India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகக்கோப்பை T20 தொடரை வென்று உச்சத்தில் இருந்தது இந்தியா. ஜூலை மாதம் தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்தார். இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடர் (0-2), சொந்த மண்ணில் நியூசி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் (0-3), தற்போது BGT (3-1) என பெரிய தோல்விகளை இந்தியா கண்டுள்ளது. கம்பீர் Era இது தானா என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வினவி வருகிறார்கள்.
ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து ‘வேள்பாரி’ படத்தை தொடங்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார். இது தனது கனவுத் திரைப்படம் என்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் இப்படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளை முடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல், விகடனில் தொடராக வெளியானது குறிப்பிடத்தக்கது.
BGT தொடரை வென்றால், WTC இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்தது. அதே உத்வேகத்துடன் இந்தியா முதல் டெஸ்டை வென்ற போதிலும், தற்போது தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்து, தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதே நேரத்தில் ஆஸி. அணி WTC பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவை ஆஸி. அணி ஜூன் 11 ஆம் தேதி எதிர்கொள்கிறது.
சென்னையில் சிக்கன் விலை இன்று கிலோ ₹230 முதல் ₹260 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மொத்த கோழி பண்ணையில் கறிக்கோழியின் (உயிருடன்) விலை மாற்றமின்றி கிலோ ₹98ஆக உள்ளது. முட்டைக்கோழி (உயிருடன்) கிலோ ₹83க்கு விற்கப்படுகிறது. முட்டையின் விலை மொத்த சந்தையில் ₹5.30க்கு விற்பனையாகிறது. சென்னையில் முட்டை ₹6 முதல் ₹7க்கு விற்பனையாகிறது.
1996ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் BGT தொடரில் இதுவரை இந்திய அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. ஆஸி. அணி 5 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும் கடைசியாக நடைபெற்ற 4 தொடரிலும் அந்த அணி தோல்வியை தான் சந்தித்திருந்தது. 2014ல் கடைசியாக வென்றிருந்த ஆஸி., 10 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் மீண்டும் BGT தொடரை கைப்பற்றியுள்ளது.
திடீரென வெளியீட்டு தேதியை அறிவித்து பொங்கலை களைகட்ட வைத்துள்ளது மதகஜராஜா. படத்தில் நம்மை ரசிக்க வைத்த மறைந்த கலைஞர்கள் உள்ளனர். மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டி பாபு, சீனு மோகன் போன்றோர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். காமெடியை மையமாக வைத்து உருவான படம் பார்க்கும் போது, பல இடங்களில் நம்மை சட்டென “ச்சே” என சொல்ல வைக்க போகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்ட்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் போலீஸ் ஒருவரும் உயிரிழந்திருக்கிறார். 2026ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லா நாடு என்ற குறிக்கோளுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து, அவ்வப்போது என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் நாராயண்பூரில் என்கவுண்ட்டர் நடந்திருக்கிறது.
இது ‘தோழமைக்கு’ இலக்கணம் அல்ல! என முரசொலியில் வந்துள்ள கட்டுரை திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?’ என கே.பாலகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்காக வெளிவந்துள்ள இந்த கட்டுரையில், பின் விளைவுகளை அறியாமல் திமுகவுக்கு எதிரான சதிக் கூட்டத்துக்கு K.B. தீனி போடுகிறார் என கடுமையாக சாடியுள்ளது. இது மறைமுகமாக அவரை மிரட்டுவது போல் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2025ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி நாட்டில் உள்ள டாப் 5 பணக்காரர்களின் பட்டியலை தொகுத்திருக்கிறோம்.
1) முகேஷ் அம்பானி – ₹10 லட்சம் கோடி
2) கவுதம் அதானி – ₹9.86 லட்சம் கோடி
3) சாவித்ரி ஜிண்டால் – ₹3.7 லட்சம் கோடி
4) ஷிவ் நாடார் – ₹3.4 லட்சம் கோடி
5) திலீப் சங்வி – ₹2.7 லட்சம் கோடி
அமைச்சர் துரைமுருகனின் மகனும், எம்பியுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியிலிருந்து ₹2.5 கோடியை ED அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் ஏதும் எடுத்துச் செல்லவில்லை என அமைச்சர் நேற்று கூறியிருந்தார். ஆனால், கல்லூரியிலிருந்து கணக்கில் வராத ரொக்கம், பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே துரைமுருகன் டெல்லி விரைந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.