India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஜன.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
தமிழகத்தில் 2024 டிசம்பர் மாதத்தில் GST வசூல் ₹10,956 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2023 டிசம்பரில் மாநிலத்தில் GST வசூல் ₹9,888 கோடியாக இருந்த நிலையில், 2024ல் 11% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. அதேநேரம், புதுச்சேரியில் GST வருவாய் 2% சரிந்து ₹288 கோடியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில் GST வரியாக ₹ 1.77 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது.
மில்கி பியூட்டி தமன்னாவின் காதலர் விஜய் வர்மா, அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். Vitiligo எனப்படும் நோயால் அவதிப்படுவதாகவும், முதலில் இதைப் பார்த்து பயந்ததாகவும், ஆனால் நாளடைவில் படங்களில் பிஸியானாதால் இதை மறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொற்று நோய் என்ற அபாயம் இல்லை என்றாலும், இதை குணப்படுத்தும் சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
BGT தொடரில் நட்சத்திர வீரர்களின் ஆட்டம் மிக மோசமாக உள்ளது. இது மிகப்பெரிய விமர்சனமாக மாறியது. இந்த சூழலில், 4வது டெஸ்ட் முடிந்தபிறகு, டிரெஸிங் ரூமில் “யாரும் சரியாக விளையாடவில்லை” என வீரர்களை கம்பீர் கடுமையாக பேசியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டிரெஸிங் ரூமில் நடந்தது அங்கேயே தான் இருக்க வேண்டும். இந்த தகவல்கள் எப்படி கசிந்தது? என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (ஜன.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் என்ற பொய்யைத் தவிர, வேறு எதையும் கேட்க விரும்பாத மாய உலகில் ஸ்டாலின் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் என அன்புமணி விமர்சித்துள்ளார். இப்படிப்பட்ட முதல்வரை பெற்றதற்கு தமிழகம் என்ன புண்ணியம் செய்ததோ தெரியவில்லை என சாடிய அவர், கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் பெண் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 7 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலம் முழுவதும் 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என்று அன்பில் மகேஷ் கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தனியார் பள்ளிகள் சிஎஸ்ஆர் மூலம் பங்களிப்பார்கள், உதவுவார்கள் என்று தான் சொல்லப்பட்டது. அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கும் நோக்கமில்லை என்று தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
நீங்கள் போடும் கையெழுத்து உங்களின் ஆளுமை பண்புகளை வெளிப்படுத்தும் என சைக்காலஜிஸ்ட் இதழ்கள் கூறுகின்றன. ஆண்களில் பெரிதாக கையெழுத்து போடுபவர்கள், தைரியமானவர்களாக இருப்பதாக உருகுவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பெண்களில் பெரிய கையெழுத்து போடுபவர்கள், Narcissistic எனப்படும், தனக்கே அதீத முக்கியத்துவம், தன்னை சுற்றியே அனைத்தும் நடக்க வேண்டும் என்ற பண்புகளை கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
2025 ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்பதுதான் எங்களின் இலக்கு. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன. எங்களின் இருபெரும் தலைவர்களான MGR, ஜெயலலிதாவிட்டு சென்ற பணியை தொடர்ந்து செய்வோம். இந்த ஆண்டில் அணிகள் இணைப்பு உறுதியாக நடைபெறும்” என்றார்.
ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் டாப் 10 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியில் இருந்து ஒருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார். குறிப்பாக, கோலி, ரோகித், ராகுல் போன்ற நட்சத்திர வீரர்கள் கூட இடம்பெறவில்லை. ஜெய்ஸ்வால் மட்டும் 854 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜோ ரூட் முதலிடத்திலும், ஹாரி புரூக் 2வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 3வது இடத்தையும், டிராவிஸ் ஹெட் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.