India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கலை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஜன. 9 முதல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான டோக்கன், ஜன. 3 முதல் விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் தொகுப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு ரேசன் கடைகளுக்கு செல்வதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய சீமான், தவறு நடக்கும் இடங்களில் மட்டும் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல் போவது எப்படி என கேள்வியெழுப்பினார். மேலும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக நடத்தினால் போராட்டம். அதுவே இப்போது நாங்கள் நடத்தினால் நாடகமா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
2024இல் இந்தியாவுக்காக அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா (157 ரன்கள், 3 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். ஜெய்ஸ்வால் 29 இன்னிங்ஸில் 1,478 ரன்களை எடுத்து, டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் உள்ளார். டி20 போட்டிகளில் 436 ரன்கள் (12 போட்டி) எடுத்து சஞ்சு சாம்சன் முதலிடத்தில் உள்ளார்.
வாட்ஸ் அப்பில் லவ்வை சொல்லி, இன்ஸ்டாகிராமில் ‘கமிட்டட்’ ஸ்டேட்டஸ் போடும் இன்றைய தலைமுறையினர் இதை பார்த்திருக்கவே மாட்டார்கள். மனதுக்கு பிடித்த பெண்ணிடம் காதலை சொல்ல அன்றைக்கு இருந்த ஒரே ஆயுதம் கிரீட்டிங் கார்டுகள்தான். கடை கடையாக திரிந்து, ஹார்ட்டின் போட்ட கிரீட்டிங் கார்டுகளை வாங்கி, புத்தாண்டு தினத்தில் தயங்கி தயங்கி கொடுப்பதெல்லாம் வேற லெவல் ஃபீலிங். இதை அனுபவித்தவர்கள் கமெண்ட்டை தட்டுங்க.
UPI123Pay செயலி சாதாரண செல்போன்களுக்காக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மற்ற UPI பயனாளர்களுக்கு தினமும் ரூ.5,000 மட்டுமே அனுப்ப அனுமதி தரப்பட்டிருந்தது. இதை ரிசர்வ் வங்கி அண்மையில் ரூ.10,000ஆக உயர்த்தியது. இது ஜன.1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி, UPI123Pay மூலம் நாளை முதல் ரூ.10,000 தினமும் அனுப்பலாம். அதேநேரத்தில் GPAY, Paytm, PHONE PEக்கு மாற்றமில்லை.
போலீசாரால் கைது செய்யப்பட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் <<15027812>>சீமான்<<>> சற்றுமுன்பு விடுவிக்கப்பட்டார்.
மைசூரில் உள்ள Infosys நிறுவன வளாகத்தில் சிறுத்தை உலாவுவது கண்டறியப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் சிறுத்தையின் நடமாட்டம் CCTV கேம்ராவில் பதிவானதை தொடர்ந்து, வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பாதுகாப்பு நலன் கருதி ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுத்தப்பட்டுள்ளது. சிறுத்தை இந்த வளாகத்தில் நுழைவது இது முதல்முறை அல்ல. 2011இல் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்பட உள்ளது. பரிசுத்தொகுப்பு வழங்க ஏதுவாக விடுமுறை தினமான ஜன.3, 10 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகள் இயங்கும். இந்த விடுமுறையை ஈடுகட்ட ஜன.15, பிப்.22ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர் நாளை வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புத்தாண்டில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில், ஆக்ஷன், காதல், காமெடி என FULL ENTERTAINMENTஆக ட்ரெய்லரை இன்னும் செதுக்க வேண்டும் என்பதால், இயக்குநர் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
தென் மண்டல வானிலை மையத்தின் தலைவர் பாலச்சந்திரன் பிப்ரவரி 28ஆம் தேதி உடன் ஓய்வுபெறுகிறார். 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி பதவியேற்ற அவர் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய கஜா புயல், ஃபனி புயல், நிவர் புயல், புரேவி புயல், மாண்டஸ் புயல், மிக்ஜாம் புயல், ஃபெஞ்சல் புயல் ஆகியவற்றின் தாக்கம் குறித்தும், மழையின் பாதிப்பு குறித்தும் கணித்தவர்.
Sorry, no posts matched your criteria.