India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனியார் மதுக்கடையைக் காலை 8 மணிக்கே திறந்து வைத்து மது விற்பனை செய்ததை அம்பலப்படுத்தியதற்காக பாஜக மாவட்டத் தலைவர் கைது செய்யப்பட்டதாக அண்ணாமலை கொந்தளித்துள்ளார். மக்களுக்கு அரணாக செயல்பட வேண்டிய DMK அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்த அவர், தமிழகக் காவல்துறையும் திமுகவின் ஒரு பிரிவு போல் செயல்படாமல் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
விஜய் ஹசாரே தொடரில் சத்தீஸ்கர் அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. முதலில் விளையாடிய தமிழகம், 301 ரன்கள் குவித்தது. விஜய் சங்கர் 71, இந்திரஜித் 75 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய சத்தீஸ்கர், 46 ஓவரில் 228 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி 18 புள்ளிகளை பெற்று நாக் அவுட் சுற்றுக்கு இரண்டாவது அணியாக முன்னேறியுள்ளது.
சிவகங்கையில் படப்பிடிப்பின் போது இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சைக்கு பின் அவர் சட்டையை போடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், யாரும் தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிலர் எப்போது பார்த்தாலும் தனியாகவே இருப்பார்கள். என்றைக்காவது தனியாக இருந்தால் பிரச்னை கிடையாது. ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர், பொழுதுபோக்கு என எதற்கும் நேரம் செலவிடாமல் எப்போதுமே தனிமையிலேயே இருப்பது, டிப்ரஷன் போன்ற மனம் சார்ந்த நோய்களை மட்டுமல்லாமல் இதய நோய், ஸ்ட்ரோக், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களை உருவாக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலை. ஆய்வில் தெரியவந்துள்ளது. SHARE IT.
இறந்ததற்கு பிறகு எதுவுமே நமக்கு தெரியாது என்றுதானே நினைக்கிறோம். ஆனால், அப்படி கிடையாது என கூறுகிறது புது ஆய்வு. அதாவது, நாம் இறந்த பிறகும் என்ன நடக்கிறது என்று மூளைக்கு தெரியுமாம். அதாவது, நாம் இறந்துவிட்டோம் என மற்றவர்கள் கூறுவதும் நமக்கு தெரியும். ஆனால், மூளை இயக்கம் நின்றுவிட்டதால் நம்மால் உடலை அசைக்க முடியாதாம். ஆனால், இந்த உணர்வு சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
CPI-M புதிய மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்துக்கு, துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். மலைவாழ் பழங்குடியினர், விவசாயத் தொழிலாளர்கள் நலனுக்கு உழைத்ததற்காக தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது பெற்றதை குறிப்பிட்டுள்ள உதயநிதி, மக்கள் பணியை அவர் தொடர்ந்து சிறப்பாக செய்வார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு துருக்கி ஆதரவு குழுக்களுக்கும், சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இந்தச் சண்டையில், 2 நாள்களில் மொத்தம் 101 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பலியானோரில் 85 பேர் துருக்கி ஆதரவு குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 16 பேர் சிரியாவை சேர்ந்த குர்து படையினர் என்றும் கூறப்படுகிறது.
‘முபாசா: தி லயன் கிங்’ ஹாலிவுட் படம் உலகம் முழுவதும் நேற்றுவரை ரூ.3200 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.150.5 கோடி வசூலை எட்டியுள்ளது. ஹிந்தி வெர்சன் ரூ.46.98 கோடி, தமிழில் ரூ.23.65 கோடி, தெலுங்கில் ரூ.16.84 கோடி வசூல் செய்துள்ளது. டிச.20 வெளியான படம், 16 நாள்களில் இந்த சாதனையை எட்டியுள்ளது. குழந்தைகளுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்ததால், படம் பெரிய வெற்றி பெற்றது. நீங்கள் பார்த்துவிட்டீர்களா?
அணியின் நலனை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறுவது குறித்து கோலியும், ரோஹித்தும் முடிவு எடுப்பார்கள் என கம்பீர் தெரிவித்துள்ளார். 5ஆவது டெஸ்ட்டில் இருந்து விலகும் முடிவில், ஒரு கேப்டனாக ரோஹித் மெச்சூரிட்டி காட்டியதாகவும், ஆனால் அதைவிடுத்து சிலர் அர்த்தமற்ற விவாதங்களை கிளப்பியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அணிக்காகவே ரோஹித் அப்படி செய்ததாகவும் பாராட்டியுள்ளார்.
நாட்டின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கியான SBI, 80 வயதுக்கும் மேற்பட்டோருக்கு FD வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதாவது மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் வட்டியை விட 10 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டியை உயர்த்தியுள்ளது. இதேபோல், தனியார் வங்கியான எச்டிஎப்சியும் 5-10 அடிப்படை புள்ளிகள் வட்டியை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வட்டி, ரூ.5 கோடி, அதற்கும் மேல் டெபாசிட் செய்வோருக்கே பொருந்தும்.
Sorry, no posts matched your criteria.