News December 20, 2024

JIO பங்கில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு

image

நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏராளமான பெட்ரோல், டீசல் பங்குகளை வைத்துள்ளது. தற்போது அந்நிறுவனம் தனது பங்குகளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. HAPPY HOUR DISCOUNT என்ற பெயரில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விலை குறைப்பை செய்துள்ளது. மேலும், பம்பர் பரிசுகள் உள்ளிட்ட பரிசுகளையும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. என்ன பெட்ராேல் போட கிளம்பிட்டீங்களா?

News December 20, 2024

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா? மத்திய அரசு விளக்கம்

image

நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், அதுபோன்ற உத்தரவு எதையும் மத்திய கல்வி அமைச்சகம் பிறப்பிக்கவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News December 20, 2024

வரும் 26 முதல் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் ஆரம்பம்

image

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக பேசிய TN கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா, இதுவரை தமிழகத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவர்களே, போட்டிகளில் கலந்துகொண்ட நிலையில், தற்போது வெளிமாநில மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என்றார். எதிர்காலத்தில் இந்த தொடரை தேசிய அளவில் கொண்டு செல்லும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News December 20, 2024

புதுச்சேரியில் பஸ் கட்டணம் உயர்வு

image

புதுவையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ₹2- ₹8 வரை கட்டணம் உயரும். புதுவையில் உயர்த்தப்பட்ட இந்தக் கட்டண உயர்வானது தமிழக மக்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக புதுவையில் இருந்து கடலூருக்கு ₹20இல் இருந்து ₹25 ஆகவும், விழுப்புரத்திற்கு ₹25இல் இருந்து ₹30ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பக்கத்து மாவட்ட மக்களும் பாதிப்புக்கு ஆளாவர்.

News December 20, 2024

2024இல் ரியலாக ஜோடி சேர்ந்த ரீல் பிரபலங்கள்!

image

2024ஆம் ஆண்டில் ரீல் ஜோடிகள் பலரும் ரியல் ஜோடிகளாக வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். *கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி தட்டில், *நாகசைதன்யா – சோபிதா துலிபாலா, *சித்தார்த்-அதிதி ராவ், *மேகா ஆகாஷ்-சாய் விஷ்ணு, *வரலட்சுமி – நிகோலய், *ஐஸ்வர்யா-உமாபதி, *காளிதாஸ் ஜெயராம்-தாரிணி காளிங்கராயர், *சுவாசிகா-பிரேம் ஜேக்கப், *ரகுல் பிரீத்-ஜாக்கி பக்னானி, *சோனாக்சி-ஜாகீர் இக்பால். ஆகியோருக்கு வே2நியூஸ் சார்பில் வாழ்த்துகள்..

News December 20, 2024

சீனாவிடம் போர் விமானங்களை வாங்கும் வங்கதேசம்

image

சீனாவிடமிருந்து J-10C ரக நவீனப் போர் விமானங்களை (16) வாங்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது. இதனால் சீனாவில் இருந்து PAK-க்கு அடுத்தபடியாக நவீன ஆயுதங்கள் வாங்கும் 2வது பெரிய நாடாக அது மாறியுள்ளது. இந்தியாவுடன் வங்கதேசத்தின் உறவு சீர்கெட்டு உள்ள நிலையில், சீனாவிடம் நவீன ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவுக்கு கவலைதரும் ஒன்றாகும். ஏற்கெனவே இந்திய எல்லையில் ட்ரோன்கள் பறக்கவிட்டு வ.தேசம் தொல்லை தருகிறது.

News December 20, 2024

தேசிய தேர்வுகளுக்கு பொங்கல் நாளை தேர்ந்தெடுப்பது ஏன்?

image

CA தேர்வை பொங்கல் அன்று வைத்து கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில் பொங்கல் தேதியில் UGC NET தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொங்கல் தினத்தில் தேர்வுகள் வைப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள சு.வெங்கடேசன் MP, இந்த தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றுமாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News December 20, 2024

“கோலி கேப்டனாக இருந்திருந்தால்…”

image

கோலி, இந்திய அணி கேப்டனாக இருந்திருந்தால் அஸ்வின் ஓய்வை அறிவித்திருக்க மாட்டார் என பாக்., முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். மேலும், “ஆஸி.,க்கு எதிரான தொடர் முடிந்ததும், ஓய்வை குறித்து பேசுங்கள் என கோலி நிச்சயம் கூறி இருப்பார். ஏனெனில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சிட்னியில் விளையாட அஷ்வின் தேவை. ராகுல் டிராவிட், ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இருந்திருந்தாலும், அவரை விட்டிருக்க மாட்டார்கள்.

News December 20, 2024

அஜித் பட ஹீரோயின் 2ஆவது ரகசியத் திருமணம்

image

அஜித் நடித்த ரெட் படத்தின் ஹீரோயினான பிரியா கில்-க்கு 17 வயதிலேயே திருமணம் நடந்தது. ஆனால் படத்தில் நெருக்கமான காட்சியில் நடித்ததால் பிரச்னை வெடித்து, சில நாள்களில் விவாகரத்து ஆனது. இந்நிலையில், தான் 2வது திருமணம் செய்துகொண்டதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். வெப் சீரிஸ் நடிகர் ரவி கேசரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு மகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News December 20, 2024

ONOE மசோதா கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைப்பு

image

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குழுவிற்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் முன்மொழிந்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் கூச்சல் எழுப்பிய நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

error: Content is protected !!