News December 31, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

காலையில் இருந்து சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News December 31, 2024

உடனடியாக பதவி விலக வேண்டும்: பினராயி

image

கேரளாவை மினி பாகிஸ்தான் என்று கூறிய மகாராஷ்டிரா அமைச்சர் நிதிஷ் ரானேவுக்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின் மீது எடுத்துக்கொண்ட உறுதி மொழியை அமைச்சர் மீறியுள்ளதாகவும், சங்பரிவாரால் திட்டமிடப்பட்டு பரப்பப்படும் வெறுப்பு பரப்புரைகளை கேரள மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள் என்றும் கூறினார். நிதிஷ் உடனடியாக பதவி விலகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 31, 2024

மகளை மீட்க கையறு நிலையில் தவிக்கும் தாய்!

image

2017இல் ஏமனில் கொலை செய்த கேரள நர்ஸ் நிமிஷாவின் மரண தண்டனையை அந்நாட்டு அதிபர் உறுதி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் Blood Money (₹17 லட்சம்) ஏற்க மறுத்துவிட்டனர். இதனால், மகளை மீட்கப் போராடி வரும் ஏழைத் தாய் பிரேமா குமாரி, கேரள அரசு, வெளியுறவு அமைச்சகம் என நடையாய் நடந்து போராடி வருகிறார். நிமிஷாவை மீட்கக் கேரளாவில் Crowd Fund மூலம் ஏராளமான மக்கள் உதவி செய்திருந்தனர்.

News December 31, 2024

டாஸ்மாக்கில் நாளை முதல் QR CODE முறையில் விற்பனை

image

டாஸ்மாக் மது விற்பனையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதில், QR CODE முறையில் விற்பனை செய்வதும் ஒன்று. முதல்கட்டமாக ராணிப்பேட்டை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இது அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் நாளை முதல் விரிவுபடுத்தப்பட இருப்பதாகவும், மது வாங்குவோருக்கு பில் அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

News December 31, 2024

இதில் எந்த படத்திற்கு WAITING

image

2024ஆம் ஆண்டு வெளியான முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. அதேநேரம், சின்ன நடிகர்களின் படங்கள் வசூலை குவித்தன. இந்த சூழ்நிலையில் ரஜினியின் ‘கூலி’, கமலின் ‘தக் லைஃப், விஜய்யின் கடைசி படமான ‘Thalapathy69, அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’, சூர்யாவின் ‘Retro’ ஆகிய படங்கள் அடுத்தாண்டு வெளியாகிறது. இதில் எந்த படத்திற்கு நீங்க வெயிட்டிங் என்று கமெண்ட் பண்ணுங்க.

News December 31, 2024

சிக்சர் அடிப்பது மட்டுமே சாதனையல்ல: பாசித் அலி

image

டிராவிஸ் ஹெட் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயன்று ரிஷப் பண்ட் அவுட்டானது முட்டாள்தனம் என்று பாக். EX வீரர் பாசித் அலி விமர்சித்துள்ளார். அந்த விக்கெட்தான் ஒட்டுமொத்த போட்டியையும் மாற்றியதாகவும், கடவுள் கொடுத்த மூளையை பண்ட் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இந்திய அணிக்கு ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

2024இல் உங்களை கவர்ந்த தலைவர் யார்?

image

ஊழல் வழக்கில் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையால் அமைச்சர் பொன்முடி பதவியை இழக்கும் நிலை உருவானது முதல் நடிகர் விஜய் தொடங்கிய தவெக கட்சி, பொதுக்குழு மேடையில் ராமதாஸ், அன்புமணி சண்டை என பல்வேறு அரசியல் திருப்பங்களை 2024ஆம் ஆண்டு நமக்குக் கொடுத்துள்ளது. இந்த ஆண்டில் நீங்கள் மறக்க முடியாத அரசியல் சம்பவம் என்ன? உங்களைக் கவர்ந்த தலைவர் யார் என கமெண்ட்டில் சொல்லுங்க..

News December 31, 2024

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு

image

தேர்வர்களின் நலன் கருதி, TNPSC தொகுதி IA மற்றும் குரூப் 4 பணிகளின் தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. புதிய தேர்வுத் திட்டம் https://tnpsc.gov.in/tamil/scheme.html, முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் https://tnpsc.gov.in/tamil/syllabus ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இந்த இணையதளங்களில் அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

News December 31, 2024

ஒரே ஆண்டில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,600 அதிகரிப்பு

image

தங்கம் விலை சவரனுக்கு கடந்த ஓராண்டில் ரூ.9,600 அதிகரித்துள்ளது. 1 கிராம் ஆபரணத் தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி ரூ.5,910ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ. 47,280ஆகவும் இருந்தது. பின்னர் படிப்படியாக விலை அதிகரித்து இன்று 1 கிராம் விலை ரூ.7,110ஆகவும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 56,880ஆகவும் உள்ளது. அதாவது, கடந்த ஓரே ஆண்டில் 1 கிராம் ரூ.1,200ம், ஒரு சவரன் ரூ.9,600ம் அதிகரித்துள்ளது.

News December 31, 2024

மணிக்கு 450 km வேகத்தில் பயணித்து சீன ரயில் சாதனை

image

மணிக்கு 450 km வேகத்தில் பயணிக்கும் வகையிலான உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது. CR 450 புல்லட் ரயில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலானது நவீன தொழில்நுட்பங்களுடன் மிகச் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை ஓட்டத்தில் இருக்கும் ரயிலானது பல்வேறு சோதனை நிலைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளது. அதன் பின்னரே இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

error: Content is protected !!