News January 3, 2025

போலீசார் அடித்தால் திருப்பி அடிக்க சட்டத்தில் இடம் உண்டா?

image

சில போலீசார் அதிகாரத்தை மீறி, மக்களை பொதுவெளியில் தாக்குவார்கள். பலரும் மரியாதை, பயத்தின் காரணமாக அமைதியாக இருந்து விடுகிறார்கள். ஆனால், தேவையற்ற சூழலில் போலீஸ்காரர் ஒருவர் தாக்கினால், அவர்களிடம் இருந்து தற்காத்து கொள்ள தாக்கலாம். அப்போது, உங்களுக்கு BNS 35 சட்டம் உதவும். கிரிமினல் அத்துமீறல் குற்றங்களுக்கு எதிராக ஒருவர் தனது சொந்த உடல், சொத்து போன்றவற்றை தற்காத்து கொள்ள சட்டத்தில் இடம் உண்டு.

News January 3, 2025

பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் தொடங்கியது

image

பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கவுள்ளது. இதற்காக, வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ரேஷன் அதிகாரிகள் அவர்களது லிமிட்டில் உள்ள வீடுகளுக்கு டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனர். 9ஆம் தேதி முதல் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடங்குகிறது.

News January 3, 2025

எதையாவது சொல்லி பாலிசியை ரிஜெக்ட் பண்றாங்க!

image

பெரும்பாலான மருத்துவ காப்பீடு பாலிசிதாரர்கள் திருப்திகரமாக இல்லையென ஆய்வில் தெரியவந்துள்ளது. Local Circles நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த 3 ஆண்டுகளில் நியாயமற்ற முறையில் பாதி அல்லது முழு கிளைம் ரிஜக்‌ஷனை எதிர்கொண்டதாக பாலிசிதாரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் 327 மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் 33% பேர் பாதி கிளைம் கிடைத்ததாகவும், 20% பேர் கிளைம் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

News January 3, 2025

காஷ்மீரின் பெயர் மாற்றம்?

image

காஷ்மீரின் பெயரை ‘காஷ்யப்’ என்று மாற்றலாம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா யோசனை தெரிவித்துள்ளார். நேற்று அம்மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்து துறவி ‘காஷ்யப்’ வாழ்ந்த மண் இது என்பதால் இம்மாநிலத்தின் பெயரை அவ்வாறாக மாற்றலாம் என்றார். ஏற்கெனவே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை பாஜக அரசு ரத்து செய்த நிலையில் அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார்.

News January 3, 2025

திமுக எம்பி வீட்டில் ED சோதனை

image

வேலூர் காந்தி நகரில் திமுக எம்பியும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் வீட்டில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனின் 2 வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலின் போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து 11 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

News January 3, 2025

சம்பளத்தை குறைத்த ராம் சரண், ஷங்கர்?

image

‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக ராம் சரணும், ஷங்கரும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ள நிலையில், தயாரிப்பு பணிகள் தாமதமாகியுள்ளன. இந்நிலையில், ராம் சரண் ₹65 கோடியும், ஷங்கர் ₹15 கோடியும் சம்பளத்தைக் குறைத்துள்ளார்களாம்.

News January 3, 2025

தென் கொரியாவில் மீண்டும் பதற்றம்

image

பதவிநீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக்கை கைது செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தென் கொரியாவில், கடந்த மாதம் ராணுவ ஆட்சியை யூன் சுக் அமல்படுத்தினார். 6 மணிநேரத்தில் அது விலக்கிக் கொள்ளப்பட்டாலும், இதன் பின்னணியில் சதித் திட்டம் இருப்பதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகதால் அவரை கைது செய்ய கோர்ட் ஆணையிட்ட நிலையில், விரைவில் அவரை கைது செய்ய உள்ளனர்.

News January 3, 2025

இன்று கைதாகும் பாஜகவினர்

image

தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று பாஜகவினர் அறிவித்துள்ளதால் மதுரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மகளிர் அணி இன்று மதுரையில் போராட்டம் நடத்தவுள்ளது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்திருக்கும் நிலையில் கைது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பாமக, அதிமுக, நாதக இதுபோல் கைது செய்யப்பட்டனர்.

News January 3, 2025

படத்தில் இருக்கும் எண்களை 10 வினாடிக்குள் சொல்லுங்கள்

image

வெகுநேரமாக சும்மா உட்கார்ந்து ரீல்ஸ் அல்லது ஏதோ ஒரு வீடியோவை பார்த்தவாறே இருக்கிறீர்கள். இந்த Optical Illusions உங்களின் மூளையை கொஞ்சம் சுறுசுறுப்பாக்கி, கண் நரம்புகளுக்கு வேலை கொடுக்கும். இந்த படத்தில் இருக்கும் எண்களை உங்களால் 10 வினாடிக்குள் கண்டுபிடிக்க முடிகிறதா பார்த்து சொல்லுங்கள். என்ன நம்பர் என்பதையும் கமெண்டில் பதிவிடுங்கள். SHARE IT.

News January 3, 2025

இஸ்ரேல் தாக்குதலில் 68 பேர் பலி

image

காசா மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன் – இஸ்ரேல் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு தொடங்கிய அடுத்த நாளே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் போலீஸ் உள்ளிட்ட 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காசாவில் அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இதுவாகும்.

error: Content is protected !!