India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025ம் ஆண்டு சீசன் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. PM மோடி தலைமையில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், சாதாரண கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவின்டாலுக்கு ₹420 உயர்த்தி, ₹11,582 ஆகவும், முழு கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ₹100 உயர்த்தி ₹12,100 வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளங்கையில் இருக்கும் ரேகை எதிர்காலத்தை பற்றி கூறும் என்பார்கள். அப்படி, உள்ளங்கையில் M ரேகை இருந்தால், நீங்கள் மிக அதிர்ஷ்டசாலிகள். எத்துறையில் இருந்தாலும், மற்றவர்களை மேலாண்மை செய்யக்கூடிய இடத்தில் இருப்பீர்கள். உங்களை ஏமாற்றுவது மிகவும் கடினம். ஆனால், நம்பிக்கை வைத்து ஏமாறுவீர்கள். பிறரை அதிகளவில் நம்புவது உங்களின் பலவீனமாகும். காதல் எளிதில் கைகூடும். உங்களுக்கு இதெல்லாம் பொருந்துதா?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ராஜஸ்தான் ஜெய்சல்மரில் இன்று GST கவுன்சிலின் 55வது ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், மருத்துவ, ஆயுள் காப்பீடு தொகைக்கு GST விலக்கு அளிப்பது உள்ளிட்ட, 148 பொருட்கள் மீதான வரி விகிதத்தை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. Swiggy, Zomato உணவு டெலிவரி தளங்களுக்கு விதிக்கப்படும் 18% வரியை குறைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவதால் செய்வதறியாது திகைத்து வருகிறார் ஒருங்கிணைப்பாளர் சீமான். “சங்கி என்றால் நண்பன்” என்று சீமான் பேசியதையடுத்து விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்ட நிர்வாகிகள், அவர் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டி விலகினர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி நிர்வாகிகளும் விலகியுள்ளனர். என்ன செய்யப் போகிறார் சீமான்?
உத்தர பிரதேசத்தில் திருமணமான முதல் இரவிலேயே மணப்பெண் பீர், கஞ்சா, மட்டன் ஆகியவற்றை கேட்டதால் மணமகன் விவாகரத்து கேட்டிருக்கிறார். மணப்பெண்ணுக்கு முன்னரே இத்தகைய பழக்க வழக்கங்கள் இருந்ததாக தெரிகிறது. இதனை முதலிரவில் அறிந்துகொண்ட மணமகன், உடனடியாக குடும்பத்திடம் கூறி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல, பஞ்சாயத்து விவாகரத்து வரை சென்றுவிட்டது.
சென்னையை அடுத்த திருப்போரூர் முருகன் கோயிலில் பக்தர் ஒருவர் தவறுதலாக iPhoneஐ உண்டியலுக்குள் போட்டுவிட, கோயில் அதிகாரிகள் அதனை திருப்பித்தர மறுத்துவிட்டனர். உண்டியலில் விழுந்த அனைத்தும் முருகனுக்கே சொந்தம் என்று அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. பின்னர், பக்தரின் கோரிக்கையை ஏற்று சிம் கார்டு மற்றும் தகவல்களை மட்டும் அவருக்கு வழங்கியுள்ளனர்.
PM மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று குவைத் நாட்டிற்கு செல்கிறார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது. இந்த பயணத்தில், இரு நாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ள அவர், அங்குள்ள இந்திய தொழிலாளர்களையும் சந்தித்து பேச உள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் குவைத் பயணிக்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
2025ல் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி மீது இருக்கும் எதிர்பார்ப்பை விட, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எப்போதும் மோதப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு அதிகளவில் உள்ளது. இதற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டதாக தெரிய வந்துள்ளது. அதாவது பிப்ரவரி 23, 2025 இப்போட்டி நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்போட்டி துபாயில் அல்லது இலங்கையின் கொழும்பில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
₹2.5 கோடி கடன் மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை சிபிஐ கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. இவர் 1991 – 96 அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர். 2010ஆம் ஆண்டு இவரும் நெல்லை IOB வங்கி மேலாளரும் சேர்ந்து ₹2.5 கோடி மோசடி செய்ததற்கான வழக்கில் தற்போது இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
₹1000 கோடி தான் டார்கெட்டாக மாறிவிட்ட சூழலில், அப்படங்கள் மட்டுமே அவ்வளவு சிறப்பானவையா? அந்த வசூலை எட்டிவிட்ட படங்கள் அனைத்துமே உங்களை மகிழ்வித்ததா? ஆரம்பம் முதல் இறுதி வரை அவ்வளவு ஈர்ப்பு உண்மையில் இருந்ததா? இவற்றில் வன்முறை அல்லது ஹீரோயிசம் தான் அதிகம் உள்ளது. அவையும் அந்த அளவிற்கு கொண்டாட வைத்ததா? படம் பார்க்கும் அனைவருக்குமே ஒரு கருத்து இருக்கும் அல்லவா, உங்கள் பதிலை சொல்லுங்களேன்..
Sorry, no posts matched your criteria.