News January 7, 2025

விரைவில் வெள்ளிக்கும் ஹால்மார்க் குறியீடு!

image

தங்கத்தைப் போன்று வெள்ளிக்கும் ஹால்மார்க் குறியீட்டை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. வெள்ளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அதன் தூய்மை தன்மையை உறுதி செய்வது அவசியமாகிறது. அதன்படி, வெள்ளிக்கும் ஹால்மார்க் கொண்டு வர வேண்டும் என்று நுகர்வோர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

ஜனவரி 7: வரலாற்றில் இன்று

image

*1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயில் அழிந்தது *1782 – USAஇன் முதல் வர்த்தக வங்கியான வட அமெரிக்க வங்கி திறப்பு *1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதல் தொலைபேசி செய்தி நியூயார்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையே அனுப்பப்பட்டது. 1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய அரசை USA அங்கீகரித்தது *1953 – இயக்குநர் பாக்கியராஜ் பிறந்தார் *1980 – இந்தியாவின் ஆட்சி மீண்டும் இந்திரா காந்தி கைவசம் வந்தது

News January 7, 2025

எங்ககிட்ட NOC இருக்கு: நயன் தரப்பு விளக்கம்

image

‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள சிவாஜி புரொடெக்‌ஷன் தயாரிப்பு நிறுவனம் NOC கொடுத்துள்ளதாக நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதற்காக நயன்தாராவிடம் ₹5 கோடி நஷ்ட‌ஈடு கேட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில், உரிய அனுமதி பெற்றுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2025

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியது ஏன்?

image

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கனடாவில் நிலவும் பணவீக்கம், வீட்டுவசதி பிரச்னை, அதிகரிக்கும் அரசின் கடன், சுகாதார சீர்கேடு என ட்ரூடோ மீது அதிருப்தி இருந்த நிலையில், சீக்கிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, இந்தியாவை பகைத்துக் கொண்டது அவரது செல்வாக்கை குறைத்துவிட்டது. அதிக வரிவிதிப்பேன் என்ற டிரம்பின் மிரட்டலும் ட்ரூடோவை நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டது.

News January 7, 2025

அரிஸ்டாட்டிலின் மிகச்சிறந்த பொன்மொழிகள்!

image

*தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன் என்று நான் எண்ணுகிறேன். *அனுபவம் வாய்ந்த இளைஞர்கள் என்று யாருமே இல்லை. காலமே அனுபவத்தை உருவாக்குகிறது. *புத்திசாலிகளைப் போல சிந்தியுங்கள், ஆனால் சாதாரண நபர்களைப் போல பேசுங்கள். *அமைதி போரை விட மிகவும் கடினமானது. *இயற்கை ஒரு நோக்கம் இல்லாமல் எதையுமே உருவாக்காது. *உடலை குணப்படுத்த முதலில் மனதைக் குணப்படுத்த வேண்டும்.

News January 7, 2025

நீண்டகாலம் வாழ ஆசைப்படுபவர்களா நீங்கள்..

image

நீண்டகாலம் வாழ வேண்டும் என நினைப்பவர்கள், இந்தப் பழக்கங்களை மட்டும் கடைபிடித்தாலே போதும் என்கின்றனர் டாக்டர்கள். 1) மட்டன், பீஃப் போன்றவற்றுக்கு பதிலாக மீனை சேர்த்துக் கொள்ளுங்கள். 2) பச்சைக் காய்கறிகள், பழங்களை ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். 3) தினமும் வாக்கிங், ஜாகிங் செல்லுங்கள். 3) குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் நேரம் செலவழிப்பதும் நீண்டகாலம் வாழ வழிவகுக்கிறதாம்.

News January 7, 2025

வலிமையோடு மீண்டு வருவோம்: ஜெய்ஸ்வால்

image

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸி., இடையிலான BGT டெஸ்ட் தொடரை AUS அணி வென்றது. இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், துரதிருஷ்டவசமாக நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், நாங்கள் வலிமையாக மீண்டு வருவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News January 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 141 ▶குறள்: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். ▶பொருள்: பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

News January 7, 2025

பாகுபலி-2 சாதனையை முறியடித்த மகாராஜா

image

சீனாவில் வெளியான மகாராஜா படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. பாகுபலி -2 படம் ரூ.80 கோடி வசூலித்து இருந்த நிலையில், தற்போது ரூ.90 கோடி தாண்டி, மகாராஜா அதை முறியடித்துள்ளது. அப்பா- மகள் சென்டிமென்ட், சீனர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் மகாராஜா இணையும். சீனாவில் அதிகம் வசூலித்த இந்திய படங்களில் ரூ.1480 கோடி வசூலித்த டங்கல் படம் முதல் இடத்தில் உள்ளது.

News January 7, 2025

சிறுவனை ரகசியமாக சந்திக்க அல்லு அர்ஜுனுக்கு அனுமதி

image

சிறுவன் ஸ்ரீதேஜ்ஜை சந்திக்க அல்லு அர்ஜுனுக்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ‘புஷ்பா 2’ படம் பார்க்க சென்றபோது கூட்டணி நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த சிறுவனை சந்திக்க அவர் அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில், ஆஸ்பிட்டலுக்கு ரகசியமாக சென்று வர வேண்டுமென்ற நிபந்தனையுடன் சிக்கடப்பள்ளி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். அசம்பாவிதம் நடந்தால் அதற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!