News August 27, 2025

பிரபல நடிகர் ஜாய் பானர்ஜி காலமானார்

image

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான ஜாய் பானர்ஜி(62) காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், புகழ்பெற்ற மிலன் திதி, நாக்மதி, சாப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் பிர்பும் தொகுதி, 2019 தேர்தலில் உலுபேரியா தொகுதியில் BJP சார்பில் போட்டியிட்டு TMC-யிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜாய் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News August 27, 2025

இதுக்கு சரியான பதில் சொல்லுங்க பாப்போம்?

image

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. 1= 2, 4= 20, 6= 42, 9= 90, அப்போ 10= ? என்ன வரும் யோசிச்சு பாருங்க. HINT: இதில் 1=2 எப்படி வந்துச்சுன்னு மட்டும் யோசிங்க. மத்த நம்பர்களுக்கான பதில்கள் ஈசியாக கிடைச்சிடும். எத்தனை பேர் சரியா பதில் கமெண்ட் பண்றீங்க’னு பாப்போம்?

News August 27, 2025

தற்கொலை செய்ய டிப்ஸ் வழங்கிய ChatGPT

image

USA-ல் 16 வயது சிறுவனுக்கு பல்வேறு ஐடியாக்களை வழங்கி, தற்கொலைக்கு உதவியதாக, OpenAI மற்றும் அதன் CEO சாம் ஆல்ட்மேன் மீது பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்கொலை முயற்சி தோல்வி அடைந்தால் அதை எப்படி மறைப்பது, தற்கொலை கடிதத்தை எப்படி எழுதுவது என பல டிப்ஸ்களை ChatGPT வழங்கியதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு நெறிமுறைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.

News August 27, 2025

CINEMA ROUNDUP: மாலை 5 மணிக்கு தனுஷின் சர்ப்ரைஸ்!

image

‘இட்லி கடை’ படத்தின் ‘என்சாமி தந்தானே’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளிவருகிறது.
★மோகன் ஜீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘திரெளபதி பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது.
★சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘மண்டாடி’ படத்தில் இருந்து சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
★ரவி அரசு இயக்கும் ‘மகுடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. படத்தில் 3 கெட்டப்பில் விஷால் நடிக்கிறார்.

News August 27, 2025

BREAKING: தமிழக அமைச்சரின் மகள் அபார வெற்றி

image

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமைச்சர் TRB ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோல், குழுப் பிரிவில் அமைச்சர் நிலா ராஜா பாலு, டனிஸ்கா, அந்த்ரா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். கடந்த 2023-ல் 66-வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் ஜூனியர் மகளிர் போட்டியில் நிலா ராஜா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

News August 27, 2025

அதிமுக கூட்டணிக்கு விஜய் வரணும்: ராஜேந்திர பாலாஜி

image

TVK மாநாடு அரை மணி நேர பொழுதுப்போக்கு ஷோ என ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். மாநாட்டில் கூடிய கூட்டம் விஜய் பேசி முடித்தவுடன் கலைந்துவிட்டதாகவும், சினிமா வசனங்கள், ரசிகர் கூட்டத்தை வைத்துக் கொண்டு வாக்குகளை பெற முடியாது என்றும் தெரிவித்தார். திமுகவை விஜய் எதிர்க்க நினைத்தால் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும், இல்லாவிட்டால் தொட்டிலில் இருக்கும் அக்கட்சியை மக்கள் அமுக்கிவிடுவார்கள் என்றார்.

News August 27, 2025

அரசியலில் நுழையும் பிரபல தமிழ் நடிகை

image

பிரபல தமிழ் நடிகை அம்பிகா அரசியலில் இறங்க உள்ளதாக அதிரடியாக கூறியுள்ளார். சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர், தனியார் TV ஒன்றிற்கு பேசிய அவர், மனிதர்களை பிடிக்கும் என்பதால் இங்கே வந்ததாகவும், நான் அரசியலுக்கு வந்த பிறகு புகாருக்கு ஆளாகும் அரசியல்வாதியாக ஒருபோதும் இருக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

News August 27, 2025

வானில் நடக்கப்போகும் அதிசயம்

image

செப்டம்பர் 7-ம் தேதி இரவு முதல் 8-ம் தேதி அதிகாலை வரை நிலவு சிவப்பு நிறத்தில் ஒளிரப் போகிறது. இது ‘Blood Super Moon’ என கூறப்படுகிறது. இந்த முழு சந்திர கிரகணம், ஆழ்ந்த செம்மஞ்சள் நிறத்தில் உலகம் முழுவதும் தெரியும். பண்டைய காலத்தில் இது, புதிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டது. இந்த நிலவை வெறும் கண்களில் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

News August 27, 2025

BREAKING: மாணவர்களுக்கு புதிய பாடங்கள் சேர்ப்பு

image

அண்ணா பல்கலை., பொறியியல் படிப்புகளில் சில பாடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, BE, B.Tech-ல் AI பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், டேட்டா சயின்ஸ், தயாரிப்பு மேம்பாடு, காலநிலை மாற்றம், வாழ்க்கை திறன்கள், உடற்கல்வி பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டங்களால், வேலைவாய்ப்பு, மேற்படிப்புகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

News August 27, 2025

அணில் Jungle என்றே கத்த வேண்டும்: சீண்டிய சீமான்

image

அடுத்த ஆண்டு பிப்.7-ல் திருச்சியில் மாநாடு நடத்தவுள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாடு எப்படி நடத்த வேண்டும், எவ்வாறு உரையாற்ற வேண்டும் என்பதை அங்கு பாருங்கள் என விஜய்யை சாடினார். மேலும், அணில் ஏன் Uncle Uncle என கத்துகிறது, Jungle Jungle என்று தானே கத்த வேண்டும் என கடுமையாக தாக்கி பேசினார். ஏற்கெனவே அணில் மரத்தில் இருக்க வேண்டும் என்று விஜய்யை விமர்சித்திருந்தார்.

error: Content is protected !!