News December 30, 2024

1 வருட இடைவெளி.. 1 ரன் மட்டுமே..

image

நீண்ட இடைவெளிக்கு பின் ODIயில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 1 ரன்னில் அவுட் ஆனார். விஜய் ஹசாரே டிராபி தொடரில் 2ஆவது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபியில் IND அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது நடந்துள்ளது. இருப்பினும், சிறப்பாக பவுலிங் வீசியதால் அவர் மீது நம்பிக்கை உள்ளதாகக் கூறப்படுகிறது. காயம் காரணமாக, கடந்த 2023 அக்டோபர் முதல் அவர் ODIயில் விளையாடவில்லை.

News December 30, 2024

‘சார்பட்டா 2’? மெகா அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்

image

ஆர்யா அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், அது ‘சார்பட்டா 2’ எனவும் சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், இதில் பாதி மட்டுமே உண்மை. ஆர்யா, ‘கெத்து’ தினேஷ் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடிக்கும் ‘வேட்டுவம்’ படத்தை இயக்க உள்ளதாக ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்தாலும், இந்த கூட்டணி மீண்டும் இணைவதை திரையில் காண காத்திருப்பதாக கூறுகின்றனர்.

News December 30, 2024

‘ரெட்ரோ’ டீசரில் இதை Watch பண்ணீங்களா?

image

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே வாய் பேச முடியாதவராக நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 25ஆம் தேதி வெளியான டைட்டில் டீசரில், பூஜா வசனம் எதுவும் பேசாமல் ரியாக்‌ஷன் மட்டுமே கொடுக்கும் காட்சிகளே உள்ளன. இதுவும், மேற்கூறிய தகவலை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. லவ் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம், 2025 கோடை விடுமுறையில் ரிலீசாக உள்ளது.

News December 30, 2024

BREAKING: 75 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

image

75 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 5 IAS அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையிலான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு முதன்மை செயலாளர் நிலையிலான பதவி, 19 பேருக்கு செயலாளர் நிலை பதவி, 18 பேருக்கு கூடுதல் செயலாளர் நிலை பதவி, 17 பேருக்கு இணை செயலாளர் நிலையிலான பதவி, 11 பேருக்கு இணை செயலாளர் நிலையிலான பதவி அளிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

எந்தெந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

image

ஆயுதப்படை ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வாலுக்கு, ஆயுதப்படை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி (நிர்வாகம்) ஜி. வெங்கட்ராமன் – சிறப்பு டிஜிபியாக (நிர்வாகம்) பதவி உயர்வு. ஏடிஜிபி வினித் தேவ் வான்கடே – காவல்துறை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு. ஐஜி தினகரன் – ஏடிஜிபியாக பதவி உயர்வு. ஏடிஜிபி சஞ்சய் மாத்தூர் – டிஜிபியாக பதவி உயர்வு. ஐஜி சோனல் மிஸ்ரா – ஏடிஜிபியாக பதவி உயர்வு.

News December 30, 2024

ராசி பலன்கள் (30-12-2024)

image

➤மேஷம் – நன்மை
➤ ரிஷபம் – சிரத்தை
➤மிதுனம் – சோர்வு
➤கடகம் – கவனம்
➤சிம்மம் – சாந்தம்
➤கன்னி – அமைதி
➤துலாம் – சுகம்
➤விருச்சிகம் – நலம்
➤தனுசு – புகழ்
➤மகரம் – பயம்
➤கும்பம் – பக்தி ➤மீனம் – பொறுமை.

News December 30, 2024

டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்குமார்

image

‘குட் பேட் அக்லி’ படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் அஜித் தொடங்கியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், 3 வேடங்களில் AK நடித்துள்ளார். த்ரிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் 2025 கோடையில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது. இந்த நிலையில், டப்பிங் பணியில் AK ஈடுபட்டுள்ளது தொடர்பான புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

News December 30, 2024

அதிமுகவுக்கு அண்ணாமலை பாராட்டு!

image

அண்ணா பல்கலை. விவகாரத்தில் போராட்டம் நடத்திய அதிமுகவை அண்ணாமலை பாராட்டியுள்ளார். மேலும், சாமானியனை பாதிக்கும் பிரச்னைகளில் அரசியல் இருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, அண்ணா பல்கலை.யில் மாணவியை வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன், ‘சார்’ எனக் கூறி போனில் பேசியதாக தெரிகிறது. இதனை சுட்டிக்காட்டி, “யார் அந்த சார்” என பதாகை ஏந்தி அதிமுக போராடியது குறிப்பிடத்தக்கது.

News December 30, 2024

இரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழை கொட்டும்

image

இரவு 1 மணி வரை 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இரவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

News December 29, 2024

BREAKING: 63 IPS அதிகாரிகள் பணியிட மாறுதல், பதவி உயர்வு

image

63 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி SP வருண்குமாருக்கு திருச்சி சரக டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ஆயுதப் படை சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாவட்ட எஸ்பி.க்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!