India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை, CM ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் +2 வரை படிக்கும் மாணவிகள் உயர்கல்வி பயில, TN அரசு மாதம் ₹1,000 வழங்குகிறது. இந்த திட்டம் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு கல்வியாண்டு முதல் 75,028 மாணவிகள் கூடுதலாக பயன்பெறுவார்கள்.
4வது டெஸ்டில் நிலைத்து நின்று ஆடிய வந்த பண்ட் 30 (104) ரன்களை எடுத்து ஹெட் பந்துவீச்சில் மார்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். இந்திய அணி 121/4 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 33 ஓவர்களில் 219 ரன்கள் தேவைப்படுகிறது. ஜெய்ஸ்வால் 70 (176) ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை பரவலாக மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹120 உயர்ந்துள்ளது. நேற்று ₹57,080க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹57,200ஆக விற்கப்படுகிறது. நேற்று ₹7,135ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று ₹15 உயர்ந்து ₹7,150ஆக உள்ளது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ₹100க்கு விற்கப்படுகிறது.
3 முக்கிய வீரர்கள் 33 ரன்களுக்குள் அவுட்டாக, ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் – பண்ட் நிலைத்து நின்று ஆடி வருகிறார்கள். தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 112/3 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 63 (159), பண்ட் 28 (93) ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள். இருவரும் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்கள். இன்னும் வெற்றிக்கு 38 ஓவரில் 228 ரன்கள் தேவைப்படுகிறது.
பாஜக தேசியத் தலைவரை தேர்வு செய்யும் பணிகள் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளன. இதில், 6 பேரின் பெயர்கள் முக்கியமாக அடிபடுகின்றன. பாஜக பொதுச் செயலாளர்கள் வினோத் தவ்டே, சுனில் பன்சால், ம.பி முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஹரியானா முன்னாள் முதலவர் மனோகர் லால் கட்டார், குஜராத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
டெஸ்ட் போட்டிக்கு மவுசு குறைந்து விட்டது என்ற கருத்தை முறியடித்துள்ளது மெல்போர்னில் கூடிய கூட்டம். கடந்த 1934-35 ஆஷஸ் தொடரின் போது, இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியை காண சுமார் 3,50,534 பேர் 6 நாட்களில் கூடினர். அந்த சாதனையை முறியடித்து தற்போது நடைபெற்று வரும் போட்டியை காண 5 நாட்களில் சுமார் 3,51,104 பேர் கூடியிருக்கிறார்கள். இது ஆஸி.யில் கிரிக்கெட் போட்டியை காண குவிந்த அதிகபட்ச கூட்டமாகும்.
அரசுப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான சேவை கட்டணத்தை செலுத்த, பள்ளிக் கல்வித்துறை ₹3.26 கோடியை விடுவித்துள்ளது. மொத்தம் 6,224 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இணையதள சேவைக்கான கட்டணத்தை 2025 செப்டம்பர் வரை செலுத்தும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை இணையதள சேவை நிறுவனங்களுக்கு செலுத்திய உடன், எமிஸ் தளத்தில் விவரங்களை பதிவேற்ற HMகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டேட் பேங்கில் Probationary Officers பதவிக்கு 600 காலியிடங்கள் உள்ளன. இளங்கலை பட்டம் முடித்த 30 வயதை கடக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி நடைபெறும். ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 16 ஆம் தேதி கடைசி நாள். <
கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கைதான் தன்னை வலிமையாக்குவதாக நடிகை ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். அவருடைய தந்தை கமல்ஹாசன் தீவிர கடவுள் மறுப்பாளர். இதனால் கடவுள் உடனான தொடர்பே இல்லாமல் வாழ்ந்ததாக கூறியிருக்கும் ஷ்ருதி, முதன்முதலில் கோயிலுக்கு சென்றபோது சிறப்பான அனுபவம் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார். அன்று முதல் இன்று வரை கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறாராம்.
Sorry, no posts matched your criteria.