India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பதி கோயிலில் ஜன.10 -19ஆம் தேதி வரையிலான, வைகுண்ட ஏகாதசி துவார தரிசனத்திற்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள், நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை மறுநாளும், மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்கள் 25ஆம் தேதியும் வெளியிடப்பட உள்ளது. மேலும், மார்ச்க்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 26ல் வெளியிடப்படும்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக காலில் பந்து தாக்கியதால் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக வலியில் துடித்த அவருக்கு பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளித்தார். இதன் காரணமாக மெல்போர்னில் டிச., 26ஆம் தேதி நடக்கவிருக்கும் BGT பாக்சிங் டே டெஸ்டின் 4ஆவது போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது
தனது எதிரி யார் என்பது குறித்து சீமான் பேசியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தவெகவால் நாதகவுக்கு பாதிப்பு ஏற்படுமா எனக் கேல்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து சீமான் கூறுகையில், என்னை எதிர்க்கும் அனைவரும் எனக்கு எதிரி அல்ல. நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்கள்தான் என் எதிரிகள். கருவில் இருக்கும் போதே எதிரியை குறித்துக் கொண்டு பிறந்தவன் நான் அது ஏற்கனவே FIXED எனக் கூறினார்.
கோயம்பேடு சந்தையில் நேற்று முதல்தர கத்திரிக்காய் கிலோ ரூ.70ஆகவும், 2ஆம் தர கத்திரிக்காய் ரூ.30ஆகவும் விற்கப்பட்டது. இன்று முதல் தரம் ரூ.60ஆகவும், 2ஆம் தரம் ரூ.20ஆகவும் குறைந்துள்ளது. கொத்தமல்லி கட்டு நேற்று ரூ.14 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டது. இன்று ரூ.2க்கு விற்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்தே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு காய்கறி வாங்கி செல்லப்பட்டு விற்கப்படுகிறது.
100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவோம் என்ற வாக்குறுதியை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் R.B.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது. மக்களின் குறைகளை சட்டமன்றத்திலே எடுத்து வைத்தால் தானே, அது அமைச்சர்களுடைய கவனத்திற்கு சென்று அதற்கு தீர்வு கிடைக்கும் என்றார்.
காலாவதியான, திருப்பி அனுப்பப்பட்ட உணவுப் பொருள் குறித்த விவரங்களை தங்களது சோசியல் மீடியாவில் ஒவ்வொரு காலாண்டும் பதிவிட உணவு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தரச்சோதனையில் நிராகரிக்கப்பட்ட, Expired ஆன உணவுப் பொருட்களை அழித்தல் போன்ற விபரங்களை மக்கள் எளிதில் அறிந்துகொள்ள எனவும் காலாவதியான பொருள்களை மீண்டும் பேக் செய்து விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் FASSI கூறியுள்ளது.
3 மாவட்டங்களுக்கு வரும் 24, 25ஆம் தேதிகளில் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றும், நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் 24, 25ஆம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
நாடு பாலின அதிகாரத்தை நோக்கி நகரும் சூழலிலும், இத்தகைய மரபுகள் நிலவுகின்றன. ம.பி.யில் “தடிச்சா பிரதா” பாரம்பரியத்தில், சொந்த குடும்பமே 8 வயது சிறுமிகளையும் சந்தையில் நிற்க வைக்கிறது. பணக்கார ஆண்கள் ₹2 லட்சம் வரை கொடுத்து மனைவியை ஏலத்தில் எடுக்கிறார்கள். இதற்கு அரசு முத்திரைத் தாளையும் உபயோகிக்கிறார்கள். நிதி தேவைக்கு ஓடுபவர்கள் இதை பாரம்பரியமாக எண்ணுகிறார்கள். அநீதி என எப்போது உணருவார்கள்?
தமிழகத்தில் நாளை 2024ம் ஆண்டில் பள்ளிகள் செயல்படும் கடைசி நாளாகும். மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளையுடன் (டிச.23) அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைகின்றன. அதைத்தொடர்ந்து, 24ம் தேதி முதல் மாணவர்களுக்கு 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. பின்னர், 2025 ஜன.2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
சாமுத்திரிகா சாஸ்திரப்படி, ஆட்காட்டி விரல், மோதிர விரலை விட நீளம் என்றால், எச்சூழலையும் சமாளிக்கும் பண்பு இருக்கும். அதிக கோபம் உடையவர் * ஆட்காட்டி – மோதிர விரல் ஒரே அளவு என்றால், வாழ்க்கையை திட்டமிட்டு நேர்மையாக வாழுபவர். ரகசியம் காப்பதில் கெட்டிகாரர் * மோதிர விரல், ஆட்காட்டி விரலை விட நீளம் என்றால், வெளிப்படையாக பேசுபவர். எதிர்பாலினரை ஈர்க்கும் தன்மை கொண்டவர். இதில் நீங்க எந்த லிஸ்ட்டு?
Sorry, no posts matched your criteria.