India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணிக்கு எதிரான போட்டிகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 5 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு ஃபார்மெட்களிலும் ஜோஸ் பட்லர் கேப்டனாக செயல்பட உள்ளார். கடந்த ஒரு வருடமாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ஜோ ரூட், இந்த முறை ODI அணியில் இடம்பெற்றுள்ளார்.
மாவட்ட கல்வி அலுவலகங்களில் (DEO) <<14951993>>கட்டணம் <<>>செலுத்தாததால் இணையசேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். எந்த DEO அலுவலகத்திலும் கட்டணம் நிலுவையில் இல்லை. மத்திய அரசு மார்ச் முதல் தரவேண்டிய ரூ.2,151 கோடி நிதி வராதபோதும் மாநில அரசு மாணவ, ஆசிரியர் நலனுக்காக சொந்த நிதியை செலவிடுவதாக அவர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, சலுகை அடிப்படையில் லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பெட்ரோல் வாங்குவோருக்கு மட்டும் இச்சலுகை வழங்குகிறது. இந்நிலையில், பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 33 காசுகள் குறைத்து ரூ.100.90க்கும், டீசல் விலையை 33 காசுகள் குறைத்து ரூ.92.48க்கும் விற்கின்றன. உங்கள் ஊரில் பெட்ரோல், டீசல் விலை என்ன?
மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4,000 அரசுப்பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், பிற பயன்பாட்டுக்காக இன்டர்நெட் இணைப்பை பிஎஸ்என்எல் அளித்துள்ளது. அந்தப் பள்ளிகள் ரூ.1.5 கோடி கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அங்கு INTERNET சேவை விரைவில் துண்டிக்கப்படக்கூடும் என சொல்லப்படுகிறது. அப்படி துண்டிக்கப்பட்டால் ஸ்மார்ட் வகுப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
தமிழ்நாட்டின் பண்பாடு- கலாச்சாரம்- உணர்வுகள் என எதையும் பாஜக அரசு மதிப்பதில்லை என கனிமொழி எம்பி கடுமையாக சாடியுள்ளார். பொங்கல் பண்டிகையை குறிவைத்து CA தேர்வுகள் நடத்த இருந்ததை எதிர்த்தால், அது மாற்றப்பட்ட நிலையில், தற்போது அதே நாளில் வேறொரு தேசியத் தேர்வை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதை அவர் வன்மையாக கண்டித்துள்ளார். மேலும், தமிழர் விரோத செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.
BGT தொடரில், விராட் கோலி இன்னும் 2 சதங்கள் அடிப்பார் என்று முன்னாள் BCCI தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இந்திய அணிக்காக விராட் கோலி நிறைய சாதனைகளை படைத்துள்ளார். அவரது சாதனைகள் அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அவர் நன்றாக விளையாடுவார். அவர் 3 சதங்கள் அடிப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
2026 தேர்தலில் DMK கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஆணவத்தில் பேசவில்லை, கலைஞரின் படை என்ற நம்பிக்கையில் பேசுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சி குறித்து இபிஎஸ் என்ன கதறினாலும் அவர் செய்த துரோகங்கள் மட்டுமே மக்களுக்கு நினைவிற்கு வரும் என்பதால் நிச்சயம் திமுகவுக்கே வெற்றி என நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, அகதிகளை வெளியேற்றுவேன் என்று டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, அதிபராக ஜன. 20இல் அவர் பதவியேற்கவுள்ளார். அவர் பதவியேற்றதும் அகதிகளை வெளியேற்றும் உத்தரவில் முதல் கையெழுத்திடுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், அங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்று ஜன.20ஆம் தேதியை நினைத்து பீதியில் உள்ளனர்.
சலார் படத்திற்கு பெருமளவு வரவேற்பு கிடைக்காதது தனக்கு ஏமாற்றம் அளித்ததாக இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். ‘KGF 2’ வெற்றியால் ஒருவேளை அலட்சியமாக இருந்துவிட்டேனா எனத் தோன்றியதாகவும், அதனால் ‘சலார் 2’ தன்னுடைய கெரியர் பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என அதீத உழைப்பை போட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வாழ்க்கையில் உறுதியாக உள்ள சில விஷயங்களில் ‘சலார் 2’ ஒன்று என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் Startup நிறுவனங்களின் எண்ணிக்கை 10,005 ஆக உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2021ல் 2,300 ஆக இருந்த எண்ணிக்கை, 3 ஆண்டுகளில் 4 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இதில் 4,925 நிறுவனங்கள் பெண்கள் தலைமையில் இயங்குவதாகவும் அரசு கூறியுள்ளது. மேலும், உலகின் டாப் Startup நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்து கொள்ளும் வகையில் 2025 ஜனவரியில் Global Startup Summit நடத்தப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.