India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், மாநிலத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.91 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை கீழ்வேளூர் தொகுதியில் 1.76 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். அதேபோல், மாவட்ட அளவில் சென்னையில் 40.1 லட்சம் (40,15,878) வாக்காளர்களும், குறைந்தபட்சமாக அரியலூரில் 5.2 லட்சம் (5,28,691) வாக்காளர்களும் உள்ளனர்.
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 6.36 கோடி (6,36,12,950) ஆவார்கள். அதில் ஆண்கள் 3.11 கோடி (3,11,74,027), பெண்கள் 3.24 கோடி (3,24,29,803), 3ம் பாலினத்தவர் 9,120 ஆவார்கள். இதன் மூலம், ஆண்களை விட பெண் வாக்காளர்களே தமிழகத்தில் அதிமாக உள்ளது தெரியவந்துள்ளது.
செப்டிக் டேங்கில் இறந்துகிடந்த <<15078884>>செய்தியாளர் முகேஷ் சந்திரசேகர்<<>>, யூடியூப் மூலம் மாதம் ₹20,000 மட்டுமே லாபமாக ஈட்டி வந்துள்ளார். ₹2,200 வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்த அவர், மாவோஸ்ட்களின் அட்டகாசம், போலீசாரின் அடக்குமுறை ஆகியவை குறித்து செய்தி வெளியிட்டு வந்தார். அப்பகுதியில் ரோடு காண்ட்ராக்டில் ஊழல் நடந்ததாக செய்தி வெளியிட்டதால் இக்கொலை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.
இந்தியாவில் HMPV வைரஸ் தொற்றுக்கு 3வது கேஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெங்களூருவில் இரண்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குஜராத்தில் 2 மாத குழந்தைக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தற்போது அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் கொலை செய்யப்பட்ட <<15062164>>செய்தியாளர் முகேஷ் சந்திரகர்<<>> நரக வேதனையை அனுபவித்து இறந்ததாக உடற்கூராய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அவரது தலையில் 15 எலும்பு முறிவு, 4 நெஞ்சு எலும்பு முறிவு, கழுத்து எலும்பு முறிவு ஆகியவை இருந்துள்ளன. கல்லீரல் (Liver) 4 துண்டுகளாக இருந்துள்ளது. இருதயம் வெளியே பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொலையை பார்த்ததே இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
➥ டைம் பாஸாக அல்லாமல், உண்மையாக இணைந்திருக்க விரும்ப வேண்டும் ➥ துணையின் கட்டாயத்தின் பேரில் உறவில் இல்லாமல், ஹெல்தியானதாக இருக்க வேண்டும் ➥ இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும் ➥ நீங்கள் மட்டுமே இந்த உறவை நீடிக்க செய்ய முயலுகிறீர்கள் என தோன்றிட கூடாது ➥ எப்போதும் Dramaticஆக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவற்றிற்கு எதிர்மறையான சிந்தனை இருந்தால், அது Situationship மட்டுமே.
நடிகை ஹனிரோஸ் தனக்கு ஒருவர் தொல்லை கொடுப்பதாக பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். தொடர்ந்து அந்த பதிவில் ஆபாசமான கருத்திட்டவர்கள் மீது அவர் எர்ணாகுளம் போலீஸில் புகார் அளிக்க, 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஓராண்டு சிறை (அ) அபாரதம் விதிக்கும் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த கமெண்ட்களை கடந்து போகலாம் என்றாலும், சட்ட நடவடிக்கை எடுப்பது தேவையென கருதுவதாக ஹனிரோஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு கூட போராட்டம் நடத்த DMK அரசு அனுமதி கொடுப்பதில்லை என EPS குற்றஞ்சாட்டினார். கூட்டணிக் கட்சிகளுக்கே இந்த நிலை என்றால், எதிர்க்கட்சிகளின் நிலையை நினைத்து பாருங்கள் என்றார். ஒட்டுமொத்த இந்தியாவே யார் அந்த சார் என்று கேட்டு வருவதாக கூறிய அவர், நீதிமன்றம் தாமாக வழக்கை விசாரிக்கவில்லை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டுமென அதிமுகதான் வழக்கு தொடுத்ததாகவும் கூறினார்.
சாதாரண, சளி காய்ச்சல், மூச்சு திணறல் அறிகுறிகளையே HMPV வைரஸ் கொண்டிருக்கிறது. 2001ல் கண்டறியப்பட்ட இந்த வைரசுக்கு தனிப்பட்ட சிகிச்சையோ, மருந்தோ இல்லை. சில பரிந்துரைகள் முன் எச்சரிக்கையாக வழங்கப்படுகிறது. காய்ச்சல் – சளிக்கான மருத்துவம் எடுப்பது, உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுதல், ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. அறிகுறிகள் பல நாள்கள் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
HMPV தொற்று இந்தியாவிலும் உறுதிப்படுத்தப் பட்டதாகத் தொடர்ந்து மீண்டும் லாக்-டவுன் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2020ஆம் ஆண்டு லாக்-டவுன் மூலம் ஏற்பட்ட பாதிப்பு உலகம் முழுவதும் கடுமையாக இருந்தது. இதனையடுத்து, 2021ஆம் ஆண்டு கோவிட் இரண்டாவது அலையின்போது முழு லாக்-டவுன் இல்லாமல் பெருந்தொற்று எதிர்கொள்ளப்பட்டது. ஆகையால், HMPV பரவினால் அதன் தீவிரத்தை பொறுத்தே லாக்-டவுன் தொடர்பான முடிவு எடுக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.