News December 20, 2024

அபார சக்திகளை தரும் அதிகாலை தியானம்.!

image

அதிகாலையில் தியானம் செய்வது நாள் முழுக்க அமைதியான, சீரான மனநிலையை அளிக்கிறது * மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது * காலை நேரம் அமைதியானது என்பதால், நமது எண்ணங்களும், உணர்ச்சிகளும் கட்டுப்படுத்தப்பட்டு மனது திறம்பட செயல்பட உதவுகிறது * எடுத்து கொள்ளும் வேலையில் கவனச்சிதறல்களைத் தவிர்க்க உதவுகிறது * தினமும் அதிகாலை தியானம் செய்வது ஒழுக்கத்தையும், தினசரி பழக்க வழக்கதையும் மேம்படுத்த உதவுகிறது.

News December 20, 2024

வெல்லப் பிறந்தவர் சீமான்?

image

ஜிம்மில் சீமானுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை யூடியூபர் ‘சாட்டை’ துரைமுருகன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், சீமானின் சட்டையில் ‘Born to Win’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனைப் பார்த்து குஷியான ‘நாம் தமிழர்’ தம்பிகள், “வெல்லப் பிறந்தவர் எங்கள் அண்ணன்” என்று கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், “வென்றுவிட்டு பேசுங்கள்” என்று எதிர்க்கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

News December 20, 2024

WT20I கிரிக்கெட்: உலக சாதனை படைத்த ரிச்சா கோஷ்

image

இந்திய அணியின் ரிச்சா கோஷ்(21) WT20I போட்டிகளில் அதிகவேகமாக அரைசதம் அடித்தவர் என்ற நியூசி. சோஃபி டெவின், ஆஸி. ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்தார். மே.இ. தீவுகளுக்கு எதிரான போட்டியில் 54(21) ரன்களை அடித்து, அதிகவேக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஸ்மிருதி மந்தனா (24) அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 20, 2024

UGC-NET தேர்வு… தமிழக மாணவர்கள் அப்செட்!

image

UGC-NET தேர்வு தொடர்பான அறிவிப்பு தமிழக மாணவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அட்டவணையில், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான UGC-NET தேர்வு ஜனவரி 15, 16ஆம் தேதி 2 ஷிப்டுகளாக நடைபெற உள்ளது. அந்த 2 நாள்களும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் என்பதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News December 20, 2024

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நாளை நடத்த ஆணை

image

கனமழை காரணமாக 6 – 12ஆம் வகுப்பு வரை தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, நாளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கையில், எந்தெந்த மாவட்டங்களில் மழையால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதோ, அங்கெல்லாம் நாளை தேர்வு நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்த, மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 20, 2024

மிதமான மழை பெய்யக்கூடும்: RMC

image

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்கிறது. இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல நாளை முதல், டிசம்பர் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News December 20, 2024

இன்று முதல் சிறப்பு பேருந்துகள்!

image

வார இறுதி விடுமுறை, மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க <<-1>>இந்த<<>> இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். இதேபோல பிற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

News December 20, 2024

குடிநீர் குழாய் இணைப்பு பணியை விரைவுபடுத்துக

image

குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்துமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக யூனியன் மினிஸ்டர் சி.ஆர்.பாட்டீல் அளித்த பேட்டியில், நாடு முழுவதும் இன்னும் 4 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டியுள்ளதாகக் கூறினார். மேலும் இதுவரை, 11 மாநிலங்கள்/யூ.பிரதேசங்களில் 100% குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 20, 2024

உளுந்து பாலும்! ஊட்டச்சத்தும்!!

image

*நரம்பு மண்டலம் வலிமை பெறும்
*உடலுக்கு குளிர்ச்சியை தரும்
*இடுப்பு வலியை போக்கும்
*மலச்சிக்கல், வயிறு உப்புசம் நீங்கும்
*மாதவிடாய் பிரச்னைகள் சரியாகும்
*தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
1/4 டம்ளர் உளுந்தை குக்கரில் வேக வைத்து, ஆறிய பிறகு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பிறகு கொஞ்சம் நீர், நாட்டு சக்கரை கலந்து கொதிக்கவிட்ட பிறகு, பால் அல்லது தேங்காய் பால் கலந்தால் சுவையான உளுந்து பால் ரெடி.

News December 20, 2024

மோதல் போக்கு தேவையற்றது: அன்புமணி

image

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக அரசு-ஆளுநர் இடையிலான மோதல் போக்கு நீடிப்பது தேவையற்ற ஒன்று என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு TN அரசுக்கு யோசனை தெரிவித்த அவர், அதன்மூலம் உடனடியாக ஒரு தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!