India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இன்று அதிகாலையில் நடந்த விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பாலையம்பட்டி பகுதியில் அதிகாலை 5 மணியளவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 2 லாரி டிரைவர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Forex ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுகுமார், அவரது மனைவி அஸ்மிதா தன்னிடம் மோசடி செய்ததாக கூறி காவல் ஆணையரகத்தில் சந்திரசேகரன் என்பவர் புகாரளித்தார். இதனை விசாரித்த காவல்துறை விஷ்ணுகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விஷ்ணுகுமார் ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், தற்பொழுது ஆன்லைன் டிரேடிங் மூலம் சுமார் ₹1.62 கோடி மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைதாகியுள்ளார்.
இந்தியா – இங்கி., இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதனை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெல் அடித்து தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்புமிக்க இந்த மைதானத்தில் இவ்வாறு செய்வது மரபாக உள்ளது. 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் இந்தியா, இந்த டெஸ்ட்டை வெல்ல முனைப்பு காட்டும். எனவே, நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகிறது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் வரும் பக்தர்கள் மலையை சுற்றி 14 கி.மீ கிரிவலப்பாதையில் நடந்து கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் ஆனி மாதத்திற்கான பெளர்ணமி கிரிவலம் செல்ல 10-ம் தேதி அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி 11-ம் தேதி அதிகாலை 3.08 மணி வரை உகந்த நேரம் என்றும், இந்த நேரத்தில் கிரிவலம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விசிகவுக்கு தலித் அல்லாத சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளார். அந்தப் பட்டியலில் MLA-க்கள் SS பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. அதேபோல், கட்சியின் பொருளாளர் யூசுப் மறைந்த நிலையில், அந்த பதவிக்கும் ஒருவரைத் தீவிரமாக நியமிக்க தீவிரமாக யோசித்து வருகிறாராம். தற்போது, ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் பொதுச்செயலாளர்களாக உள்ளனர்.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், இதில் நடிப்பதற்கு ரஷ்மிகா மந்தனா ஆடிஷன் செய்யப்பட்டுள்ளாராம். இருப்பினும், இன்னும் படக்குழு முடிவெடுக்கவில்லையாம். ஏற்கெனவே இப்படத்தில் தீபிகா படுகோனே, மிருணாள் தாகூர் & ஜான்வி கபூர் இணைந்துள்ளதால், ரஷ்மிகாவும் சேர்ந்தால் 4 லீட் ஹீரோயின்கள் இருப்பர். இந்த காம்போ எப்படி இருக்கும்?
உங்களுக்கு கிடைக்கும் அன்பைவிட இந்த உலகிற்கு இன்னும் அதிகமான அன்பை திருப்பிக் கொடுங்கள். இதில், ஏமாற்றப்பட்டாலும் பரவாயில்லை. ஏமாந்து போவது, நீங்கள் அல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கோபம், வெறுப்பு, பொறாமை போன்றவற்றால் எதையும் சாதித்து விட முடியாது. முயன்றவரை யாரிடமும் கோபம் கொள்ளாமல், அனைவரிடமும் சிரித்து பேசி பழகி பாருங்கள். மகிழ்ச்சியின் தாரக மந்திரம் இதுவே!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஊரை ஏமாற்றும் திட்டம் என்று அன்புமணி விமர்சித்துள்ளார். பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களே இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், அதனுடன் மகளிர் உரிமைத்தொகையைச் சேர்த்து ஏமாற்றுவதாகவும் சாடியுள்ளார். எனவே, இவ்வாறு ஏமாற்றுவதை விடுத்து, சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேலை நேரத்தில் பலமுறை தூங்கியதும், பலமுறை விபத்து தவிர்க்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜின் சோம்பேறித்தனத்தால் பிஞ்சுகள் உதிர்ந்து போனது பெரும் வேதனை.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதுவரை இந்த மைதானத்தில் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில், 3-ல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. பும்ரா, ஆர்ச்சர் இன்று களமிறங்குவார்கள் எனக் கூறப்படும் நிலையில், பவுலிங் அனல் பறக்கும். இந்த டெஸ்டில் எந்த இந்திய வீரர் சதமடிப்பார் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வெல்லப்போவது யார்?
Sorry, no posts matched your criteria.