India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலரான ஆண்டனியை அண்மையில் கரம்பிடித்தார். அவர் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகின்றன. அவரது கைவசம் தற்போது 2 படங்களே உள்ள நிலையில், அதற்கு மேல் அவர் எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை. இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகுவார் எனக் கூறப்படுகிறது.
தட்கல் முறையில் தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத விண்ணப்பிக்க தவறியவர்கள், தட்கல் முறையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வரும் 23, 24, 26 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, இணைய வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 500 உதவியாளர் பதவிகளுக்கான ஆன்லைன் பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. கல்வித் தகுதி: SSC/ HSC/ UG Degree (ஆங்கிலப்புலமை). வயது வரம்பு: 21-30. சம்பளம்: ₹40,000. விண்ணப்பக் கட்டணம்: ₹100/-. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜன.01, 2025. கூடுதல் தகவல் அறிய இந்த <
தர சோதனையில் தேர்வாகாத நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி ரேஷன் பொருள்கள் வாங்க ஆணை என்று அண்மையில் செய்தி வெளியானது. இதற்கு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தரமான பாமாயில், பருப்பு வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 370 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, இந்த ஆண்டில் இந்தியாவின் சாதனைகள் குறித்து X-ல் இட்டுள்ள பதிவில் சந்திரயான் -3 மிஷன் வெற்றியை முக்கிய சாதனையாக கூறுகிறார். அடுத்து உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்தது, G20 தலைமை, டிஜிட்டல் இந்தியாவின் எழுச்சி, 110 யுனிகார்ன் நிறுவனங்களின் வளர்ச்சி, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, உலகக் கோப்பை வெற்றி, க்ரீன் எனர்ஜி அதிகரிப்பு ஆகியவற்றை கூறுகிறார். உங்கள் கருத்து என்ன?
புத்தாண்டில் சனி, சுக்கிரன், கேது ஆகிய மூவரும் இடமாறுகிறார்கள். இதனால் 3 ராசிகளுக்கு மாளவ்ய யோகம் அடிக்க போகிறது. 1) ரிஷபம்: பல வழிகளில் பணம் சேரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். கடன்கள் அடையும். 2) தனுசு: தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு. முதலீடு லாபத்தை கொட்டும். குடும்ப பிரச்னைகள் நீங்கும். 3) கும்பம்: வருமானம் பெருகும். புதிய வேலைகள், பதவிகள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.
காணாமல் போன MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்க உள்ளதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. 2014இல் 227 பயணிகளுடன் மாயமான அந்த விமானத்தைத் தேடும் பணி பல ஆண்டுகள் தொடர்ந்த நிலையில், விமானத்தை கண்டறியும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில், USA-வை சேர்ந்த ஓஷன் இன்ஃபினிடி என்ற நிறுவனம், இந்த பணியை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகநேரம் ஆபாசப் படம் பார்த்தால் தாம்பத்ய உறவில் திருப்தி குறைவதாக ஆய்வு கூறுகிறது. 3,267 ஆண்களிடம் நடந்த ஆய்வில், ஆபாசப் படம் பார்க்கும் ஆண்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடும், இயல்பான செக்ஸ் உறவில் திருப்தியின்மையும் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. படங்களில் இடம்பெறும் உண்மைக்கு மாறான காட்சிகளை தொடர்ந்து பார்ப்பதால், இயற்கையாக உறவில் கிளர்ச்சி அடையும் திறன் குறைகிறதாம். ஆண்களே அலர்ட்!
ஜன.12இல் BCCIக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ICC தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்ற நிலையில், அவர் வகித்துவந்த BCCI செயலாளர் பதவி காலியானது. இந்நிலையில், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. செயலாளர் பதவிக்கு தேவ்ஜித் சைகியா, அனில் படேல், ரோகன் ஜெட்லி ஆகியோர் களத்தில் உள்ளனர். தற்போது, சைகியா இடைக்கால செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
Sorry, no posts matched your criteria.