News January 7, 2025

ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளம்பெண்

image

குஜராத் மாநிலம் கஞ்ச் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் அப்பெண்ணை மீட்க போராடி வருகின்றனர். தற்போது அவருக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், ராஜஸ்தானில் 700அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை 9 நாட்கள் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டும், உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News January 7, 2025

பான் கார்டு இல்லாமல் CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி?

image

CIBIL ஸ்கோரை பான் கார்டு இல்லாமலே ஆன்லைனில் பார்க்கலாம். சிபில் இணையதளத்தில் ‘Personal CIBIL Score’ஐ தேர்வு செய்யவும். ‘Get your free CIBIL score’ஐ கிளிக் செய்யவும். சிபில் இணையதளத்தில் கணக்கு இல்லை என்றால் பாஸ்போர்ட், Voter ID ஏதேனும் ஒன்றை கொடுத்து அக்கவுண்டை ஆரம்பிக்கலாம். மற்ற விவரங்களை நிரப்பி Submit செய்தால் கணக்கு உருவாகிவிடும். பின்னர் சிபில் இணையதளத்தில் ஸ்கோரை செக் செய்யலாம். SHARE IT.

News January 7, 2025

கங்கை அமரன் மீண்டும் ஹாஸ்பிட்டலில் அனுமதி

image

இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5ம் தேதி சிவகங்கை அருகே படப்பிடிப்பில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் உடல்நலம் சரிவராததால் மதுரையில் உள்ள ஹாஸ்பிட்டலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News January 7, 2025

போஸ்டர் ஒன்னு ஆனால் டார்கெட் மூனு

image

கவர்னரை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில் சென்னையில் #GetoutRavi என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “தமிழ்நாட்டில் அத்துமீறும் கவர்னர், அவரைக் காப்பாற்றும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணி” என இபிஎஸ், அண்ணாமலைக்கு கவர்னர் கட்டளையிடுவது போன்ற போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. இதனை பகிரும் திமுகவினர் போஸ்டர் ஒன்னு தான் ஆனா டார்கெட் மூனு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

News January 7, 2025

உலகின் மிக மோசமான பெருந்தொற்றுகள்

image

Black Death – 20 கோடி பேர் மரணம்
எய்ட்ஸ் – 3.6 கோடி பேர் மரணம்
ஃப்ளூ – 5 கோடி பேர் மரணம்
ஜஸ்டினியன் ப்ளேக் – 2.5 கோடி
கொரோனா – 2.1 கோடி
அந்தோனின் ப்ளேக் – 50 லட்சம் மரணம்
ஆசிய ஃப்ளூ – 20 லட்சம்
காலரா – 10 லட்சம்
ரஷ்ய ஃப்ளூ – 10 லட்சம்
ஹாங்காங் ஃப்ளூ – 10 லட்சம்

News January 7, 2025

BREAKING: நேபாளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

இன்று காலை நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கத்தால் டெல்லி, பீகார் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம், சீனா, பங்களாதேஷ், பூடான் பகுதிகளிலும் எதிரொலித்தது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.

News January 7, 2025

ரியல் ஜோடியான ரீல் ஸ்பைடர் மேன் Love Birds

image

ஸ்பைடர் மேனில் ஒன்றாக நடித்து டாம் ஹாலண்ட் – ஜெண்டயா ஜோடிக்கு நிச்சயம் நடந்துள்ளது. 2021ல் காதலிப்பதை இருவருமே உறுதி செய்த நிலையில், தற்போது தம்பதிகளாக மாறியுள்ளார்கள். கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் ஜெண்டயா கையில் இருந்த மோதிரம் அவர்களின் நிச்சயத்தின் போது, டாம் ஹாலண்ட் அளித்தது எனப்படுகிறது. நெட்டிசன்கள் இறுதியில், ஸ்பைடர் மேன் ‘MJ’ உடன் சேர்ந்தாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

News January 7, 2025

ஏற்கெனவே உள்ளதுதானா HMPV வைரஸ்?

image

HMPV வைரஸ் என்பது சீனாவில் இருந்து பரவுவது இல்லை என்றும் 2001ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது இந்தியாவில் கண்டறியப்படும் HMPV வகை வைரஸ்கள் சீன வகையை சேர்ந்ததா, அல்லது ஏற்கெனவே உள்ளதா என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஆனால், அச்சம் ஏற்படுத்தும் வகையிலான தொற்றுத் தாக்குதல் ஏற்படவில்லை என்று மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

News January 7, 2025

மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா?

image

உங்கள் வீடு, வணிக வளாகங்களின் கரண்ட் பில், மொபைல் போனுக்கு மெசேஜ் வருவதில்லையா? இனி கவலையை விடுங்க.. EB ஆபிஸ்க்கு நேரில் போகாமல் உங்கள் மின் இணைப்பு எண்ணை மட்டும் வைத்து Online மூலம் மொபைல் எண் சேர்ப்பு, மாற்றும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து ஒரு நிமிடத்தில் ஈஸியா உங்க நம்பரை மாத்திக்கோங்க. மற்றவர்களுக்கும் இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..

News January 7, 2025

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை?

image

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் மாதம் ₹1,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தில் 1.66 கோடி மகளிர் விண்ணப்பித்திருந்த நிலையில், நிபந்தனைகள் அடிப்படையில் 1.15 கோடி பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், முதல்வர் பிறந்தநாளான மார்ச் 1ஆம் தேதி முதல் அனைவருக்கும் மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!