News December 29, 2024

பாலியல் புகாரில் நாதக நிர்வாகி கைது

image

சென்னையில் ஐடி நிறுவன பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், நாதக நிர்வாகி சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிண்டி பகுதியில் வட்டிக்கு பணம் வழங்கும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் பணம் பெற்று திருப்பி செலுத்த முடியாத 40க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மூன்று பெண்கள் இவர் மீது புகார் அளித்திருக்கும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

News December 29, 2024

ச்சீ.. ச்சீ.. கிளாஸ் ரூமில் ஆசிரியர் செய்த பகீர் செயல்!

image

வேலியே பயிரை மேய்ந்த கதையாய் கிளாஸ் ரூமில் ஆசிரியர் ஒருவர் ஆபாச வீடியோ பார்த்ததோடு, அதனைத் தட்டிக்கேட்ட மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. உ.பியின் ஜான்சி அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, காயமடைந்த மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் குல்தீப் யாதவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மாதிரி ஒழுக்கம் கெட்ட ஆசிரியர்களை என்ன பண்ணலாம் கமெண்ட்ல சொல்லுங்க..

News December 29, 2024

மேடையில் சண்டை.. வீட்டில் சமரசம்!

image

பொதுக்குழு மேடையில் நேற்று ராமதாஸ், அன்புமணி வார்த்தை மோதல் வெடித்த நிலையில், இன்று தைலாபுரம் தோட்டத்தில் இருவரும் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அன்புமணியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய ஜி.கே.மணி உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News December 29, 2024

திரையரங்கம் என்னும் மாயாஜால அறை!!

image

படம் பார்க்கும் அந்த 3 மணி நேரம் என் கவலைகளை மறந்தேன் என்பார்கள். அதில், திரையரங்கிற்கும் முக்கிய இடமுண்டு. சிரிப்பு, கண்ணீர், பயம், காதல் என அந்த இருட்டு அறை கொடுக்காத உணர்ச்சியே இல்லை. கையடக்கத்தில் திரை இருந்தாலும், அந்த மாய அறை கொடுக்கும் உணர்விற்கு ஈடாகாது. பக்கத்தில் யார் இருந்தாலும் கவலைப்படாமல் நம் எமோஷன் இயல்பாக வெளிப்படும். உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத திரையரங்க அனுபவம் எது?

News December 29, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் மாலை 4 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

News December 29, 2024

விஜய் போல தெளிவு யாருக்கும் கிடையாது: கிச்சா சுதீப்

image

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் கிச்சா சுதீப், தற்போது ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘மேக்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சென்னையில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “விஜய் சார் பெரிய கனவு காண்பவர். அவரைப் போல தெளிவு யாருக்கும் கிடையாது. என்ன, எப்போது செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அதை அவர் மிக துல்லியமாக செய்வார்” என்று பாராட்டினார்.

News December 29, 2024

16 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்ட சிறுவன் உயிரிழப்பு

image

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் உயிரிழந்தார். பிப்லியா கிராமத்தைச் சேர்ந்த சுமித் மினா, நேற்று மாலை 140 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் 16 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 29, 2024

70 ஆண்டுகால சரித்திரத்தை உடைக்குமா ரோஹித் படை?

image

70 ஆண்டுகால மெல்போர்ன் மைதான வரலாற்றில் இதுவரை அதிகபட்சமாக சேசிங் செய்யப்பட்ட ஸ்கோர் 258 ரன்கள் மட்டுமே. ஆனால், தற்போது ஆஸி. 333 ரன்கள் லீட் எடுத்துள்ளது. இன்னும், ஒரு விக்கெட் ஆஸி. வசம் உள்ளது. WTC பைனல் செல்வதற்கு இந்த போட்டியின் வெற்றி இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. நாளை கடைசி நாள் ஆட்டத்தில் வேகமாக விக்கெட்டை எடுத்து, சரித்திர சாதனை படைக்குமா ரோஹித் படை?

News December 29, 2024

மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழை குறிப்பிட்ட பிரதமர்

image

தொன்மையான மொழி தமிழ் என்பதில் இந்தியர் அனைவருக்கும் பெருமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், உலக நாடுகளில் தமிழ் மொழியை கற்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறினார். கடந்த மாத இறுதியில் இந்திய அரசின் உதவியுடன் பிஜியில் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், கடந்த 80 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்றும் குறிப்பிட்டார்.

News December 29, 2024

அடுத்தடுத்து விழுந்து நொறுங்கும் விமானங்கள்!

image

4 நாட்களில் விமான விபத்தில் மட்டும் 219 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானத்தின் லேண்டிங் கியர் பழுதானதால் <<15008531>>சுவரில் மோதி வெடித்தது<<>>. இதில், 179 பேர் பலியாகினர். கனடாவின் ஹாலிஃபாக்ஸ் ஏர்போர்ட்டில் நேற்று தரையிறங்கிய விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. நல்வாய்ப்பாக பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர். கஜகஸ்தானில் கடந்த 25 அன்று விமானத்தில் சிக்கியதில் 38 பேர் பலியாகினர்.

error: Content is protected !!