News January 3, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 3 ▶மார்கழி- 19 ▶கிழமை: வெள்ளி ▶ நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 PM – 12:00 PM ▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM ▶குளிகை: 07:30 PM – 09:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶நட்சத்திரம்: அவிட்டம் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

News January 3, 2025

Vi பயனர்களுக்கு குட் நியூஸ்

image

சந்தையில் போட்டியாளர்களை எதிர்கொள்ள வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம் புதிய திட்டங்களை வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Jio, Airtel நிறுவனங்கள் தற்போது வழங்கி வரும் 5G திட்டங்களை விட 15% குறைவான விலையில் சேவையை வழங்க Vi முடிவு செய்துள்ளதாம். 5G சேவையை தாமதமாக தொடங்கிய Vi, வரும் மார்ச் மாதம் இந்தியாவில் 75 நகரங்களில் இச்சேவை கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்து வருகிறதாம்.

News January 3, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜன.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News January 3, 2025

பெண்கள் எங்கு தான் செல்வது?

image

பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தமிழகத்தில் பல கல்லூரிகளில் இருந்தும் தங்களுக்கு கடிதம் வருவதாக செளமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்ணா பல்கலை. மாணவிக்காக மட்டும் தான் போராடுவீர்களா, தங்களுக்காகவும் போராடுங்கள் என பலர் கடிதம் அனுப்புவதாக கூறிய அவர், எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தால் பெண்கள் எங்கு தான் செல்வது என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 3, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜன.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News January 3, 2025

15% பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய அண்டை மாநிலம்

image

கர்நாடகாவில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. வரும் 5ஆம் தேதி முதல் அங்கு 15% பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகளிருக்கு வழங்கப்படும் இலவச பேருந்து பயணத்தால் மாதம் ரூ.417 கோடி இழப்பு ஏற்படுவதாகவும், அதை ஈடு செய்யவே இந்த கட்டணம் உயர்வு என்றும் கூறப்படுகிறது.

News January 3, 2025

தூங்கும் போது போனை எங்கு வைக்கலாம்?

image

பெரும்பாலானோர் தூங்கும் போது போனை தலையணைக்கு அடியிலோ, அல்லது கைக்கு எட்டும் தூரத்திலோ வைக்கின்றனர். ஆனால் இது உடல் நலத்தை பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பக்கத்து ரூமில் போனை வைத்துவிட்டு தூங்கவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்னதாகவே போனை ஆஃப் செய்ய வேண்டும் எனவும், நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால், போனை Flight Modeல் போடுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

News January 3, 2025

₹550Crல் மகளுக்கு திருமணம்.. பணக்காரர் வீழ்ந்த கதை

image

தொழிலதிபர் லக்‌ஷ்மி மிட்டலின் சகோதரர் பிரமோத், கடந்த 2023ல் தனது மகளுக்கு ₹550 கோடி செலவில் திருமணம் செய்து வைத்தார். ஆனால், தற்போது சொந்த செலவுக்குக் கூட மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது நிறுவனமான GIKIL, $116 mn கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வீழ்ச்சி தொடங்கியது. 2019ல் போஸ்னியாவில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். கர்மா! உங்களது ஒவ்வொரு செயலுக்கும் பதிலளிக்கும்.

News January 3, 2025

OTT நிறுவனங்களை ரோஸ்ட் செய்த அனுராக்

image

OTT நிறுவனங்களுக்கு இந்திய சினிமா புரியவில்லை என இயக்குநர் அனுராக் காஷ்யப் விமர்சித்துள்ளார். OTT நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் டிவியில் இருந்து வந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு சினிமா அனுபவம் இல்லை எனவும், பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களே இங்கு ஸ்ட்ரீம் ஆவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், OTTயின் வீழ்ச்சிக்காக காத்திருப்பதாகவும், அதன் பின் நல்ல படங்களை எடுக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

News January 3, 2025

IND vs AUS: 5ஆவது டெஸ்ட் எப்போது தொடங்கும்?

image

IND vs AUS மோதும் கடைசி டெஸ்ட் போட்டி, நாளை அதிகாலை 5 மணிக்கு சிட்னி மைதானத்தில் தொடங்க உள்ளது. டிவியில் Star Sports சேனலிலும், ஸ்ட்ரீமிங் தளத்தில் Disney+Hotstarலும் பார்க்கலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல, இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 1-2 என்ற அளவில் ஆஸி., அணி முன்னிலையில் உள்ளது.

error: Content is protected !!