கு விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் பெட்ரோல், டீசல் என்ன விலைக்கு விற்கப்படுகிறது?

News December 17, 2024

அந்தரங்க பாகங்களில் டாட்டூ.. மாதம் ரூ.3 லட்சம் வருவாய்!

image

திருச்சியில் நுனி நாக்கை துண்டித்து டாட்டூ குத்திய வழக்கில் கைதான ஏலியன் பாய் குறித்த போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உடலின் அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட ₹30,000 முதல் ₹50,000 வரை வசூலித்து மாதத்திற்கு சுமார் ₹3 லட்சம் வரை சம்பாதித்துள்ளார். இதுவரை 3 பேருக்கு நாக்கு அறுவை சிகிச்சை செய்து டாட்டூ போட்டதும் தெரியவந்துள்ளது.

News December 17, 2024

ஹேண்ட் பேக் மெசெஜ்: பிரியங்காவின் புதிய யுக்தி!

image

பார்லிமென்ட்டுக்கு பிரியங்கா காந்தி எடுத்துவரும் ஹேண்ட் பேக்குகள் விவாத பொருளாகின்றன. ஆம், நேற்று பாலஸ்தீனம் எனப் பதித்த பையை எடுத்துவந்தவர், இன்று Stand Minorities of Bangladesh என அச்சிடப்பட்ட பையை பங்களாதேஷில் சிறுபான்மையினரான ஹிந்து. கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்க்கும் விதமாக எடுத்து வந்துள்ளார். ‘பாலஸ்தீனம்’ பையை எதிர்த்த பாஜக எம்பிக்கள், இதையும் எதிர்ப்பார்களா?

News December 17, 2024

அரசுப் பள்ளிகளில் A.I. பாடங்கள் அறிமுகம்: அன்பில்

image

அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் A.I. பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆய்வுகள் தற்போது நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார். A.I. தொழில்நுட்பத்துக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்துள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தை அடுத்தடுத்து முன்னணி நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

error: Content is protected !!