News December 20, 2024

அறிமுகமானது கவாஸாகி நிஞ்சா 1100SX

image

கவாஸாகி நிஞ்சா 1100SX மாடல் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் புதிய 1099 CC, 4 சிலிண்டர் எஞ்சின் மூலம் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் டெலிவரி தொடங்கும் நிலையில், Ex-Showroom விலையாக ₹13.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பைக் ரைடர்களுக்கு அனைத்து விதத்திலும் ஈடுகொடுக்கும் வகையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

News December 20, 2024

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சூப்பரான டிப்ஸ்

image

*கீரை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிறுநீரகத்தை ஆரோக்கியமாக்கும்.
*அன்னாசி: சிறுநீரக நோய்களை தடுக்க்கும்.
*குடைமிளகாய்: ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் சிறுநீரகத்தை பாதுகாக்கும்.
*காலிபிளவர்: சிறுநீரகத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும்.
*பூண்டு: குறைந்தளவு சோடியம் உள்ளதால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

News December 20, 2024

ISSஇல் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா

image

கிறிஸ்துமஸ் பண்டிகை மண்ணுலகம் மட்டுமின்றி, விண்ணுலகிலும் களைகட்டியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், சாண்டா வேடமணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 8 நாள் பயணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ISS சென்ற அவர், ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 6 மாதங்களாக அங்கேயே தங்கியுள்ளார். மேலும், 2025 ஏப்ரலுக்கு அவர் பூமிக்கு திரும்புவார் என NASA கூறியுள்ளது.

News December 20, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர்20 (மார்கழி 5) ▶வெள்ளி ▶நல்ல நேரம்: 09:15 – 10:15 AM, 04:45 – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 – 01:15 AM, 06:30 – 07:30 PM ▶ராகு காலம்: 10:30 AM-12:00 PM ▶எமகண்டம்: 03:00 – 04:30 PM ▶குளிகை: 07:30-09:00 AM ▶திதி: 1:55 PM வரை பஞ்சமி பின்பு சஷ்டி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: மகம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம்

News December 20, 2024

சேப்பாக்கம் மைதானத்தில் விரைவில் அஸ்வின் பெயர்

image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டுக்கு, ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேஷன் இணைச் செயலாளர் பாபா தெரிவித்துள்ளார். அதேபோல, CSK அகாடமியில், அஸ்வின் பயிற்சியாளராக வருவதற்கு வாய்ப்புள்ளதாக CSK CEO காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும், CSK அகாடமியை இந்தியா முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 20, 2024

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் PM மோடி

image

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் வீட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இது தொடர்பான போட்டோஸை Xஇல் பகிர்ந்துள்ள PM, கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த முக்கிய நபர்களை சந்தித்து ஆலோசித்ததாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பள்ளி மாணவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியை PM மோடி ஆர்வத்துடன் கண்டு ரசித்தார்.

News December 20, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறள் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 123 ▶குறள்:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
▶பொருள்: அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.

News December 20, 2024

எங்க கெத்த பாக்குறீங்களா? விளாடிமிர் புதின்

image

ரஷ்யாவிடம் உள்ள ஏவுகணை ஆற்றலை நிரூபிக்க தயார் என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்யாவின் புதிய ஏவுகணையான ஓரேஷ்னிக், அமெரிக்க ஏவுகணை தடுப்பு அமைப்புகளை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது எனக் கூறியுள்ளார். மேலும், ஏதாவது ஒரு இலக்கை அமெரிக்கா தேர்வு செய்தால், தங்களது வலிமையை காட்டுவோம் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

News December 20, 2024

சச்சினுக்கு நிகரானவர் அவர்: கபில்தேவ்

image

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின் என Ex கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார். இந்தியாவின் மகத்தான ஒருவர் விடைபெற முடிவெடுத்ததை பார்த்து ஆச்சரியப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், அஸ்வின் முகத்தில் வலியை பார்த்தது சோகமாக இருந்தது என்றார். மேலும், அஸ்வின் ஓய்வை அறிவிக்கும்போது நான் அங்கு இருந்திருந்தால், அவரை மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும் அனுப்பியிருப்பேன் என தனது நிலைப்பாட்டை அவர் கூறினார்.

News December 20, 2024

டிசம்பர் 20: வரலாற்றில் இன்று

image

*1844 – இலங்கையில் அடிமை முறையை முற்றாக ஒழிக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
*1957 – போயிங் 707 விமானம் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
*2007 – ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக அதிக காலம் இருந்த பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றார்.
*சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்
*அடிமை ஒழிப்பு நாள் (ரீயூனியன், பிரெஞ்சு கயானா)

error: Content is protected !!