India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு, அபராதம் விதிப்பது, பேருந்தை சிறைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்.
Creativity என்ற பெயரில் நள்ளிரவு 3.33 மணிக்கா பாட கூப்பிடுவது என ஏ.ஆர்.ரஹ்மானை பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா சாடியுள்ளார். அதனால் தான் அவரது இசையில் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டப்பிங், பாடல் என படு பிஸியாக இருந்த தன்னை, நீண்ட நேரம் வெயிட் செய்ய வைத்து, இரவு தூங்கியதும் பாட அழைத்ததாகவும், அது முதல் இது தனக்கான இடம் இல்லை என முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.
டெல்லி கல்காஜி தொகுதியின் BJP MLA வேட்பாளர் ரமேஷ் பிதுரி, பிரியங்காவின் கன்னங்களைப் போல பளபளவென்று சாலைகளை சீராக மாற்றுவேன் எனக் கூறியுள்ளார். இது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்., பெண்களை அவமரியாதை செய்தது மட்டுமல்லாமல், அப்பகுதி மக்களையும் அவமானப்படுத்தி உள்ளார். அவர் மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
விஜய் ஹசாரே டிராபி தொடரில் சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 301 ரன்கள் குவித்துள்ளது. தமிழக அணி தரப்பில் விஜய் சங்கர் 71 , இந்திரஜித் 75 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் தமிழக அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 301 ரன்கள் எடுத்தது. சத்தீஸ்கர் தரப்பில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 302 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சத்தீஸ்கர் அணி ஆடி வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. <
CPI (M) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பதவி விலக முடிவு செய்துள்ளார். கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது. அடுத்த மாதம் 72 வயது ஆவதையொட்டி, தன்னை பொறுப்புகளில் இருந்து விடுவிக்கக்கோரி, மாநில மாநாட்டில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், அவருக்கு பதில் விரைவில் புதிய மாநிலச் செயலாளர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை தனியார் ஹாஸ்பிட்டலில் நடிகர் பிரபுவுக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பெரிய ரத்தநாளமான நடுத்தர பெருமூளை தமனியின் பிளவுகளில் உள் கரோடிட் தமனியின் மேற்புறத்தில் வீக்கம் இருந்துள்ளது. அதை சரி செய்ய அங்கு ஆபரேசன் நடந்துள்ளது. இதையடுத்து பிரபுவின் உடல்நிலை சீரானதாகவும், பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் கூறுகின்றன.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், PM மோடி எழுதிய “எக்ஸாம் வாரியர்ஸ்” புத்தகத்தை படிக்க வேண்டும் என ஆளுநர் ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் 5,000 மாணவர்களை, தனியார் டிரஸ்ட் இன்று இன்பச் சுற்றுலா அழைத்து சென்றது. இதனை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆளுநர், மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, கல்வி மட்டுமே பிறருக்கு நன்மை செய்யும் பலம், வலிமை மற்றும் தலைமைப் பண்பை கொடுக்கும் என ஆலோசனை வழங்கினார்.
டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோரிடம் கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கும் வகையில் QR கோடு முறையில் பில் வழங்கும் நடைமுறை 11 மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த முறை ஜன.15-க்குள் மேலும் 10 மாவட்டங்களிலும், பிறகு மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக அமலானால், அனைத்து மதுபிரியர்களுக்கும் பில் கிடைக்கும், பணமும் மிச்சமாகும்.
இந்தியாவிற்கு எதிரான BGT தொடரை 3- 1 என்ற கணக்கில் வென்று கோப்பையை ஆஸி., கைப்பற்றியது. இந்த வெற்றியை, ஆஸி., வீரர்கள் மட்டுமல்லாமல், அந்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, ஆஸி.,வின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட், புதிதாக பிறந்த தனது குழந்தை மற்றும் மனைவி, மகளுடன் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்ட கோப்பைக்கு முன், சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.