India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பதை ICMR உறுதி செய்துள்ளது. சீனாவில் அதிகளவில் பரவி வரும் இந்த வைரஸ், பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கும், 3 மாத பெண் குழந்தைக்கும் உறுதியாகியுள்ளது. ஆனால், இவ்விவகாரத்தில் திருப்பமாக தாய்க்கும், சேய்க்கும் வெளிநாட்டு தொடர்பு இல்லை. இருந்தும் இந்த வைரஸ் அவர்களுக்கு எப்படி பரவியது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருது ‘All we imagine as light’ படத்திற்காக பாயல் கபாடியாவிற்கு ஜஸ்ட் மிஸ் ஆனது. நடைபெற்று வரும் விருது விழாவில் The Brutalist படத்திற்காக பிராடி கார்பெட் விருதை வென்றுள்ளார். இது 2025 கோல்டன் குளோப்-இல் பயல் கபாடியாவிற்கு கைநழுவிய 2வது விருது இது. ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம் பிரிவிலும் ‘All we imagine as light’ படம் நாமினேட்டாகி தோல்வியடைந்தது.
ஜன.11ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அவையில், நாளை மன்மோகன் சிங், EVKS இளங்கோவனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்று கூறிய அவர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜன.8, 9, 10ல் விவாதம் நடக்கும் என்றார். இந்த விவாதத்திற்கு ஜன.11ல் CM பதிலுரை அளிப்பார் என்று கூறினார்.
ஏழைக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகள் வழங்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அடுத்த 6 ஆண்டுகளில் 8 லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலா ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் இந்த வீடுகள் கட்டப்படும். பிரதமர் ஊரக வீட்டுவசதி திட்டத்தில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.1 லட்சம்தான், ஆனால் மாநில அரசு ரூ.1.72 லட்சம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரை காற்றடித்த பலூன் போன்று இருப்பதை தவிர உள்ளே எதுவும் இல்லை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஆளுநர் உரையாக இல்லாமல், திமுகவின் சுய விளம்பரமாக சபாநாயகர் உரையாக மட்டுமே உள்ளதாகக் கூறிய அவர், ஆளுநர் புறக்கணித்துச் செல்லவில்லை, திட்டமிட்டு வெளியேற வைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் இல்லாமல், பேசியதையே திமுக திரும்ப பேசுவதாகவும் சாடியுள்ளார்.
*தமிழ்நாடு இதுவரையில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது *தமிழக மீனவர் பிரச்னைக்கு உடனே தீர்வு காண மத்திய அரசுக்கு வலியுறுத்தல் *தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் *கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் இதுவரை 4000 கிமீ சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுக்குள் 10 ஆயிரம் கிமீ கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.
ஆளுநர் பதவி குறித்து மாறுபட்ட கருத்து இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை அளிப்பதாக துரைமுருகன் விளக்கமளித்தார். ஆளுநர் இல்லாமல் கூட பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம். அவ்வாறு நாம் செய்யவில்லை என்று கூறிய அவர், ஆளுநர் பதவி உள்ளவரை அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளதாகவும் நெகிழ்ந்தார். மேலும், தேசிய கீதம், அரசமைப்பு மீது அரசு மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
5 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே உலுக்கியது. அதன் தாக்கம் மறைவதற்குள் சீனாவில் HMPV என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அது <<15077553>>இந்தியாவிற்குள்ளும் நுழைந்துள்ளது<<>>. இது நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம். மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். கைகளால் முகத்தை தொடாதீர்கள். கைகளை அவ்வப்போது சோப் போட்டு கழுவுங்கள். அடுத்தவருக்கு கை கொடுக்காதீர்கள். SHARE IT
தமிழக சட்டப்பேரவையில் 3வது ஆண்டாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையின்போது சர்ச்சை எழுந்து வருகிறது. 2023ல் அரசின் அறிக்கையில் இருந்த பெரியார், அண்ணா பெயர்களை படிக்காமல் ஆளுநர் தவிர்த்தார். 2024ல் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப் பட்டதாகக் கூறி உரையை முழுமையாக படிக்காமல் 3 நிமிடத்தில் அவையில் இருந்து வெளியேறினார். இந்தாண்டும், அதே காரணத்தை கூறி உரையை வாசிக்காமலேயே அவர் வெளியேறினார்.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதுகுறித்து Xல் விளக்கமளித்த ஆளுநர் மாளிகை, பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டதால் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியதாகவும் கூறியது. முதலில் பகிர்ந்த இப்பதிவை நீக்கிய ஆளுநர் மாளிகை பின், மோடி, அமித்ஷாவை Tag செய்து மீண்டும் பதிவிட்டது.
Sorry, no posts matched your criteria.