News December 29, 2024

மோடிக்கு நினைவு பரிசு வழங்கிய குகேஷ்

image

உலக செஸ் சாம்பியன் குகேஷ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஒரிஜினல் செஸ் போர்டை பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக குகேஷ் வழங்கினார். மேலும் அந்த செஸ் போர்டில் குகேஷ் மற்றும் டிங் இருவரது ஆட்டோகிராஃபும் இடம்பெற்று இருந்தது.

News December 29, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 29 ▶மார்கழி- 14 ▶கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶சூலம்: மேற்கு ▶திதி: சதுர்தசி ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: கேட்டை ▶சந்திராஷ்டமம்: பரணி

News December 29, 2024

வளர்ந்து வரும் வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல்

image

2024க்கான ‘வளர்ந்து வரும் வீராங்கனை விருது’ பட்டியலில், ஷ்ரேயங்கா பாட்டீல் (IND) இடம் பிடித்துள்ளார். ஆப் ப்ரேக் வீசுவதில் வல்லவரான இவர், IPLஇல் RCB அணிக்காக விளையாடி வருகிறார். இதேபோல, பிரேயா சார்ஜென்ட்(IRE), சஸ்கியா ஹார்லி(SCOT), அன்னெரி டெர்க்சன்(SA) இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ICC சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, நடப்பாண்டில் ஷ்ரேயங்காவுக்கு கிடைக்குமா? கமெண்ட் பண்ணுங்க.

News December 29, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 29, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 29, 2024

அசைபோடுறத நிறுத்துங்க! நிம்மதியா தூங்குங்க!!

image

ராத்திரி ஆனாலே சிலருக்கு, பழச நெனச்சி தூக்கம் வராத அளவுக்கு மனசு அசைபோடும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் நாள்தோறும் இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில், சுத்தமான மஞ்சள் தூள், 2 விழுது பூண்டை இடித்து அரைத்து கலந்து பருகினால், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதேபோல, அத்திக்காய் பொடியை அரை ஸ்பூன் பாலில் கலந்து நாள்தோறும் இரவு குடித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

News December 29, 2024

பிக்பாஸிலிருந்து அன்ஷிதா, ஜெஃப்ரி எலிமினேட்?

image

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், அன்ஷிதா, ஜெஃப்ரி எலிமினேட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 8வது சீசன் BB, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் டாஸ்க்கில் சில போட்டியாளர்கள் இடம்பெறுவார்கள். வார இறுதியில் மக்கள் அளிக்கும் ஓட்டு அடிப்படையில் எலிமினேஷன் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜெஃப்ரி, நாளை அன்ஷிதா வெளியேற உள்ளதாக VIJAY TV வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News December 29, 2024

ராசி பலன்கள் (29-12-2024)

image

➤மேஷம் – எதிர்ப்பு
➤ ரிஷபம் – போட்டி
➤மிதுனம் – விவேகம்
➤கடகம் – அச்சம்
➤சிம்மம் – துன்பம்
➤கன்னி – தனம்
➤துலாம் – வீம்பு
➤விருச்சிகம் – பெருமை
➤தனுசு – இன்பம்
➤மகரம் – ஆசை
➤கும்பம் – அமைதி ➤மீனம் – தனம்.

News December 29, 2024

அப்போ சும்மா இருந்தீங்க? இப்போ கூவுறீங்க? கனிமொழி

image

பொள்ளாச்சி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத அதிமுகவினர், அண்ணா பல்கலை., விஷயத்தில் கூவி வருவதாக கனிமொழி விமர்சித்துள்ளார். தற்போது கைதான நபர், அதிமுக ஆட்சியிலேயே முக்கிய குற்றவாளியாக இருந்ததாக குறிப்பிட்ட அவர், அப்போதே கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றார். மேலும், அனைவரும் சுதந்திரமாக வாழும் சமூகத்தை CM ஸ்டாலின் உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

News December 29, 2024

ஜனவரி மாதம் விஜய் சுற்றுப்பயணம் தொடக்கம்?

image

தவெக கட்சியை தொடங்கியபிறகு, விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை விஜய் நடத்தினார். இதையடுத்து தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்து விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மாநாட்டைப் போல அடுத்த அரசியல் நகர்வும் வெற்றிகரமாக இருக்க விரும்புகிறார். இதை மனதில் வைத்து, மாநிலத்தில் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும், 2025 ஜன. இறுதியில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!