News January 8, 2025

ராசி பலன்கள் (08-01-2025)

image

➤மேஷம் – பொறுமை ➤ ரிஷபம் – அன்பு ➤மிதுனம் – போட்டி ➤கடகம் – அச்சம் ➤சிம்மம் – வெற்றி ➤கன்னி – ஆதரவு ➤துலாம் – தனம் ➤விருச்சிகம் – நிம்மதி ➤தனுசு – கவனம் ➤மகரம் – உற்சாகம் ➤கும்பம் – பிரீதி ➤மீனம் – ஆக்கம்.

News January 8, 2025

திமுகவினர் பள்ளிகளில் இந்தி : வானதி தாக்கு

image

திமுகவினர் இந்தி சொல்லித் தரும் சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்திவிட்டு, அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் இந்தி படிக்கக்கூடாது என்பதுதான் சமூக நீதியா என்று வானதி வினவியுள்ளார். அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர் ஏன் குழந்தைகளை அனுப்ப மறுக்கிறார்கள். அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் பெருக காரணம் என்ன?, நல்ல தரமான கல்வியை 12ஆம் வகுப்பு வரை திமுக அரசு ஏன் தரவில்லை என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

News January 7, 2025

சாம்சனுக்காக களத்தில் இறங்கிய ரசிகர்கள்

image

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரியில் தொடங்க உள்ளது. இதில் IND அணியின் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகின. அதில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. அதனால், அவரை அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். சமீபத்தில் நடந்த SAக்கு எதிரான டி20யில், அவர் சிறப்பாக விளையாடியதால் ரசிகர்கள் இப்படி செய்து வருகின்றனர்.

News January 7, 2025

அரசு நிலத்தில் கட்சிக் கொடி ஏன்? உயர் நீதிமன்றம்

image

அரசு நிலத்தில் உள்ள கட்சிக்கொடிகளை அகற்ற விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது. கட்சி நிர்வாகிகள்,
தங்கள் சொந்த இடத்தில் கட்சிக்கொடிகளை அமைத்துக் கொள்ளுமாறும், அரசுக்கு சொந்தமான இடத்தில் கொடிக்கம்பங்களை வைப்பதை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளது. தற்போது உள்ள இணைய உலகில் பொது இடத்தில் கட்சிக்கொடிகள் தேவையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

News January 7, 2025

8 ஆண்டுகளுக்கு பின் இலங்கை செல்லும் பிரதமர்

image

பிரதமர் மோடி விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக இந்திய தூதரக அதிகாரி சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். பயணத்திற்கான தேதி குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை அதிபர் விரைவில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதால், தேதி அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடைசியாக கடந்த 2017ல் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

News January 7, 2025

ஆச்சரியம்: இவங்க ஆணா, பெண்ணா?

image

சீனாவில் லியூ (59) என்ற அதிசய மனிதர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஆண், பெண் என 2 பிறப்பு உறுப்புகளும் உள்ளன. 18 வயதில் திருமணமான போது, கர்ப்பம் தரித்து முதல் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து அவருக்கு தாடி, மீசை முளைத்தது. அதன்பின், ஆணாக வாழத் தொடங்கிய அவர், சோஹூ என்ற பெண்ணை மணம் முடித்து ஆண் குழந்தைக்கு தந்தையானார். ANDROGENIC ஹார்மோன்களின் அதிகளவு சுரப்பே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

News January 7, 2025

நாளை KGF ஹீரோவின் அடுத்த பட அப்டேட்

image

KGF ஹீரோ யஷ் நடித்து வரும் ‘டாக்ஸிக்’ படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. யஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை காலை 10.25 மணிக்கு அப்டேட் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் படத்தின் ரிலீஸ் தேதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிவின் பாலியை வைத்து மலையாளத்தில் படங்களை இயக்கிய கீது மோகன்தாஸ், இப்படத்தை இயக்குகிறார்.

News January 7, 2025

பொங்கலன்று மனுத்தாக்கல் இல்லை

image

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு பொங்கல் நாளில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறாது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். ஜனவரி 10, 13, 17ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்றும், கடந்த இடைத்தேர்தல் போலவே, இந்த முறையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்திய துணை ராணுவப்படை வேண்டும். பணப்பட்டுவாடா நடந்தால் பொதுமக்கள் உடனே புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

News January 7, 2025

கனடா PM ரேஸில் TN வம்சாவளி: யார் இந்த அனிதா ஆனந்த்?

image

கனடாவின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவுகிறது. ஏறத்தாழ 8 பேர் PM ரேஸில் உள்ள நிலையில், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட அனிதா ஆனந்துக்கு (57), பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உள்நாட்டு வர்த்தக, போக்குவரத்து அமைச்சராக உள்ள அவர், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அமெரிக்காவில் ஒரு கமலா ஹாரிஸ் என்றால், கனடாவில் அனிதா ஆனந்த். வாய்ப்பு கிடைக்குமா?

News January 7, 2025

Airtel, BSNL, Jio, Vi கஸ்டமர்களுக்கு HAPPY NEWS

image

TRAI அமைப்பு, அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களுக்கும் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி, வாய்ஸ் காலிங், SMS, டேட்டா ஆகிய வெவ்வேறு சேவைகளுக்கு தனித்தனியே திட்டங்களை நிறுவனங்கள் அறிவிக்கலாம். கஸ்டமர்களுக்கு என்ன சேவை தேவையோ, அதை மட்டும் அவர்கள் பயன்படுத்தும் வகையில் பேக்கேஜ்களை நிறுவனங்கள் வழங்க வேண்டும். இதனால், வாடிக்கையாளர்களின் செலவு குறையும்.

error: Content is protected !!