India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையின் பல்வேறு இடங்களில் சீரமைப்பு பணிகளுக்காக 2 வாரங்களுக்கு அம்மா உணவகங்களை மூட மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 300க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ள நிலையில், அதில் முதல்கட்டமாக 15 மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மூடப்படும் உணவகங்களில் இருந்து 1 கி.மீ. தொலைவில் 1 உணவகத்தை திறந்து வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அஸ்வினுக்கு, வாஷிங்டன் சுந்தர் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், சுந்தருக்கு GOAT படத்தில் வரும் சீனை அஷ்வின் ரீகிரியேட் செய்துள்ளார். அதில், “துப்பாக்கிய புடிங்க வாஷி..! அன்று இரவு நீங்கள் கெட் டூ கெதரில் பேசிய 2 நிமிடம் சிறப்பாக இருந்தது” என பதில் அளித்துள்ளார். இதன்மூலம் தன் இடத்தை வாஷிங்டன் நிரப்புவார் என சிம்பாலிக்காக கூறியுள்ளார்.
அலுவலகமோ வீடோ, நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்வதால் பல்வேறு நோய்கள் வரும் என்கின்றனர் டாக்டர்கள்: *உடல்பருமன் *இதயநோய் & சில வகை புற்றுநோய்கள் *ரத்த சர்க்கரை *தொப்பை & இடுப்பை சுற்றி கொழுப்பு சேர்வது *முதுகு-கழுத்து வலி *தொடை தசைகள் பலவீனமாதல் *ஜீரண பிரச்சனை போன்றவை ஏற்படலாம். இவற்றை தவிர்க்க 30 mins-க்கு ஒருமுறை எழுந்து நடக்கலாம், எளிதான உடற்பயிற்சிகள் (வாரம் 150 mins) அவசியம்.
பிரபல மலையாள இயக்குநரான MT வாசுதேவன் நாயர் (80) உடல்நிலை மோசமடைந்திருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்ட அவருக்கு இருதய பிரச்னைகள் இருப்பதாக மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இவர் 7 தேசிய விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி (VSB) மீண்டும் அமைச்சராகத் தொடர்வதால் சாட்சியங்கள் தற்போது என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பது குறித்து பார்ப்பதாக SC கூறியுள்ளது. ஜாமினுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், உள்துறை செயலரை எதிர் மனுதாரராகச் சேர்த்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அதிரடி உத்தரவிட்டனர். இது VSBக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை நீதிமன்ற வாசலிலேயே ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. பழைய கொலை வழக்கில் ஆஜராக வந்த மாயாண்டியை கோர்ட்டுக்குள் பதுங்கியிருந்த 4 பேர் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். உடனடியாக அவர்கள் கைதும் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழத்தில் சட்ட ஒழுங்கு கேளிக் கூத்தாகியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் EPS கண்டனம் தெரிவித்துள்ளார்.
ICC தொடர்களில் மட்டுமே இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டி ரசிகர்களை பெருமளவில் ஈர்க்கிறது. ஆனால், இப்போட்டிகள் வருடத்திற்கு 1 அல்லது 2 முறை தான் நடைபெறுகிறது. இச்சூழலில் இரு அணிகளுடன் மற்றொரு ஆசிய அணி கலந்துகொள்ளும் முத்தரப்பு தொடர் நடத்த ICC சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், தொடர் வேறு நாட்டில் நடக்க வேண்டும் என்ற ஒரேயொரு நிபந்தனையுடன், 3வதாக எந்த டீம் இருந்தா நல்ல இருக்கும்?
ஹரியானாவின் அடையாளம், 4 முறை CM என்ற பெருமையை பெற்ற <<14931808>>சவுதாலா<<>>, டெல்லி திகார் சிறையில் மூத்த கைதி என்ற வரலாற்றுக்கும் ஆளானவர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கிய சவுதாலாவுக்கு, 2013 ஆம் ஆண்டு சிபிஐ கோர்ட் 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து ஒன்பதரை ஆண்டுகள் சிறையிலிருந்த அவர் 2021 ஜூலையில் விடுதலையானார். இவர் Ex Dy PM சவுத்ரி தேவிலாலின் மகன் ஆவார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் EPS ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடந்த இடைத்தேர்தலில் தோல்வியை தழுவிய தென்னரசுவையே போட்டியிட வைக்கலாமா, அல்லது முன்னணி நிர்வாகிகளான ஆற்றல் அசோக் குமார், வீரகுமார் ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாமா என்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.
வாத்தியார் கம்யூனிசம் பாதையைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன, மக்கள் படையின் கதை? என விரிகிறது விடுதலை 2. வெற்றிமாறன் பல கருத்துகளைக் கூற, அதை விஜய் சேதுபதி அழுத்தமாக காட்டியுள்ளார். கென் கருணாஸ் நடிப்பு சிறப்பு. பிற நடிகர்களும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்கள். இளையராஜா இசை படத்தின் பலம். சூரி பெரிதாக தெரியவில்லை. வேகமான திரைக்கதையில் கம்யூனிச வசனமும், படத்தின் நீளமும் தோய்வு. Rating: 3/5
Sorry, no posts matched your criteria.