India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், முடிவு கட்ட முடியவில்லை. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 56% அதிகரித்திருப்பது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்தாண்டில் 1,054 குழந்தை திருமணங்கள், இந்தாண்டில் இதுவரை 1,640 குழந்தை திருமணங்கள் நடந்திருப்பதும் உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை, ஈரோட்டில் அதிக திருமணங்கள் நடந்துள்ளன.
<<14958417>>கேல் ரத்னா விருது பரிந்துரையில்<<>> பெயர் இடம்பெறாதது குறித்து மனு பாக்கர் மனமுடைந்துள்ளதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்குக்கு இந்தியா சார்பில் விளையாட சென்றிருக்கக் கூடாது எனவும், தான் விளையாட்டு வீரராகவே ஆகியிருக்கக் கூடாது என்றும் மனு வருந்தியுள்ளார். அரசு நிச்சயம் மனுவின் சாதனைகளை அங்கீகரிக்க வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.
விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பெண்டாவேலன்ட் தடுப்பூசி முகாம் டிச.23 – 31 வரை நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை போடுவது மூலம் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, ஹெப்படைட்டீஸ் பி மஞ்சள் காமாலை மற்றும் ‘ஹிப்’ (Haemophilus influenzea )- மூளைக் காய்ச்சல், நிமோனியாவுக்கான தடுப்பு மருந்து) ஆகிய 5 தீவிர நோய் பாதிப்புகளில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்கலாம்.
கிரீன்லாந்தின் உரிமையும் கட்டுப்பாடும், அமெரிக்காவுக்கு அவசியம் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், ‘கிரீன்லாந்து எங்களுடையது; விற்பனைக்கு இல்லை’ என அந்நாட்டுப் பிரதமர் மூட் எகெடே தடாலடியாகக் கூறியுள்ளார். வெறும் 56,000 பேர் மட்டுமே மக்கள் தொகையாகக் கொண்ட கிரீன்லாந்து தீவு ஐரோப்பிய நாடான டென்மார்க் ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கட்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் நடிகர் அல்லு அர்ஜுனிடம் 3.30 மணிநேரமாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது. இந்த விசாரணையின் போது, 1.பிரீமியம் ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது தெரியுமா?, 2.பெண்ணின் மரணம் உங்களுக்கு எப்போது தெரிந்தது?, 3.எவ்வளவு நேரம் படம் பார்த்தீர்கள்?, 4.உங்களுடன் யார் யார் இருந்தனர்? உள்ளிட்ட 18 கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.20க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.18ஆக குறைந்திருந்தது. உருளைக்கிழங்கு விலை ரூ.20இல் இருந்து ரூ.18ஆகவும், அவரைக்காய் விலை ரூ.40இல் இருந்து ரூ.35ஆகவும் சரிந்திருந்தது. கேரட் ரூ.40இல் இருந்து ரூ.35ஆகவும், முருங்கைக்காய் ரூ.100இல் இருந்து ரூ.80ஆகவும், செள செள ரூ.20இல் ரூ.18ஆகவும், கொத்தமல்லி கட்டு ரூ.16இல் இருந்து ரூ.3ஆகவும் குறைந்திருந்தது.
NHRC தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த Ex நீதிபதி ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளதற்குக் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. PM மோடி தலைமையில் கடந்த 18ஆம் தேதி நடந்த உயர்மட்டக் குழுவில், ராகுல், மல்லிகாஜுன கார்கே பரிந்துரைத்த நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், குட்டியில் மேத்யூ ஜோசப் ஆகியோரது பெயர்களை, மத்திய அரசு நிராகரித்ததால் அடிப்படை செயல்முறையில் குறைபாடு என கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். கதையின் ஐடியாவை இறுதி செய்துவிட்டதாகவும், திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளுக்கான பணிகள் போய்க் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, AGS நிறுவனத்திற்கு SKவை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்ததாகவும், அது பின்னர் ‘தி கோட்’ படமாக மாறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து பேசிய விவகாரத்தில், அமித் ஷா மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். பட்டியலினத்தவர்களின் பெயரை கூறினால் மோட்சம் கிடைக்காது என்ற மனு ஸ்மிருதியின் கருத்தையே அமித்ஷா பிரதிபலித்துள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், இதன் மூலம் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிவதாகவும் கூறியுள்ளார்.
TN மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததையும், மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இதனை தடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.