India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது. அவரது பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை பாஜக இப்போது உணர்ந்திருக்கும். அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நமக்குள் இருக்கும் பிரச்னையை சரிசெய்ய வேண்டிய நேரம் இது” என்றார்.
ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணிக்கு அஸ்வின் மிகச்சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளதாகவும், அவருக்கு வாழ்த்துகளை கூறிக்கொள்வதாகவும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் பலரும் அஸ்வினை பாராட்டி, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
➤மேஷம் – சாந்தம்
➤ரிஷபம் – வெற்றி
➤மிதுனம் – விருத்தி
➤கடகம் – லாபம்
➤சிம்மம் – உயர்வு
➤கன்னி – முயற்சி
➤துலாம் – யோகம்
➤விருச்சிகம் – பரிவு
➤தனுசு – கீர்த்தி ➤மகரம் – நன்மை
➤கும்பம் – நட்பு ➤மீனம் – மேன்மை.
பும்ரா உலகத்தரம் வாய்ந்த பவுலர் என ஆஸி.முன்னாள் வீரர் பிரெட் லீ பாராட்டியுள்ளார். இந்திய அணியில் துரதிர்ஷ்டவசமாக முகமது ஷமி இல்லை, பும்ராவுடன் ஷமி இருந்திருந்தால், AUS-க்கு இந்தியா கடும் நெருக்கடி தந்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சிராஜ் சற்று தடுமாற்றத்துடன் இருந்தாலும், இந்திய அணியை தனது சிறப்பான பவுலிங் மூலம் பும்ரா தற்காத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. துணைவேந்தரை தமிழக அரசு நியமித்துள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெறுமாறு ஆளுநர் ரவி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் கோவி செழியன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், “யுஜிசி உறுப்பினர் ஒருவரை தேடுதல் குழுவில் நியமிக்க வேண்டும் என்பதே ஆளுநரின் நோக்கம். சட்டப்படியே தமிழக அரசு செயல்படுகிறது. இதில் ஆளுநர் தலையிட அவசியமில்லை” எனக் கூறியுள்ளார்.
ஆபாச இணையதளங்களுக்கு மாற்றாக சுவாரஸ்யமான வேறு ஒன்றை கண்டுபிடிப்பதே அதற்கு தீர்வாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆபாசப் படங்கள் என்பது உலகம் முழுவதும் இருக்கும் பிரச்னை. அசைவம் சாப்பிடுவது போல, ஒரு சகஜமாக மாறிவிட்டது. ஆபாசப் படத்தை பார்ப்பவர்கள், “இதை நான் ஏற்கெனவே பார்த்துவிட்டேன்” என கூறும் அளவுக்கு மனநிலை மாற வேண்டும் என்றார்.
நடிகர் அஜித் குமார் – இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
இப்படத்தில் த்ரிஷா, ஆரவ், அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய் TV நிகழ்ச்சி தொகுப்பாளரான VJ ரம்யா நடித்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக ஃபோட்டோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர். வரும் பொங்கலுக்கு ‘விடாமுயற்சி’ வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை பற்றி ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர் எண்ணிக்கை 39 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிபி சவுதரி தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவில் பாஜக -16 எம்பிக்கள், காங்.,-5, SP, TMC மற்றும் DMK – தலா 2, TDP, ஜன சேனா, YCP, சிவசேனா, JDU, RLD, LJSP(RV), சிவசேனா(UBT), NCP-SP, AAP, BJD மற்றும் CPI(M) கட்சிகளை சேர்ந்த தலா 1 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
கூகுளில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில், 10% பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அதன் CEO சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். செயல்திறனை மேம்படுத்தவும், டெக் துறையில் நிலவி வரும் AI தொழில்நுட்பம் உள்ளிட்ட சவால்களை சமாளிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக்
கூறப்படுகிறது. பல துறைகளில் இயக்குநர் & துணைத் தலைவர் பொறுப்புகளில் உள்ளவர்களும் பணி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய சூழல் நிலவுகிறது என்று அர்த்தம்.
Sorry, no posts matched your criteria.