India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது அரையாண்டுத் தேர்வு நடந்து வருகிறது. வரும் திங்கட்கிழமையுடன் (டிச.23) தேர்வுகள் முடிவடைகின்றன. தொடர்ந்து, 24ம் தேதி முதல் விடுமுறை விடப்படுகிறது. ஜன.2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
41 வயதிலும் இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் த்ரிஷா, அண்மைக் காலமாக அடிக்கடி டிரெண்டிங்கில் உலா வருகிறார். கீர்த்தி சுரேஷின் கல்யாணம், விஜய் உடன் விமானத்தில் பயணம், அஜித்தின் விடா முயற்சி ஷூட்டிங் ஸ்பாட் எனக் கவனத்தை ஈர்த்த சவுத் குயின், காஞ்சிபுரம் பட்டுச் சேலையில், ‘ஃபேஷன் வரும் போகும் ஆனால் பாரம்பரியமே நிரந்தரமானது’ என்ற பதிவுக்கு ❤️❤️ பறக்குது.. உங்க கமெண்ட் என்ன…?
ஸ்பெயினில் கடந்த 2023 அக்டோபரில் காணாமல் போன ஒருவர் கொலை செய்யப்பட்டதை, Google Street View காட்டிக் கொடுத்துள்ளது. கொலை செய்து சடலத்தை காரில் ஏற்றிக் கொண்டிருந்த தருணத்தில், அந்த வழியாக வந்த கூகுள் வாகனம் அதை படம் பிடித்துள்ளது. சிதைந்த உடல் பாகங்கள், அருகில் இருந்த மயானத்தில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கொல்லப்பட்டவரின் இணையர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
‘விடுதலை’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது. இப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு TN அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தமாக 5 காட்சிகளை திரையிட அனுமதித்துள்ளது. முதல் பாகத்தில் சூரியைச் சுற்றி கதை நகர்ந்த நிலையில், 2ம் பாகமானது ‘பெருமாள் வாத்தியார்’ என்ற விஜய் சேதுபதி கதாபாத்திரத்தை சுற்றி இருக்கும் எனத் தெரிகிறது.
IND vs PAK போட்டிகள் 2027 வரை, இரு நாடுகளுக்கும் சம்பந்தமில்லாத பொதுவான மைதானத்தில் நடைபெறும் என ICC அறிவித்துள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 மகளிர் உலகக்கோப்பை, 2026 T20 உலகக்கோப்பை மற்றும் மற்ற ICC தொடர்களிலும் இதே நடைமுறையே பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் இருந்து 44 லட்சம் போலி உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த போலி உறுப்பினர்கள் பெயர்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும், தீவிர நடவடிக்கை எடுக்க அமைச்சர் KR பெரியகருப்பனை வலியுறுத்தியுள்ளது. இதனால் நகைக்கடன் தள்ளுபடி போன்ற அரசின் சலுகைகள் உண்மையான பயனர்களுக்கு போய் சேர்ந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தன்னை அசவுகரியத்துக்கு உள்ளாக்கியதாக ராகுல் காந்தி மீது, BJP MP ஃபாங்கான் கோன்யாக் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜ்யசபா சபாநாயகர் ஜெக்தீப் தன்கருக்கு இதுபற்றி கடிதம் எழுதியுள்ள அவர், “நாங்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அருகில் பாதை இருந்தும், எனக்கு மிக அருகே வந்து நின்ற ராகுல், சத்தமாகவும் ஒலியெழுப்பினார். பெண் என்ற முறையில் எனக்கு மிக அசெளகரியமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப பிரச்னை எனக் கூறி ஒத்திவைத்த SET தேர்வை 6 மாதங்கள் ஆகியும் TN அரசு நடத்தாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான இத்தேர்வை நெல்லை MS யுனிவர்சிட்டி நடத்த அனுமதி வழக்கப்பட்டது. சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஜூன் 7, 8ஆம் தேதிகளில் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் எனக் கூறி, பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காபா டெஸ்ட் டிரா ஆனதால் WTC இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் வாய்ப்பு சற்று குறைந்துள்ளது. IND நேரடியாகத் தகுதிபெற அடுத்த இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டும். AUS-SL தொடரை 2-0 என்ற கணக்கில் AUS வென்றாலும், IND பைனலுக்கு செல்லும். மாறாக 2-1 என்ற கணக்கில் வென்றால், AUS-SL தொடரை AUS 1-0 என்ற கணக்கிலும், SA-PAK தொடரை 1-0 என்ற கணக்கில் அல்லது 2-0 என PAK வெல்ல வேண்டும் அல்லது 2-2 என டிரா ஆக வேண்டும்.
நவீன இந்தியாவின் கட்டுமானத்திற்கு அம்பேத்கரின் சிந்தனையே அடித்தளம் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து நாட்டை விடுவித்தவர் அம்பேத்கர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவரது மாண்பு சிதைக்கப்படுவதை எந்த இந்தியரும் சகித்து கொள்ளமாட்டார் எனவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.