News December 31, 2024

ரோஹித்துடன் கோலியை ஒப்பிடக் கூடாது: மஞ்ரேக்கர்

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவுக்கு ரோஹித் ஷர்மா தகுதியான பேட்ஸ்மேன் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ரோஹித் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது. அவருடைய தற்போதைய தடுமாற்றத்தை சரி செய்ய பேட்டிங் பயிற்சியாளர் முயற்சிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

News December 31, 2024

உட்கட்சி விவகாரத்தில் ECI தலையிட முடியாது: இபிஎஸ்

image

உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் (ECI) தலையிட முடியாது என EPS கூறியுள்ளார். ‘இரட்டை இலை’ தொடர்பாக ECI எழுப்பிய கேள்விக்கு, ADMK பொதுச் செயலாளர் இபிஎஸ் எழுதிய கடிதத்தை டெல்லியில் டிச.19இல் சி.வி.சண்முகம் அளித்தார். அதில், 2022 ஜூலை 11இல் நடந்த பொதுக்குழு தீர்மானங்களை ஆணையம் அங்கீகரித்துள்ளது எனவும், இரட்டை இலை தொடர்பாக இனி யார் மனுவையும் ஏற்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 31, 2024

மகள் டிச.9; தந்தை டிச.31

image

மகளை இழந்த தந்தை, மகள் தேடிய <<15027081>>விபரீத பாதையைத்<<>> தேடிக்கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான காமராஜை, அவரது மகள் சித்ராவின் தற்கொலை (9.12.2020) துயரில் தள்ளியது. சித்ராவின் மரண வழக்கில் 4 ஆண்டுகளாக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர், கடும் மன உளைச்சலில் இருந்த காமராஜ் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என அவரது உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

News December 31, 2024

பும்ராவை கேப்டன் ஆக்கிய ஆஸ்திரேலியா

image

2024ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ஒரு அணியை உருவாக்கியிருக்கிறது. அதில், நமது பும்ரா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜெய்ஸ்வால், டக்கெட், ஜோ ரூட், ரச்சின் ரவீந்திரா, ஹாரி ப்ரூக், கமிண்டு மெண்டிஸ், அலெக்ஸ் கேரி, மாட் ஹென்றி, ஹேசல்வுட், மஹாராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News December 31, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை

image

வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் தருவாயில் இருக்கும் நிலையிலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 14 செமீ மழை பதிவாகியிருக்கிறது. மேலும், நாலுமுக்கு – 13 செமீ, காக்காச்சி – 12 செமீ, மாஞ்சோலை – 10 செமீ என கனமழை பெய்திருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது.

News December 31, 2024

நாம் தமிழர் கட்சியினர் கைது!

image

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற NTKவினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வள்ளுவர் கோட்டத்தில், சீமான் தலைமையில் நடக்கவிருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனாலும், ஒன்று கூடுவோம் என சீமான் அழைப்பு விடுத்திருந்த நிலையில், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

News December 31, 2024

மாணவி வன்கொடுமை வழக்கு… தமிழக அரசிடம் NCW கேள்வி…

image

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். பல்கலைக்கழகத்தில் நடத்திய விசாரணை குறித்து பேசிய அவர், “ஏற்கெனவே பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை எப்படி சுதந்திரமாக நடமாட அனுமதித்தார்கள். பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டோம். இது தொடர்பாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்போம்” என தெரிவித்தார்.

News December 31, 2024

கீர்த்தி சுரேஷை பரிந்துரைத்த சமந்தா?

image

தெறி ஹிந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு சமந்தா தான் காரணம் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் அவர், “ ‘பேபி ஜான்’ படத்திற்கு என்னை பரிந்துரைத்தது சமந்தா தான். அதை வருண் தான் என்னிடம் கூறினார். ‘தெறி’யில் சமந்தா நடித்த அதே கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும் உண்மையில் பயமாக இருந்தது’ என்றார்.

News December 31, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

News December 31, 2024

மணாலியில் கடும் நெரிசல். யாரும் வராதீங்க!

image

ஹிமாச்சல் மாநில மணாலியில் பனிப்பொழிவு சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, அங்கு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அங்குள்ள லோக்கல் மக்கள் ‘யாரும் மணாலிக்கு வராதீங்க’ என்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனாலும், சுற்றுலாப் பயணிகள் அவர்களை விடுவதாக இல்லை..

error: Content is protected !!