India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நவம்பரில் மத்திய& மாநில மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 111 மருந்துகள் தரமற்றவையாக இருப்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. அதன் ஆய்வில், “பீகாரில் PAN-40, AUGMENTIN 625 DUO போன்ற நிறுவனங்களின் ‘பிராண்ட்’ பெயர்களை அங்கீகரிக்கப்படாத சில உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி போலியாக மருந்துகளை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, இவற்றை தரத்தை ஆராய்ந்து பயன்படுத்துங்கள்.
மரண தண்டனை காலத்தின் தேவை என சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திரும்ப திரும்ப குற்றம் செய்பவர்களால் சமுதாயத்திற்கு அவமானம் என்றார். குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பயமுறுத்தப்படாமல் இருக்க விரைவில் நீதி கிடைக்க வேண்டுமெனவும், துணிச்சலாக புகார் அளித்த மாணவிக்கு சல்யூட் என்றும் பதிவிட்டுள்ளார்.
பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பை முகுந்தன் ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு கட்சியில் இணைந்தவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பா? வேறு யாரையாவது போடுங்க என பொதுக்குழு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவகாரம், தந்தை – மகன் மோதலாக வெடித்தது. இதனால் அன்புமணியை மீறி தனக்கு அந்த பொறுப்பு வேண்டாம் என்ற முடிவுக்கு முகுந்தன் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் கௌரவ பிரச்னையாக இருக்கிறது ₹1000 கோடி வசூல். ஹிந்தி படங்களை காட்டிலும், இந்த லிஸ்டில் தெலுங்கு படங்களே ஜாஸ்தி. ஒரு கன்னட படமும் இருக்கு. ஆனால், நமக்கு அது கனவாகவே உள்ளது. தரமான படங்களுக்கு நம் ஊரில் பஞ்சமில்லை என்றாலும், வசூல் படங்களும் தேவை தானே? 2025ல் வெளிவரும் முன்னணி நட்சத்திரங்களின் படம் அக்கனவை நனவாக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். எப்படம் அதை செய்து முடிக்கும்?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அண்ணாமலையை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டார். இந்நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக எப்போது சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறீர்கள் என திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். உங்கள் கருத்து என்ன?
சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 23 பைசா குறைந்து ₹100.80க்கு விற்பனையாகிறது. நேற்று அதன் விலை ₹101.03ஆக இருந்தது. நேற்று ₹92.61ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை இன்று 22 பைசா குறைந்து ₹92.39க்கு விற்பனையாகிறது.
அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, கடுகு எண்ணெய் ஊற்றி (150ml), சோம்பு, பட்டை, கிராம்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகாய் போட்டு தாளிக்கவும். சிக்கன் (1kg) துண்டுகளை சேர்க்கவும். பின் கரம் மசாலா, மஞ்சள், உப்பு சேர்த்து கலந்து விடவும். 500ml நீரை ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து 30 நிமிடங்கள் வரை நன்கு வேக வைத்து, மல்லி தூவி இறக்கினால் சுவையான பஞ்சாபி தாபா சிக்கன் கறி ரெடி.
காலநிலை மாற்றத்தால் உலகம் பாதிக்கப்பட்டு வருகிறது. வெப்பநிலை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ஏ23ஏ பனிப்பாறை அடுத்த ஒரு மாதத்திற்குள் உடைந்துவிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுக்கு அருகில் உறைந்துள்ள இந்த பனிப்பாறை உடைந்தால், கடல் நீர் மட்டம் உயர்ந்து, ஊருக்குள் கடல் நீர் புகும் ஆபத்தான சூழல்.
உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்றெண்ணி பலர் தங்களது உணவில் நெய்யை அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், நெய்யானது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். எப்படியெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, LDL கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அத்துடன் நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்னையில் இருந்து விடுபடலாம் என்கின்றனர்.
எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள 466 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (டிச.30) நிறைவடைய உள்ளது. Supervisor, Turner, Machinist உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி : 10th, ITI, UG Degree. வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹19,900-₹92,300. தேர்வு முறை: உடற்தகுதி, எழுத்துத் தேர்வு. கூடுதல் தகவலுக்கு இந்த<
Sorry, no posts matched your criteria.