News January 1, 2025

பஞ்சாயத்து பைனல் ஆகிடுச்சு போலயே….

image

4வது BGT மேட்சில் பெரிய சலசலப்பை உண்டாக்கியது விராட் கோலி – சாம் கான்ஸ்டாஸ் மோதல். அதே போல, மேட்சில் பும்ரா – கான்ஸ்டாஸ் உரசலும் பெரிய அளவில் பேசப்பட்டது. 5வது போட்டிக்காக சிட்னி சென்றுள்ள விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோரை சாம் கான்ஸ்டாஸ் குடும்பத்தினர் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை வைத்து ரசிகர்கள் ஒருவேளை பஞ்சாயத்து பைனல் ஆகிடுச்சோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

News January 1, 2025

பயிர் காப்பீடு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு

image

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ₹69,515 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெல், உளுந்து, நிலக்கடலை, வாழை, வெங்காயம், மரவள்ளி, மிளகாய், பாசிப்பயறு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முன்மொழிவு படிவம், அடங்கல், ஆதார், வங்கி எண் உள்ளிட்டவற்றை பொது சேவை மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

News January 1, 2025

உருவாகிறது 13 புதிய நகராட்சிகள்

image

கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல், சென்னை, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகளின் விரிவாக்கம், காளையார்கோவில், திருமயம், ஏற்காடு உள்ளிட்ட 25 பேரூராட்சிகள் உருவாகின்றன. கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 1, 2025

விஜய் குறித்து இப்போ பதில் சொல்ல முடியாது: OPS

image

அண்ணா பல்கலை.விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக நீதிமன்றம் மூலம் தங்கள் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் எனக் கூறிய அவர், அதிமுக தொண்டர்களின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார். விஜய் – ஆளுநர் சந்திப்பு குறித்த கேள்விக்கு, அவரின் அரசியல் எதை நோக்கி செல்கிறது என்பதை பார்த்துதான் கருத்து சொல்ல முடியும் என்றார்.

News January 1, 2025

ஹமாஸின் டாப் தளபதியை கொன்ற இஸ்ரேல்

image

2023 அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும், ஹமாஸின் முன்னணி படைப் பிரிவான Nukhba பிரிவின் தளபதியுமான அப்துல் ஹாதி சபாவை அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத்திற்கு எதிராக பல தீவிரவாத தாக்குதல்களை சபா முன்னின்று நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேபோல், ஹமாஸின் அரசியல் பிரிவு துணை தலைவரான சலே அல் அரௌரியை கொலை செய்ததையும் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

News January 1, 2025

டைவர்ஸ் தொல்லையால் Woodbox Cafe சிஇஓ குரோனா தற்கொலை

image

பெங்களூரு <<14885192>>IT மேன் சுபாஷின்<<>> சோக வடு மறைவதற்குள், அதேபோல் நடந்த பிரச்னையில் Woodbox Cafe சிஇஓ புனீத் குரோனா தற்கொலை செய்து கொண்டுள்ளார். 2016இல் மணிகா என்பவருடன் திருமணமான நிலையில் டைவர்ஸ் வழக்கு நடந்து வருகிறது. Woodbox Cafe யாருக்கு சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இதில், குரானாவை மணிகா மிரட்டுவது உள்ளிட்ட 16 நிமிட ஆடியோ, வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 1, 2025

அன்று சுபாஷ், நேற்று புனீத்.. எமனாக மாறும் டைவர்ஸ்

image

ஆண்கள் பலவீனமாகி வருகின்றனர். மனைவி உடன் நின்றால் மலையையே நொறுக்கும் கணவனால், மனைவியின் தொல்லைகளை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. டைவர்ஸ் விவகாரங்களில் தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற விரக்தியில் கணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் பெங்களூருவில் சுபாஷ் தற்கொலை செய்துகொண்டார். நேற்று டெல்லியில் புனீத் குரானா உயிரை மாய்த்துக் கொண்டார். ஆண்களின் இந்த நிலை பற்றி உங்க கருத்து என்ன?

News January 1, 2025

விஜயகாந்த் வீட்டின் புதிய ஃபோட்டோ

image

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புதிய வீட்டின் ஃபோட்டோ, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை காட்டுப்பாக்கத்தில் அமைந்துள்ள வீடு சுமார் 20,000 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு அரசியல்வாதியை பார்க்க வரும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிற்க வசதியாக இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவதற்கு முன்னரே இந்த வீட்டில் குடியேறுவார் என தேமுதிகவினர் எதிர்பார்த்திருந்தனர்.

News January 1, 2025

கொள்ளையடிக்க மாச சம்பளம்: சாப்பாடு, தங்குமிடம் FREE

image

IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது. உடனே நெட்டிசன்கள் வேலைக்கு நாங்க வரலாமா? என கலாய்த்து வருகிறார்கள்.

News January 1, 2025

கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ ஆங்கிலப் புத்தாண்டு

image

ரெட்ரோ படத்தின் போஸ்டரை வெளியிட்டு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் கோடை விடுமுறையில் ரிலீஸாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!