News December 17, 2024

கோலிவுட் ஜேம்ஸ் பாண்ட் ஆன அஜித்

image

அஜித்குமார் கோட் சூட் அணிந்து கோலிவுட் ஜேம்ஸ் பாண்ட் போல் காட்சியளிக்கும் போட்டோவை வெளியிட்டு, ‘விடாமுயற்சி’ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு என்ற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அஜித் – த்ரிஷா இடையிலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. 2025 பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டீசர் பெரும் வரவேற்பை பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

News December 17, 2024

கவனம் தேவை: திமுகவுக்கு அண்ணாமலை அட்வைஸ்

image

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக கவனத்துடன் இருக்க வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். கோவையில் அல் உம்மா தலைவர் பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தது யார் என கேள்வி எழுப்பிய அவர், இந்த விவகாரத்தை ஆளுங்கட்சி கையாண்ட விதம் சரியில்லை என்றார். பயங்கரவாதிகளை தியாகிகளாக சித்தரிப்பது, குண்டுவைத்ததைக் காட்டிலும் படுபாதகம் எனவும் கண்டித்துள்ளார்.

News December 17, 2024

இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை கொட்டும்

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், தேனி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.

News December 17, 2024

பேராபத்தில் சிக்கிய வங்கதேசம்..!

image

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக ஒருபுறம் கலவரம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், அந்நாடு மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கிறது. வங்கதேசத்தின் மியான்மர் எல்லையையொட்டி செயல்பட்டு வரும் ‘அராக்கன் ஆர்மி’ என்ற கிளர்ச்சிக் குழு, அந்நாட்டின் தெக்னாப் பிராந்தியத்தின் சில பகுதிகளை கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு வங்கதேச ராணுவம் அவசரமாக சென்றுள்ளது.

News December 17, 2024

மகிழ்ச்சியா இருக்கணுமா? இவங்கள AVOID பண்ணுங்க

image

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க இந்த குணங்கள் கொண்டவர்களை தவிருங்கள்:
1)உங்களிடம் பொய் சொல்பவர்கள் 2) உங்களை அவமதிப்பவர்கள், உங்களுக்கு மரியாதை கொடுக்காதவர்கள் 3)உங்களை தம் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்பவர்கள் 4)உங்களின் தன்னம்பிக்கையை கெடுப்பவர்கள், தலைகுனிய செய்பவர்கள். வேறு எந்த மாதிரி நபர்களை தவிர்க்க வேண்டும்? உங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லுங்களேன்.

News December 17, 2024

வெற்றிபெறுமா அஜித் தோவலின் அடுத்த மூவ்

image

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று பெய்ஜிங் சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் வாங் யி-யை சந்திக்கும் அவர், எல்லைப் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து விரிவாக விவாதிப்பார். 2019-க்கு பின் எல்லைத் தொடர்பாக நடக்கும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். இரு நாடுகளுக்கு இடையே 3,488 கிமீ நீளம் கொண்ட கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் (LAC) அமைதியை கொண்டுவரும் முயற்சியாக இது அமையும்.

News December 17, 2024

குழந்தை வேண்டி உயிரோடு கோழிக்குஞ்சை விழுங்கியவர்

image

சத்தீஸ்கரை சேர்ந்த ஆனந்த் யாதவுக்கு(35) திருமணமாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை இல்லை. இதனால் விரக்தியடைந்த ஆனந்த், அங்குள்ள ஜோதிடரை நாடவே, கோழிக்குஞ்சை உயிருடன் விழுங்கும்படி கூறியுள்ளார். அதைக் கேட்டு ஆனந்த் கோழிக்குஞ்சை விழுங்க, அது தொண்டையில் சிக்க, மூச்சுத்திணறி உயிரிழந்தார். எனினும், அவரது தொண்டையில் சிக்கிய கோழிக்குஞ்சை மருத்துவர்கள் உயிருடன் மீட்டனர். எதற்கும் மூடநம்பிக்கை தீர்வல்ல.

News December 17, 2024

₹5 நாணயம் புழக்கத்தில் இருந்து நிறுத்தம்?

image

₹5 நாணயங்கள் புழக்கத்தில் நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் இது உண்மையில்லை. கனமான பழைய ₹5 நாணயத்தை சிலர் வங்கதேசத்துக்கு கடத்திச் சென்று உருக்கி 5 பிளேடுகளாக்கி ₹10க்கு விற்பதாக தெரிகிறது. ₹5 நாணயத்தை தயாரிக்க ஆகும் செலவை விட இது குறைவு ஆகும். ஆதலால் இதை கவனத்தில் காெண்டு கனமான ₹5 பழைய நாணயத்தை மட்டுமே ரிசர்வ் வங்கி நிறுத்துவதாக கூறப்படுகிறது.

News December 17, 2024

சந்தை சரிவுக்கு இதுதான் காரணமா?

image

வணிக வாரத்தின் 2ஆம் நாளான இன்று இந்தியப் பங்குச் சந்தை Sensex (1,064 புள்ளிகள் சரிந்தது), Nifty (332 புள்ளிகள் சரிந்தது) வீழ்ச்சி அடைந்துள்ளன. இதற்கு கிறிஸ்துமஸ் விடுமுறை, FII/FPI-களின் வரத்து குறைந்தது, வட்டி விகிதம் போன்றவையே காரணங்களாகக் கூறப்படுகிறது. அத்துடன், அமெரிக்க FED-இன் நிதிக்கொள்கை கூட்டம் இன்று நடக்க இருப்பதால் அந்நிய முதலீட்டாளர்கள் அதீத முன்னெச்சரிக்கையுடன் உள்ளனர்.

News December 17, 2024

வீட்டிலிருந்தே டிகிரி படிக்க விருப்பமா? இதை பாருங்க.

image

கல்லூரிக்கு சென்று படிக்க முடியாதவர்கள் Bachelor, Masters, Diploma படிப்புகளை பெறத் தொடங்கப்பட்டதே தொலைதூரக்கல்வி. திறந்தநிலை பல்கலைக்கழகமான IGNOU, 2025 ஜனவரி பேட்ச்க்கான ஆன்லைன், தொலைதூரக் கல்வி அட்மிஷனை தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் 2 முறை அட்மிஷன் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் ignouadmission.samarth.edu.in என்ற இணையத் தளத்தை அணுகலாம். கடைசி தேதி ஜன.31,2025.

error: Content is protected !!